நூலின் பெயர்: ஆபஸ்தம்ப³-ஶ்ரௌதஸூத்ரம் (1-4 ப்ரஶ்நங்கள்)
தொகுத்தவர்: மஹாமஹோபாத்⁴யாய ப்³ரம்ஹஶ்ரீ மௌத்³க³ல ஸுந்த³ரராம-வாஜபேயயாஜீ
ப்³ரம்ஹஶ்ரீ நாராயணவாஜபேயயாஜீ
வெளியிட்ட வருடம்: கல்யப்³த³꞉ 5119 (த்³ருʼக்) ஹேமலம்ப³நாமஸம்ʼவத்ஸர꞉ ஸிம்ஹமாஸ: (2017 September)
எல்லா யஜ்ஞங்களுக்கு முதன்மையானதும், ஒவ்வொரு பௌர்ணமீ-ப்ரதமா, அமாவாஸ்யா-ப்ரதமா தினங்களில் செய்ய வேண்டியதுமான த³ர்ஶபூர்ணமாஸ-இஷ்டி: (दर्शपूर्णमास-इष्टिः) எனும் யஜ்ஞத்தை வர்ணிக்கும் 1 முதல் 4 வரையிலான ப்ரஶ்நங்கள் உள்ளன.
528 பக்கங்கள் கொண்ட இப்பகுதி தூ⁴ர்த்தஸ்வாமி-பா⁴ஷ்யம், ராமாண்டா³ர்-வ்ருʼத்தி, ருத்³ரத³த்த-வ்ருʼத்தி ஆகியவற்றை உள்ளடக்கியது.
இந்த பகுதியினுடைய யாஜ்ஞிகஸர்வஸ்வம் மற்றும் சௌட³பா³சார்யருடைய ப்ரயோக³ரத்நமாலா வ்யாக்யாநங்கள் இருப்பினும் புஸ்தகத்தின் அளவைக் கருதி இதில் சேர்க்கப்படவில்லை.
நூலின் பெயர்: ஆபஸ்தம்ப³-ஶ்ரௌதஸூத்ரம் (10 மற்றும் 11 ப்ரஶ்நங்கள்)
தொகுத்தவர்: மஹாமஹோபாத்⁴யாய ப்³ரம்ஹஶ்ரீ மௌத்³க³ல ஸுந்த³ரராம-வாஜபேயயாஜீ
ப்³ரம்ஹஶ்ரீ நாராயணவாஜபேயயாஜீ
வெளியிட்ட வருடம்: கல்யப்³த³꞉ 5115 (த்³ருʼக்) விஜயநாமஸம்ʼவத்ஸர꞉ மகரமாஸ꞉ (2014 January)
இதில் ஸங்கல்பம் முதல் ஔபவஸத்²ய-தி³நம் (औपवसथ्य-दिनम्) (யாக தினத்திற்கு முதல் நாள்) வரையிலான ப்ரயோகத்தை வர்ணிக்கும் 10 மற்றும் 11 ப்ரஶ்நங்கள் உள்ளன.
512 பக்கங்கள் கொண்ட இப்பகுதி தூ⁴ர்த்தஸ்வாமி-பா⁴ஷ்யம், ராமாண்டா³ர்-வ்ருʼத்தி, ருத்³ரத³த்த-வ்ருʼத்தி மற்றும் யாஜ்ஞிக ஸர்வஸ்வம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
நூலின் பெயர்: ஆபஸ்தம்ப³-ஶ்ரௌதஸூத்ரம் (12 மற்றும் 13 ப்ரஶ்நங்கள்)
தொகுத்தவர்: மஹாமஹோபாத்⁴யாய ப்³ரம்ஹஶ்ரீ மௌத்³க³ல ஸுந்த³ரராம-வாஜபேயயாஜீ
ப்³ரம்ஹஶ்ரீ நாராயணவாஜபேயயாஜீ
வெளியிட்ட வருடம்: கல்யப்³த³꞉ 5116 (த்³ருʼக்) ஜயநாமஸம்ʼவத்ஸர꞉ சைத்ரமாஸ꞉ (2014 April)
இதில் அக்நிஷ்டோம ஸோம யாகத்தில் ஸகல தேவதைகளையும் ருக்-வேதத்தினால் அழைத்து, ஸாமவேதத்தினால் துதித்து, யஜுர்வேதத்தினால் ஹவிர்பாகம் கொடுக்கும் தினமான ஸுத்யாஹஸ் என்று சொல்லப்படும் நாளில் செய்ய வேண்டிய முறைகள் யாவையும் வர்ணிக்கும் 12 மற்றும் 13 ப்ரஶ்நங்கள் உள்ளன.
