தந்தை : ஏ.கே. மாசிலாமணி (1903 - 25,05. 1982)
தாய்: செல்லம்மாள் (1911 – 24.04.1963)
உடன் பிறந்தோர்:
1. காசிநாதன் (1931 – 16.01. 2018)
2. செகதீசன் (31.07.1932 – 09.01.1990)
3. அருணாசலம் (09.09.1935 – 13.08.2011)
4. மீனாட்சிசுந்தரம் (1937 – 21.09.2020) சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்
5. பஞ்சநாதன் (1939 - 01.01.1999)
6. சோமநாதன் (20.01.1941)
7. அன்பழகன் (1943)
8. தமிழரசி ஆறுமுகம் (27.03. 1945)
9. இளங்கோவன் (19.04. 1948)
10. கண்ணகி சீனிவாசன் (02.06.1952)
அன்பழகனின் பிறந்த நாள்: சனவரி 21.
அன்பழகனுக்கு பெற்றோர் இட்ட பெயர் பழனிவேலு.
பள்ளியில் சேர்க்கும்போதே மாற்றம் பெற்ற பெயர்: அன்பழகன்
ஒற்றுமை: அதே பிறந்த நாளாகிய சனவரி 21இல் பிறந்தவர்கள்:
ஆங்கிலக் கவிஞன் லார்டு பைரன்
உலகின் முதல் தத்துவஞானி சாக்ரட்டிஸ் (கிரேக்கம்)
பிரபல இந்தித் திரைப்பட இயக்குநர் சாந்தாராம்
பாடகர், சிதம்பரம் சி. எஸ். ஜெயராமன்
மேடைப் பேச்சாளர் அறிவொளி
சோவியத் புரட்சியாளன் லெனின் மறைந்தநாள் சனவரி 21
தமிழ்த் தாத்தா உ.வெ.சாமிநாத அய்யர் இறந்த நாள்களில்தான் அன்பழகனின் தாய் இவரைக் கருவுற்றிருக்க வேண்டுமாம்.
வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளாருக்கு ஞானம் வெளிப்பட்டநாள், அன்பழகன் பிறந்த தினமான தை பூச நாள்
அன்பழகன் சிறை சென்ற ஆண்டு: 1965 - இந்தி எதிர்ப்புப் போராட்டம் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்ட காலத்தில் 1976 ஜூன் 3இல் ஒரு அரசியல் வழக்கின் கைதியாகச் சிறை சென்றார்.
அன்பழகன் எழுதி நடித்த நாடகம் 'சிலந்திப்பெண்' (1966- ஆலத்தம்பாடி)
அன்பழகன், இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரிடம்
உதவி இயக்குநராகப் பணியாற்றியத் திரைப்படங்கள் : 15 (1968 – 73)
அன்பழகன் தயாரித்த திரைப்படங்கள் 'பாதபூஜை' & ‘புதுச்செருப்பு கடிக்கும்'
அன்பழகன் இணைந்து இயக்கிய படம் : 'புதுச் செருப்பு கடிக்கும்'
அன்பழகனைப் பாலசந்தரிடம் அறிமுகப்படுத்தியவர் இராம அரங்கண்ணல். (1968)
அன்பழகன் 1974-இல் தந்தை பெரியாரைச் சந்தித்துப் படம் எடுத்துக்கொண்டார்.
தன் தம்பி இளங்கோவனின், மற்றும் தங்கை கண்ணகியின் திருமணங்களுக்கு வருகை புரிந்த தந்தை பெரியாரை வரவேற்று உபசரித்தார்.
அன்பழகனின் இல்லத்தரசி : திலகவதி (1951)
திலகவதியின் பெற்றோர்: இராமையா (மறைந்த நாள் 16.11.1977) & கனகம்மாள் (சிங்கப்பூர்) இவர்கள் பெற்ற 9 பிள்ளைகளில் திலகவதி இரண்டாமவர்
அன்பழகனின் திருமணம் : 02.09.1971
கலைஞர் தலைமையிலும், எம்ஜியார் முன்னிலையிலும்
சென்னை எத்திராஜ் திருமண மண்டபத்தில் நடந்தது.
சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்த ஆண்டு : 27 அக்டோபர் 1994
சிங்கப்பூரின் நிரந்தரவாசம் பெற்ற ஆண்டு : 1996
சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்ற ஆண்டு : 2004
மணிவிழா (60) சிங்கப்பூரில் நடைபெற்ற நாள்: 19.01.2003
பவளவிழா(75) சிங்கப்பூரில் நடைபெற்ற நாள்: 21.01.2019
அன்பழகன் - திலகவதி இணையர் ஈன்றெடுத்த பிள்ளைகள் இருவர்
1. செல்வம் (1972)
மருமகள்: வேதநாயகி (1980)
2. இராமையா: (1978)
மருமகள் : சிந்து (1990)
பெயர்த்தி: நித்திலா (2014)