Corporation Masathiyar Girls Higher Secondary School பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றும் திருமதி K. REVATHI, M.A., M.Ed., M.Phil., அவர்கள் கல்வித் துறையில் அனுபவமிக்க மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்படும் சிறந்த கல்வியாளர் ஆவார். மாணவியர்களின் முழுமையான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு, கல்வியுடன் ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் உயர்ந்த பண்புகளை வளர்க்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
அவரது சிறந்த வழிகாட்டுதலின் கீழ், பள்ளி கல்வி மற்றும் இணைச் செயல்பாடுகளில் முன்னேற்றம் பெற்று வருகிறது. ஒவ்வொரு மாணவியினதும் திறமையை கண்டறிந்து, அவர்களை தன்னம்பிக்கையுடன் உயர்ந்த இலக்குகளை அடைய வழிநடத்துவது அவரது முக்கிய நோக்கமாகும்.
நான் மாட கூடல் நகரில் நடுநாயகமாய் அமைந்துள்ள தெற்கு வாசல் பகுதியில், சின்ன கடைவீதியில் எங்கள் பள்ளி அமைந்துள்ளது. கல்வியையும், கலைகளையும் , கட்டழகு உடல் காக்கும் விளையாட்டையும் மேன்மை மிகு நல்லொழுக்கப் பண்புகளையும் ஒருசேர கற்றுக் கொடுத்து வரும் ஒரு கல்வித் திருக்கோயில் தான் எம் பள்ளி..
100% தேர்ச்சியை இலக்காகக் கொண்டுள்ளது மட்டுமல்லாமல், பன்முக சிந்தனை மற்றும் படைப்பாற்றல் கொண்ட நல்ல குடிமக்களை உருவாக்கி , தேசத்தை உயர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்குடன் ,சீரிய முறையில் சிறப்புடன் இயங்கும் ஒப்பற்ற பள்ளி தான் மாசாத்தியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி.
1973 இல் ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளி , 36 ஆண்டுகள் உயர்நிலைப் பள்ளியாகவும், 2009 முதல் மேல்நிலைப் பள்ளி ஆகத் தரம் உயர்த்தப்பட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவியருடன், திறன்மிகு பள்ளியாகச் செயல்படுவது இதன் தனிச்சிறப்பு..
பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான, அனுபவம் உள்ள திறமையான ஆசிரியர்களைக் கொண்டு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி வகுப்புகளுடன் சிறப்பாகச் செயல்படும் மாநகராட்சிப் பெண்கள் பள்ளி இது..
"நாளும் பொழுதும் நலிந்தோர்க்கு இல்லை ;
ஞாயிற்றுக்கிழமை கூட நமக்கு ஓய்வில்லை"
என மாணவியர் நலன் கருதி "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற வாக்கியத்தை செயல்களாய் மாற்றி, பொதுநலமே சுயநலமாய் கொண்டுள்ள, தாயுள்ளம் கொண்ட ,தகுதியான ஆசிரியப் பெருமக்கள் கிடைக்கப் பெற்றுள்ளது மாசாத்தியாரின் தனிச்சிறப்பு
“நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சிறந்த கற்றல் அனுபவம்”
“மாணவியர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் செயற்பாடுகள்”
“மாணவியர்களின் நலனுக்கான அரசு சுகாதார சேவைகள்”
“ஒழுக்கமும் ஒற்றுமையும் வளர்க்கப்படும் கல்வி சூழல்”