a-28-11-2019-from fbposts

தாமரை புனிதமும், அழகும் கூடிய அருமையான மலர்தான். !வெண்தாமரை கலைவாணியும், செந்தாமரை திருமகளும் உறைவிடம்,.!. இருந்தும், எங்கும் இந்த மலர்களே இருந்தால், ரசிக்காது. சின்னஞ்சிறு காட்டுப்பூவும், மணமே இல்லாத மலர்களும் கூட இயற்கையின் எழில் கூட்டுகின்றன. .பலவிதமான மலர்கள் கதம்பம் தயாரிக்க உதவுகின்றன. . எனினும், எந்த விஷயத்திலும் தரம் என்று ஒன்று உண்டு. .. .சற்று முன்பின் இருந்தாலும், கல்வியிலும், பண்பிலும், சமூகப் பணியிலும், தனிமனித வாழ்கையிலும் உயர்ந்த சான்றோர் ஏற்பது தரமுள்ளதாக அமைகிறது. .அவ்வகையில், இந்தியா என்றால், நினைவிற்கு வருவது எது? சமணம். பௌத்தம். கொல்லாமை. அசோகன். .ஆனால், அதீதமான சாத்விகம் , அசோகனுக்க்குப் பிறகு மூர்க்கமான அன்னியருக்கு நமது நாடு வெகு காலம் அடிமைப்படவழிவகுத்தது. இந்த imbalance ராஜரீக காரியங்களுக்கு ஒவ்வாதது என்று கண்டு, வெறும் 'தமஸ்' ( இருள், மந்தம், சோம்பேறித்தனம்), "சத்வம்" (துறவு, ஞானம்,தெய்விகம் , ) என்று பொய்யுருக் கொண்டு உலவுவதைவிட, "ரஜஸ்" ( கோபம், ஆத்திரம், வெஞ்சினம்) நல்லது. , பொதுநலனுக்காக!.. என்பதை வலியுறுத்த ஏற்பட்டதே கீதை என்கிறார், WILL DURANT.

=====================================

விவேகானந்தர், திலகர், காந்திஜி, நேரு அனைவரும கூறுவது...வர்ண தர்மம், என்பதும் ஸ்வதர்மம் என்பதும், ஆதி காலத்தில் பிறப்பினால் தீர்மானிக்கப் படவில்லை , பின்னாளில், இவ்வாறு சீரழிந்தது, எனவே பிறப்பினால் வர்ணதர்மம் தீர்மானிக்கப் படக்கூடாது என்பதாம். தாங்கள் சுட்டிக்காட்டும் நிகழ்வுகள் அனைத்தும் உண்மையே. ...முழு மனதுடன் ஏற்ப்போம். .வர்ண தர்மத்தின் படி, தலித் என்றோ தீண்டத் தகாதவர் என்றோ யாரும் கிடையாது. அம்பேத்கர் பொங்கியது படி, துப்புரவுத் தொழிலாளர்கள், தொழிலினால் தீர்மானிக்கப் படவில்லை. ஆனால் பிறப்பினால் " என்பதை மாற்றி அமைப்போம் வாருங்கள். .. ஆனால், அவர்கள் கூறிய மறுவாசிப்பின் படி, மீண்டும் கீதையைப் படித்துப் பாருங்களேன். குறிப்பாக வினோபா பாவேயின் 'கீதைப் பேருரைகள்,'வட நாட்டின் பக்தி இயக்கம் பற்றி அறிந்திருப்பீர்கள். ஜாதி ஒழிப்பில் முக்கிய பங்காற்றியது. மராட்டிய பக்தி இயக்கத்தின், தாக்கம் அண்ணல் அம்பேத்கரிடம் அதிகம். ., தீண்டாமை ஒழிப்பு முக்கியம். அந்த விஷயத்தில், பெரியாரிசம் தோல்வி கண்டுள்ளது. காந்தியம் வென்றுள்ளது. தலித் மக்கள் நில உடமை பெறுவது ஒன்றே தீர்வாகும்.

