எம் பள்ளியின் பன்னீர்ப்பூக்கள்

கடம்பவனத்தின் கதம்பம்

செழுமை பூத்துக் குலுங்கும் வனத்தில்

செண்பகப் பூவில் மணம் கமழும்

பூவின் மதுவை உண்ட வண்டுகள்

புன்னகையில் மதி மயங்கி வரும்

பசுமையான புற்களை பசு மேயும்

பாங்கினை உடைய நாடு பாண்டிய நாடு

அருவிகள் வெள்ளி போல் மின்னும்

அதைக் கண்ட வானரம் துள்ளும்

பறவைகள் வானில் பரவசமாய் செல்லும்

பரிதி அதைக் கண்டு பனிக்கும்

மேகத்தின் ஓசை மத்தளம் போல் ஒலிக்க

மரங்கள் கூத்தாடும் நாடு பாண்டிய நாடு

பச்சை பசுமையான வயல்கள் உள்ள நாடு

பசித்தவர்க்கு பஞ்சம் வைக்காத நாடு

பித்தன் முதல் தோன்றி ஆட்சி செய்த நாடு

பிணி என்னும் சொல் இல்லாத நாடு

பண்புடைய பாண்டியன் வேப்பம் பூ மாலை அணிந்து

பகைவரின் மனதையும் உருக்கும் பாண்டிய நாடு

HARI KRISHNA XII

If your cursor finds a menu

Item followed by a dash,

And the double - clicking icon

Puts your window in the trash,

And your data is corrupted

'Cause the index doesn't hash,

Then your situation's hopeless,

And your system's gonna crash!

SORNA KARTHICK B XI - C

மரங்கள் பேசினால்

மனிதா

அன்று இந்திய நாட்டு

சுதந்திரத்திற்காகப் பல

வீரர்கள் தன்

குருதியை!

இந்த‌,புனித பூமியில்

நீராக ஊற்றி!

எங்களை வளர்த்து

இந்த சுதந்திர பூமியில்

எங்களை சுவாசிக்க வைத்தார்கள்!

ஆனால் இன்றோ எங்களை வேரோடு வீழ்த்தி!

இப்புனித பூமியை

நரகமாக்கிக் கொண்டிருக்கிறாய்!

மனிதா!

இத்துடன் நிறுத்திக் கொள்!

எங்களையும் வளர்த்து

இந்த சுதந்திர பூமியில்

எங்களையும்

சுவாசிக்க விடுங்கள்!


பணமே...... உனக்குத்தான் த்தனை பெயர்களோ ...???


💰கோவில்களில் காணிக்கை என்றும்,


💰கல்விக் கூடங்களிலோ கட்டணம் என்றும்,

💰திருமணத்தில் வரதட்சணை என்றும்,

💰திருமண விலக்கில் ஜீவனாம்சம் என்றும்,

💰விபத்துகளில் இறந்தால், நஷ்டஈடு என்றும்,

💰ஏழைக்குக் கொடுத்தால், தர்மம் என்றும்,

💰திருமண வீடுகளில் மொய் என்றும்,

💰திருப்பித்தர வேண்டும் என யாருக்காவது கொடுத்தால், அது கடன் என்றும்,

💰விரும்பிக் கொடுத்தால் நன்கொடை என்றும்,

💰நீதிமன்றத்தில் செலுத்தினால் அபராதம் என்றும்,

💰அரசுக்குச் செலுத்தினால் வரி என்றும்,

💰செய்த வேலைக்கு, மாதந்தோறும் கிடைப்பது சம்பளம் என்றும்,

💰தினமும் கிடைப்பது கூலி எனவும்,

💰பணி ஓய்வு பெற்றால் கிடைப்பது பணிக்கொடை [அ] பென்ஷன் எனவும்,

💰சட்டத்திற்கு விரோதமாக வாங்குவது லஞ்சம் எனவும்,

💰வாங்கிய கடனுக்குக் கொடுக்கும்போது வட்டி எனவும்,

💰குருவிற்குக் கொடுக்கும்போது தட்சணை எனவும்,

💰ஹோட்டலில் நல்குவது டிப்ஸ் எனவும்,


💰இவ்வாறு பல பெயர்களில் குழப்பங்களை உண்டாக்கும் வேறொன்றானது, இப்பூமியில் உண்டோ.....

JEYA SHREE K XI - C