பள்ளிக்கல்வித்துறை அண்மையில் வெளியிட்ட அறிவிப்புகள் சில . . .

தமிழக பள்ளிக்கல்வி வரலாற்றுப்பின்னணி :-

பலர் கூடி விவாதிக்கும் அமைப்புக்கு சங்கம் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டது. 

அறங்கூர் அவையம், 

சமணப்பள்ளி, 

பௌத்தப்பள்ளி 

போன்ற அமைப்புகள் சங்க காலத்திலும் சங்க மருவிய காலத்திலும் செயல்பட்டு வந்தன. 

சமண சமயத்தை சேர்ந்த திகம்பரத்துறவிகள் தங்கள் தங்குமிடங்களிலேயே கல்வியையும், சமய கருத்துகளையும் கற்றுக்கொடுத்தனர்.  பள்ளி என்ற சொல்லுக்கு படுக்கை என்று பொருள். அவர்களின் படுக்கையின் மீது மாணவர்கள் அமர்ந்து கற்றதனால் பள்ளிக்கூடம் என அழைக்கப்படுகிறது. 

19 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கிராமங்கள் தோறும் பெருமளவு திண்னைப் பள்ளிகள் இருந்தன. அவற்றை தெற்றுப்பள்ளிகள் என்றும் அழைத்தனர். 

எட்டாக்கனி :-

ஆங்கிலேயர் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னர் கல்வி தனியார் வசமிருந்தது. ஒரு சிலருக்கு மட்டுமே கல்வி வசதி கிடைத்தது. மிகப் பெரும்பான்மையினருக்கு கல்வியின் பயன் கிட்டவில்லை. பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் கல்வி வட்டத்துக்கு வெளியே ஒதுக்கப்பட்டனர். எண்ணும் எழுத்தும் இவர்களுக்கு எட்டாக் கனிகள் !  இந்த அவல நிலை 1813 ஆம் ஆண்டு வரை நீடித்தது. இதே ஆண்டு சாசனச் சட்டப்படி லண்டன் பாரளுமன்றம் இந்தியாவின் கல்விக்கு ஒரு லட்சம் ரூபாய்  ஒதுக்கியது. 

மன்றோவின் ஆய்வு :-

இந்தியாவிற்கு வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியார் கல்வியின் பயன் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டனர். குறிப்பாக சென்னை ராஜதானி ஆளுநராயிருந்த சர் தாமஸ் மன்றோ முதன் முதலில் 1822 ஆம் ஆண்டு ஒரு ஆய்வை மேற்கொண்டார். 

மாவட்ட ஆட்சியர்களைக்  கொண்டு  திரட்டப்பட்ட தகவல்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் தமிழ்நாட்டில் நிலவிய கல்விநிலை பற்றிக் குறிப்பிடப்பிட்டிருந்தவை

தமிழ்நாட்டில் அறிவியல் ரீதியாக மேற்கொள்ளப்பட்ட முதல் கல்வி ஆய்வு இதுவேயாகும்.  

கல்விக்குறிப்பு :-

சென்னை ராஜதானியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் தாமஸ் மன்றோ ஒரு வரலாற்றுச் சிறப்புடைய குறிப்பைத் தயாரித்தார்.  இக்குறிப்பில்  மூன்று முக்கியப் பரிந்துரைகள்  செய்யப்பட்டிருந்தன. 

இப்பரிந்துரைகளின் பேரில் சென்னை ராஜதானியில் 1826 ஆம் ஆண்டு பொதுக் கல்வி போர்டு ( Board of Public Instruction )  உருவாக்கப்பட்டது. இதுவே கல்வித்துறையின் துவக்கமாகும். 

விரிவான கல்வித் திட்டம் :-

1854 ஆம் ஆண்டு சர் சார்லஸ் உட் தலைமை ஆளுநர் டல்ஹெசி பிரபுவின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு அகல் விரிவான கல்வித்திட்டத்தை தயாரித்தார்.  இத்திட்டத்தில் பல புரட்சிகரமான பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன. இப்பரிந்துரைகளின்படி சென்னை அரசாங்கம் பொதுக் கல்வித்துறை (Department of Public Instruction) யைத் தோற்றுவித்தது. 

பொதுக் கல்வித்துறை :-

சென்னை ராஜதானியில் பொதுக்கல்வித்துறை துவங்கப்பட்ட பின் பள்ளிகளுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டன. பள்ளிகளுக்கு மாணியம்  வழங்குதவற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

1855 இல் பள்ளிகளுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன. 1881 ஆம் ஆண்டில் மிகப் பெரும்பான்மையான பள்ளிகள் அரசாங்க உதவி பெறும் பள்ளிகள் ஆயின. அதவாவது தமிழ்நாட்டில் ஒரு சிலருக்கு மட்டுமே பயன்பட்டுவந்த தனியார் பள்ளிகளுக்கு பதில் அரசு பொதுப் பள்ளிகள் திறக்கப்பட்டன. கல்வி புரட்சிக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. 

கல்வி அங்கீகாரம்  :-

தல போர்டுகள் சட்ட ( Local Board Act, 1871 ) த்தின்படி 

தல போர்டுகள் பள்ளிகளைத் திறக்கவும், 

அப்பள்ளிகளுக்கான அரசு மானியம் பெறுவதற்கும் உரிய அதிகாரங்கள் அளிக்கப்பட்டது. 

1920 இல் சென்னை துவக்கக்கல்விச் சட்டம் இயற்றப்பட்டது. 

இச்சட்டத்தின்படி தல நிறுவனங்கள் துவக்கக் கல்வி வளர்ச்சிக்காக நலத் தீர்வையோ, சொத்து வரியோ விதிப்பதற்கான அதிகாரத்தைப் பெற்றன. அது மட்டுமல்ல துவக்கக்கல்வி, மாவட்ட போர்டுகளிலிருந்து தாலுகாக போர்டுகளுக்கும், நகராட்சி மன்றங்களுக்கும் மாற்றப்பட்டது.  அதே போன்று துவக்கப்பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் அதிகாரம் மாவட்ட கல்வி மன்றங்களுக்க மாற்றப்பட்டது. 

1939 இல் மாவட்ட போர்டுகள் கலைக்கப்பட்டதால் துவக்கப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரம் மீண்டும் கல்வித் துறையிடமே ஒப்படைக்கப்பட்டது. 

வரலாற்று நிகழ்வுகள்   :-

இல்லம் தேடிக்கல்வித் திட்டம் (26.09.2021 )

நான் முதல்வன் திட்டம்  (01.03.2022)

நம் பள்ளி நம் பெருமை திட்டம்  (19.04.2022 )

எண்ணும் எழுத்தும் திட்டம் (13.03.2022) 

இளந்தளிர் இலக்கியத் திட்டம்  & குழந்தை எழுத்தாளர்களுக்குக் கவிமணி விருது வழங்குதல் ( 26.08.2021)