சிறுநீரகங்கள் ஏன் மிகவும் முக்கியம்?
சிறுநீரகம் கழிவுப்பொருட்கள் மற்றும் அதிகப்படியான திரவத்தை அகற்றுகிறது . இந்த கழிவுப்பொருட்கள் மற்றும் அதிகப்படியான திரவம் ஆகியவற்றை உடலிலிருந்து உறிஞ்சிய சிறுநீர்ப்பை சிறுநீராக வெளியேற்றுகிறது . எனவே இவ்வாறான மிகவும் சிக்கலான படிகளை அது உள்ளடக்கியது. உடல் இரசாயனங்களின் நிலையான சமநிலையை பராமரிக்க இந்த தொழிட்பாட்டு செயல்முறை மிகவும் அவசியமானது
உடலின் உப்பு, பொட்டாசியம் மற்றும் அமில உள்ளடக்கம் சிறுநீரகங்களால் கட்டுப்படுத்தப்பட்டு செயட்படுத்தப்படுகின்றது . சிறுநீரகங்கள் மற்ற உறுப்புகளின் தொழிட்பாட்டை சீர்செய்யும் ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன. உதாரணமாக, சிறுநீரகங்களால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன் இரத்த சிவப்பணு உற்பத்தியை ஏட்படுத்துகின்றது . சிறுநீரகங்களால் உற்பத்தி செய்யப்படும் பிற ஹார்மோன்கள் இரத்த அழுத்தத்தைக் சரிவர கட்டுப்படுத்தவும் கால்சியம் அவசியத்தை நிர்ணயிக்கவும் உதவுகின்றன.