இல்லம் தேடிக் கல்வி :

கொரோனா தொற்று காரணமாக பரவல் காரணமாக பள்ளிகள் 1 1/2 ஆண்டுகளுக்கு மேலாக மூடியிருந்ததால் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய தமிழக அரசு இல்லம் தேடிக்கல்வித் திட்டத்தை செயல்படுத்திவருகிறது. பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் இல்லம் தேடிக்கல்வி மையங்களில் தினமும் (1 1/2 மணி நேரம் ) மாலை 05.00 மணி முதல் 06.30 மணி வரை மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டம் முதற்கட்டமாக நவம்பர் 26, 2021 அன்று 12 மாவட்டங்களில் துவங்கப்பட்டது. ஜனவரி 1 2022 முதல் இதர மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட்டது. 

இத்திட்டத்தின் சிறப்பம்சம் இல்லம் தேடிக்கல்வி மையங்களில் நடைமுறைபடுத்தப்பட்டடுள்ள கற்றல் அணுகுமுறையே ஆகும். இங்கு சூழல் சார்ந்த மற்றும் குழந்தைகள் எளிமையாக பங்கேற்கும் வகையில் செயல்வழிக்கற்றல் முறை பின்பற்றப்படுகிறது. 

போன்றவை மூலம் கற்பிக்கப்படுகிறது. மாணவர்களின் கற்றல் நிலைகளைத் தெரிந்து கொள்வதற்காக "கைப்பேசி செயலி" மூலம் மதிப்பீடு செய்யும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.  

எண்ணும் எழுத்தும் : 

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் அனைத்துக் குழந்தைகளும் 2025-ஆம் ஆண்டிற்குள் 

ஆகியனவற்றை உறுதி செய்வதே இவ்வியக்கத்தின் முக்கியக் குறிக்கோளாக உள்ளது. இத்திட்டம் 13.06.2022 அன்று தொடங்கப்பட்டது. 

நான் முதல்வன் திட்டம் : 

தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையில் வெற்றி பெரும் வகையில் நான் முதல்வன் என்ற திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மார்ச் 1, 2022 அன்று தொடங்கப்பட்டது. 

திட்டத்தின் சிறப்பம்சங்கள் :-

தகைசால் பள்ளிகள்  ( School of Excellence )  :  

டெல்லி அரசால் நடத்தப்படும் மாதிரிப்பள்ளிகளை போல் தமிழகத்தில் 150 கோடி செலவில்  25 மாநகராட்சிப் பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டள்ளது. ( மார்ச் 1 2022 )

இப்பள்ளிகளின் கட்டிடங்கள் நவீனமயமாக்கப்படும். மேலும் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதுடன் கலை, இலக்கியம், இசை, நடனம், செயல்முறை அறிவியல், விளையாட்டு, கைவினைச் செயல்பாடுகள் என அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய கட்டமைப்பு இப்பள்ளியில் உருவாக்கப்படும். படிப்புடன் சேர்ந்து மாணவர்களின் தனித்திறன்கள் அனைத்தும் வளர்த்தெடுக்கம்படியாக இத்திட்டம் அமைந்துள்ளது.  


இளந்தளிர் இலக்கியத் திட்டம்  :  

குழந்தைகளின் பேச்சாற்நல், எழுத்தாற்றல், ஓவியம் தீட்டும் ஆற்றல் போன்ற படைப்பாற்றலை ஊக்குவிக்கவும், நன்னெறி மற்றும் அறம் சார்ந்த சமூக விழுமியங்களை வளர்க்கவும் இளந்தளிர் இலக்கியத்திட்டம் ( 26 ஆகஸ்ட் 2021 ) செயல்படுத்தப்படுகின்றது. முதல் கட்டமாக 100 இலக்கிய நூல்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்படவுள்ளன. 


குழந்தை எழுத்தாளர்களுக்குக் கவிமணி விருது  :  

குழந்தைகளின் எழுத்தர்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் 18 வயதிற்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்களில் 3 சிறந்த எழுத்தாளர்களை தேர்வு செய்து ரூ. 25,000 ரொக்கம், சான்றிதழ், கேடயத்துடன் கவிமணி விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ( 26 ஆகஸ்ட் 2021 )