கல் தோன்றி மண் தோன்றா காலம் தொட்டு எம் மூதாதையர் இம் மண்ணின் மைந்தர்கள். அன்று தொட்டு இன்று வரை எங்கள் வரலாறு பல விதமாக காக்கப்பட்து. எங்கள் வரலாறு என்றும் நிலைக்க வேண்டும். எங்கள் சந்ததி எங்கள் மண்ணின் மகிமையையும், முன்னோரின் வரலாற்றையும் அறிய வேண்டும். எழுதப்படாத பல வரலாறுகள் எழுதப்பட வேண்டும். இந்த ஆய்வு கட்டுரைப் போட்டியின் ஆக்கங்கள், இனி வரும் எங்கள் சந்ததிக்கு வரலாறு சொல்லும் ஓர் அரிய பொக்கிஷமாக இருக்கும் என்று நம்புகின்றோம். இந்த கட்டுரை போட்டியில் பங்கு பற்றிய அனைவரது தரமான கட்டுரைகளை புத்தக வடிவில் அச்சடித்து, தமிழ் வருடப்பிறப்பு அன்று வெளியிடவும், சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசில் வழங்கவும் உத்தேசித்து உள்ளோம். இந்த ஆய்வு கட்டுரை போட்டி எந்த வித வேறு படும் இன்றி தரமான ஆக்கங்களை தேர்ந்தெடுத்து அதை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்வதும், சிறந்த எழுத்தாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவிப்பதுமே எங்கள் நோக்கம். எங்கள் சந்ததியின் தன்னலம் அற்ற சேவை நிறைவு பெற உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் ஆதரவையும் நாடுகின்றோம்.
· எங்கள் கிராமம் (எங்கள் ஊர்)
· பள்ளிகூட வாழ்க்கை
· நான் கேள்விப்பட்ட நல்ல மனிதர்
· எங்களின் பொண்ணான நாட்கள்
· என் தாத்தாவின் பள்ளிக்கூட வரலாறு
· என் அம்மம்மாவின் (பாட்டியின்) அரவணைப்பு
· இளமையின் வேகமும் முதுமையின் அறிமும்
· இளமையின் கர்வமும் முதிமையின் அச்சமும்
· நானும் ஓர் எழுத்தாளன்
· எனது முதல் கட்டுரை
· மரபுவழி அறிவியல்
· மரபுவழி மருத்துவம்
· பந்தி முறை படிப்பு (திண்ணை முறை படிப்பு)
· தெய்வதிலும் தெய்வம் மாத, பிதா & குரு
· அன்று நான் அடைந்த... (சந்தோஷம்/துக்கம்/வெறுப்பு/அச்சம்/..)
· நான் பழகிய, வரலாற்றில் அழியாத மனிதர்
· நான் வணங்கும் ஆசிரியர்
· கிராமத்து பெடியங்கள்
· என் அப்பாவின் அறிவுரை
· எங்கள் அடையாளம்
· அழிந்து போன என் வீடு
· துண்டாடப்பட எங்கள் ஊர்
· துண்டாடப்பட எங்கள் உறவுகள்
· வலிமை சேர்க்கும் எங்கள் உறவுகள்
· வாழ்கையின் இலட்ச்யம்
· முன்னோர் காட்டிய வழி
· என் கடமை
· எங்கள் கிராம பாடல்கள்
· நான் சுவைக்கும் கவிதை
· நமது கிராம விவசாயம்
· நான் அடைந்ததும் இழந்ததும்
· எனது ஊர் பாரதியார்
· (உங்களுக்கு பிடித்த ஏதாவது அனுபவ தலையங்கம்)
1. இந்த போட்டி வயது வேறு பாடு அற்றது. சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம்.
2. மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் வரலாறு உண்டு. ஒவ்வொரு மனிதனும் பிறந்த மண்ணுக்கும் சமூகத்திற்கும் தொண்டுகள் பல செய்கின்றார். அது சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருக்கலாம். எங்கள் சந்ததி மனிதனின் தொண்டுகளுக்கு மதிப்பளிக்கிறது. வரவேற்கின்றது, போற்றுகின்றது. வரலாறு பல ஆராய்ந்து கண்டறிவதே இப்போட்டியின் நோக்கம்.
3. இந்த போட்டியின் கட்டுரைகள் 15/2/19 இற்கு முதல் சமர்ப்பித்தல் வேண்டும்.
4. சிறந்த கட்டுரைகள் 15/3/19 இற்கு முதல் தெரிவு செய்யப்படும்.
5. சிறந்த கட்டுரைகள் புத்தக வடிவில் புது வருட பிறப்பன்று வெளியிடப்படும்.
6. சிறந்த எழுத்தாளர்கள் பரிசில் வழங்கி புது வருட பிறப்பன்று கௌரவிக்கப் படுவார்கள்.
7. ஒவ்வொரு தலைப்பிலும் ஒருவர் தலா ஒரு கட்டுரையை எழுதலாம்
8. கட்டுரைகள் 1000 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
9. சொந்தக் கட்டுரைகள் மற்றும் இதற்குமுன் எங்கும் வெளியிடப்படாத படைப்புக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
10. போட்டியாளரின் விவரங்கள் கட்டுரையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
11. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்
12. அனைவரும் சம உரிமை உள்ளவர்கள். அனால் அதே சமயம் கண்டிப்பாக நடுவர்க்ளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள்.
13. விதிமுறைகளை மீறும் படைப்புக்கள், எந்தவித அறிவிப்பும் இன்றி நீக்கப்படும்.
14. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.