அற்புதக் குழந்தை இயேசுவே! அமைதியற்ற எங்களது உள்ளங்களின் மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளுமாறு தாழ்ந்து பணிந்து வணங்கி வேண்டுகிறோம். இரக்கமே உருவான உம் இனிய இதயம் கனிவோடு எங்கள் ஜெபத்தை ஏற்று உருக்கமாக நாங்கள் வேண்டும் இந்த வரத்தை அளித்தருளுமாறு உம்மை இறைஞ்சுகிறோம். ("உங்கள் விண்ணப்பங்களை சிறிது நேரம் மௌனமாக நினைவு கூறவும் ") எங்களை வாட்டி வதைக்கும் துன்ப துயரங்களையும் வேதனை சோதனைகளையும் நீக்கி உமது குழந்தை திருஉருவத்தின் பெயரால் எங்கள் மன்றாட்ட்டை ஏற்றருளும் அதனால் உமது ஆறுதலையும், ஆதரவையும் பெற்று தந்தையோடும் தூய ஆவியோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்தி போற்றுவோமாக. - ஆமேன்.