1. இந்த போட்டி வயது வேறு பாடு அற்றது. சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம்.
2. மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் வரலாறு உண்டு. ஒவ்வொரு மனிதனும் பிறந்த மண்ணுக்கும் சமூகத்திற்கும் தொண்டுகள் பல செய்கின்றார். அது சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருக்கலாம். எங்கள் சந்ததி மனிதனின் தொண்டுகளுக்கு மதிப்பளிக்கிறது. வரவேற்கின்றது, போற்றுகின்றது. வரலாறு பல ஆராய்ந்து கண்டறிவதே இப்போட்டியின் நோக்கம்.
3. இந்த போட்டியின் கட்டுரைகள் 15/2/19 இற்கு முதல் சமர்ப்பித்தல் வேண்டும்.
4. சிறந்த கட்டுரைகள் 15/3/19 இற்கு முதல் தெரிவு செய்யப்படும்.
5. சிறந்த கட்டுரைகள் புத்தக வடிவில் புது வருட பிறப்பன்று வெளியிடப்படும்.
6. சிறந்த எழுத்தாளர்கள் பரிசில் வழங்கி புது வருட பிறப்பன்று கௌரவிக்கப் படுவார்கள்.
7. ஒவ்வொரு தலைப்பிலும் ஒருவர் தலா ஒரு கட்டுரையை எழுதலாம்
8. கட்டுரைகள் 1000 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
9. சொந்தக் கட்டுரைகள் மற்றும் இதற்குமுன் எங்கும் வெளியிடப்படாத படைப்புக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
10. போட்டியாளரின் விவரங்கள் கட்டுரையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
11. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்
12. அனைவரும் சம உரிமை உள்ளவர்கள். அனால் அதே சமயம் கண்டிப்பாக நடுவர்க்ளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள்.
13. விதிமுறைகளை மீறும் படைப்புக்கள், எந்தவித அறிவிப்பும் இன்றி நீக்கப்படும்.
14. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.