528 பக்கங்கள் கொண்ட இப்பகுதி தூ⁴ர்த்தஸ்வாமி-பா⁴ஷ்யம், ராமாண்டா³ர்-வ்ருʼத்தி, ருத்³ரத³த்த-வ்ருʼத்தி மற்றும் யாஜ்ஞிக ஸர்வஸ்வம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
நூலின் பெயர்: ஆபஸ்தம்ப³-ஶ்ரௌதஸூத்ரம் (14 மற்றும் 15 ப்ரஶ்நங்கள்)
தொகுத்தவர்: மஹாமஹோபாத்⁴யாய ப்³ரம்ஹஶ்ரீ மௌத்³க³ல ஸுந்த³ரராம-வாஜபேயயாஜீ
ப்³ரம்ஹஶ்ரீ நாராயணவாஜபேயயாஜீ
வெளியிட்ட வருடம்: கல்யப்³த³꞉ 5116 (த்³ருʼக்) ஜயநாமஸம்ʼவத்ஸர꞉ ஆஷாட⁴மாஸ꞉ (2014 August)
14ம் ப்ரஶ்நத்தில் வாஜபேயம் (वाजपेयः) தவிர்த்த மற்ற ஸோம ஸம்ஸ்தைகள் (सोमसंस्थाः) - அதாவது
அத்யக்³நிஷ்டோமம் (अत्यग्निष्टोमम्)
உக்த்²யம் (उक्थ्यम्)
ஷோட³ஶீ (षोडशी)
அதிராத்ர꞉ (अतिरात्रः)
அப்³தோ³ர்யாம꞉ (अब्दोर्यामः)
ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன.
இதில் ஸோம-ப்ராயஶ்சித்தங்களும் சொல்லப்பட்டுள்ளன.
15ம் ப்ரஶ்நத்தில் அனைத்து ஸோம ஸம்ஸ்தைகளுக்கும் பொதுவான
ப்ரவர்க்³யம் (प्रवर्ग्यम्)
அதன் ப்ராயஶ்சித்தங்கள் (प्रायश्चित्तानि)
அதனை அத்⁴யயநம் செய்யும் முறை (अध्ययनविधिः)
விளக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் தர்ஶபூர்ணமாஸம் முதல் மஹாக்நிசயநம் (கருடசயநம்) வரையிலான முழு ஆபஸ்தம்ப ஶ்ரௌத ப்ரயோகத்தையும் விவரிப்பதான வாஸுதேவ தீக்ஷிதர் இயற்றிய 2000 காரிகைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
560 பக்கங்கள் கொண்ட இப்பகுதி தூ⁴ர்த்தஸ்வாமி-பா⁴ஷ்யம், ருத்³ரத³த்த-வ்ருʼத்தி மற்றும் யாஜ்ஞிக ஸர்வஸ்வம் ஆகியவற்றை உள்ளடக்கியது. (இப்பகுதிக்கு ராமாண்டா³ர்-வ்ருʼத்தி கிடைக்கவில்லை).
நூலின் பெயர்: ஆபஸ்தம்ப³-ஶ்ரௌதஸூத்ரம் (12 மற்றும் 13 ப்ரஶ்நங்கள்)
தொகுத்தவர்: மஹாமஹோபாத்⁴யாய ப்³ரம்ஹஶ்ரீ மௌத்³க³ல ஸுந்த³ரராம-வாஜபேயயாஜீ
ப்³ரம்ஹஶ்ரீ நாராயணவாஜபேயயாஜீ
வெளியிட்ட வருடம்: கல்யப்³த³꞉ 5116 (த்³ருʼக்)
மந்மத²நாமஸம்ʼவத்ஸர꞉ சைத்ரமாஸ꞉ (2015 August)
16, 17, 18, 19 ஆகிய நான்கு ப்ரஶ்நங்களில்
அக்நி சயனம்,
வாஜபேயம்,
ராஜஸூயம்
காம்ய இஷ்டிகள் (பலவிதமான லௌகிக ஆசைகளை நிறைவேற்றவல்லவை)
கூறப்பட்டுள்ளன.
590 பக்கங்கள் கொண்ட இப்பகுதி கபர்தி³ஸ்வாமி-பா⁴ஷ்யத்தை உள்ளடக்கியது.
நூலின் பெயர்: ஆபஸ்தம்ப³-ஶ்ரௌதஸூத்ரம் (20 மற்றும் 24 ப்ரஶ்நங்கள்)
தொகுத்தவர்: மஹாமஹோபாத்⁴யாய ப்³ரம்ஹஶ்ரீ மௌத்³க³ல ஸுந்த³ரராம-வாஜபேயயாஜீ
ப்³ரம்ஹஶ்ரீ நாராயணவாஜபேயயாஜீ
வெளியிட்ட வருடம்: கல்யப்³த³꞉ 5117 (த்³ருʼக்)
து³ர்முக²நாமஸம்ʼவத்ஸர꞉ ஜ்யேஷ்ட²மாஸ꞉ (2016 August)
நூலின் பெயர்: சித்தஸிந்து⁴:
தொகுத்தவர்: மஹாமஹோபாத்⁴யாய ப்³ரம்ஹஶ்ரீ மௌத்³க³ல ஸுந்த³ரராம-வாஜபேயயாஜீ
ப்³ரம்ஹஶ்ரீ நாராயணவாஜபேயயாஜீ
வெளியிட்ட வருடம்: கல்யப்³த³꞉ 5115 (த்³ருʼக்)
விஜயநாமஸம்ʼவத்ஸர꞉ ஆஷாட⁴மாஸ꞉ (2013 July)
வெளியீட்டாளர்: ஆபஸ்தம்ப³-ஶ்ரௌத-த⁴ர்மாநுஸந்தா⁴ந-கேந்த்³ரம்
இந்நூல் ஶ்ரௌத ப்ராயஶ்சித்தங்களின் தொகுப்பாகும்.
विषयानुक्रमणिका
आपस्तम्बश्रौतसूत्रे नवमः प्रश्नः (पूर्वप्रायश्चित्तम्)
आपस्तम्बश्रौतसूत्रे चतुर्दशे प्रश्ने १५-३४ खण्डाः (उत्तरप्रायश्चित्तम्)
श्रीनिवासदीक्षितीयम्
अग्निहोत्रप्रायाश्चित्तानि
दर्शपूर्णमासप्रायश्चित्तानि
सौमिकप्रायश्चित्तानि
ग्रहणहोमः
प्रायश्चित्तशतद्वयी मूलमात्रम्
क्षुद्रकल्पे प्रायश्चित्तसूत्रम्
(मशक प्रणीतम्) सामवेदीय प्रायश्चित्तम्
நூலின் பெயர்: மரங்களே பிள்ளைகள் (वृक्षापरोपणमहिमा)
தொகுத்தவர்: மஹாமஹோபாத்⁴யாய ப்³ரம்ஹஶ்ரீ மௌத்³க³ல ஸுந்த³ரராம-வாஜபேயயாஜீ
ப்³ரம்ஹஶ்ரீ நாராயணவாஜபேயயாஜீ
வெளியிட்ட வருடம்: கல்யப்³த³꞉ 5122 (த்³ருʼக்)
ஶார்வரிநாமஸம்ʼவத்ஸர꞉ ஶ்ராவணமாஸ꞉ (2020 August)
விஷய அட்டவணை
மஹாபா⁴ரத³த்திலிருந்து...
மரம் நடுதல்
மர ஜாதிகள் 6 வகைகள்
மரம் நடுபவனுக்கு ஸ்வர்க்கம்
தந்தை வம்ஶத்தை உயர்த்துதல்
மரங்களே பிள்ளைகள் எனச் சொல்லல்
பூ பழங்களால் தேவ-பித்ருக்களின் த்ருப்தி
தேவர்கள் யாவரும் மரத்திலே வஸிப்பது
மரங்கள் பிள்ளையைப் போல வளர்ப்பவரை நற்கதியை அடைவித்தல்
மரத்தை பிள்ளையைப் போல பேண வேண்டியது
தோட்டங்களை அமைத்தல்
வ்ருʼத்³த⁴-பராஶர-ஸ்ம்ருதியிலிருந்து...
அரசு முதலான மரங்களின் தொகுப்பு
பூச்செடி வளர்த்தல்
நரகத்திலிருந்து விடுபட என்ன மரம் நடவேண்டும்?
நெல்லி முதலியவற்றை நடுவதின் பயன்
மரம் நடுபவன் கோடி வருடங்கள் ஸ்வர்க்கத்தில் வாஸம்
மரங்களும் நமக்கு ஶ்ராத்³த⁴ம் (நீத்தார் கடமையை) செய்கின்றன
பார்வதீ தேவீ மரம் நட்டது
அரசமரம் நடுவதன் பயன்
சில மாதங்களில் அரசமரம் நடுவதால் பயன்
நாரதபுராணத்தில் நக்ஷத்திர மரங்கள்
சுக்ரநீதியில் மரம் நடுவதைப்பற்றி...
மரங்களின் நடுவே இடைவெளி எவ்வளவு?
ஆட்டுப்புழுக்கைகளால் உரம் தயாரித்தல்
கிராமத்திய மரங்களின் பெயர் பட்டியல்
தண்ணீர் ஊற்றும் மாதமும் காலமும்
எள் கொள்ளு உளுந்துகளால் உரம் தயாரித்தல்
ஆறிய பால் மரத்திற்கு உரம்
தண்ணீரில் சேர்க்கைகள்
காட்டில் நடவேண்டிய மரங்களின் வரிசை
வராஹமிஹிரரின் மரத்தைப் பற்றிய கூற்று
முதலில் பூமியை எள் விளைத்து சுத்தம் செய்வது
வீட்டில் எவ்வகை மரம் வளர்க்கலாம்?
பதியன்கள் எவை?
எக்காலங்களில் எவ்வகை மரம் நடலாம்?
இலையுதிரல் போன்றவைகளுக்கு வைத்யம்
குளித்தபிறகே மரத்தை நடுதல் வேண்டும்
அதிக தண்ணீருள்ள இடத்தில் நடும் 16 மரங்கள்
மரங்கள் ஒட்டிக்கொள்ளலாகாது
வேர்களும் அப்படியே
மரத்திற்கு வியாதி எப்படி வருகிறது?
வாயுவிளங்கம் பால் சிறந்த மருந்து
உரங்களை தயாரிக்கும் முறையும் அளவுகளும்
விதைகளின் பயனீட்டு முறை
புளியமரம் வளர்க்க
விளா மரம் வளர்க்க
மரத்திற்கான குழிகளின் வடிவம் என்ன?
அகல நீள ஆழம் என்ன?
வேதம் சொன்ன நான்கு அங்குலத்தில் நடுகை
அழிஞ்சில் நருவிலி இவைகளால் உரம்
நருவிலியை வளர்க்க
மரம் நட உயர்ந்த நக்ஷத்திரங்கள்
விஷ்ணு தர்மோத்தரபுராணத்திலிருந்து
எந்த திசையில் என்ன மரம் நட வேண்டும்?
முள் மரங்களை கிராமத்தில் நடாதீர்கள்
ஈயப்பாத்திரத்தால் ஜலம் விடுவதின் பயன்
பெண்கள் உதைப்பதால் வளரும் அசோகமரம்
இலந்தைக்கு அதிமதுரம் உரம்
ஏழிலைப்பாலைக்கு பால் உரம்
வில்வம், விளாவிற்கு பானகம் உரம்
ஜாதிக்கொடி, மல்லிகைகளுக்கு சந்தன-நீர் உரம்
தென்னை, வாழை, மூங்கில்கள்களுக்கு உப்பு-நீர் உரம்
வாயுவிலங்கம் அரிசி எல்லா மரத்திற்கும் உரம்
கோவில்களில் ஸ்தல-வ்ருக்ஷங்கள் ஓர் பார்வை