-----------------------------------------------------------

வர்ணம் என்பது நிறம் பற்றியதல்ல. .'வேலைப் பிரிவினை'. மாற்றி வாசியுங்கள்...சமூகத்தில், நீங்கள் ஆற்றும் பணியைப் பொருத்து, உங்களுடைய "வர்ணம்' தீர்மானிக்கப் படுகிறது. பிறப்பால் அல்ல. ..அதன்படி, நாட்டின் நன்மைக்காக உயிரைத் திருணமாக மதித்து, போராடுவோர், க்ஷத்ரியர். ..உற்பத்தி , விநியோகம், இவற்றை சமூக நலனுடன் திறமையாக செய்பவர், வைஸ்யர். கருத்தால் உழைப்பவர்களும், நீதிமான்களும், பிராமணர். . இவர்களுக்கு உதவியாக இருப்பவர்கள், நான்காம் வர்ணத்தவர். ..ஐந்தாம் வர்ணம் என்பது எதுவும் கிடையாது. ..எந்தத் துறையில் நம்மால் சிறப்பாக தொண்டாற்ற முடியுமோ அது நாமே தீர்மானிக்கும், "ஸ்வதர்மம்'. ..உடல்வலுவும், தைரியமும் இல்லாதவர் ராணுவ வீரர் ஆக முயல்வதும், உற்பத்தி, விநியோகம் பற்றி அறியாதவர விவசாயி, மற்றும் வியாபாரி ஆவதும், கல்வி அறிவு, மற்றும் கூர்ந்த சிந்தனை இல்லாதவர் அறிவியல், மற்றும் நீதிபதி ஆவதும், ஸ்வதர்மத்தை மீறும் செயல். இதனால், சமூகத்திற்கு கெடுதல் விளையும் . இதுதான் கீதை சொல்லும் செய்தி.

----------------------------------------------------------

கேரளா பிரபல கம்யூனிஸ்ட் தலைவர் ஈ.கே.நாயனார் ,போப்பாண்டவர் யை சந்தித்த போது பகவத் கீதையை பரிசாக தந்தார் . காரணம் கேட்ட போது கம்யூனிஸ்ட் எனது கொள்கை ,கீதை எனது நாட்டு சித்தாந்தம் என்றார்.

--------------------------------------------------------

DR.KALAAM SAYS HERE. கி.மு. 700 -கி.பி.1300 வரை , 2000 ஆண்டுகள் ,சம்ஸ்க்ருதம் தான் இந்திய அறிவியல் மொழியாக இருந்தது. மேதகு கலாம் எழுச்சி தீபங்கள்..." குசுமபுரம் என்ற இடத்தில (இன்றைய பாட்னா )கி பி .476 பிறந்த ஆரியபட்டர் வான சாஸ்திர வல்லுனராகவும், கணித மேதையாகவும் , பெரும்புகழ் பெற்று விளங்கினார் .அந்த காலகட்டத்தின் ஒட்டுமொத்தமான கணித அறிவின் வடிவமாகக் பெருமை பெற்றுத் திகழ்ந்தவர்.....இரண்டு பகுதிகளாக ஆரியபட் டியத்தை அவர் வடித்த போது அவருக்கு 23 வயதுதான். அரித்மெடிக்,அல்ஜிப்ரா ,trigonometry , மற்றும் வான சாஸ்திரத்தை உள்ளடக்கிய ஒப்பற்ற நூல் ,ஆரியபட்டியம் . ஒரு முக்கோணம் மற்றும் ஒரு வட்டத்தின் பரப்பளவுக்கான சூத்திரம் வகுத்துத் தந்த அவர்,ஒரு கோளத்திற்கும் ஒரு பிரமிடுகும் கொள்ளளவு காண முயன்றார்.ஒரு வட்டத்தின் சுற்றளவு மற்றும் குறுக்களவின் விகிதமாக "பை "(P I )என்பதின் தோராய மதிப்பைக் கணிக்க முயன்ற முதல் கணித மேதை அவர்தான். அதன் தோராய மதிப்பை 3.1416 என்று நிர்ணயித்தார். இந்த மாபெரும் வானவியல் நிபுணரைப் போற்றும் வகையில் இந்தியா,1975 விண்ணில் செலுத்திய முதல் செயற்கைக் கோளுக்கு ஆரியபட்டா என்று பெயர் சூட்டப்பட்டது"

-----------------------------------------------------------

கேரளத்தில், ஸ்ரீ நாராயண குரு, ஈழவ சமுதாயம் ,சமூக நிலையில் ஏற்றம் பெற்று, நம்பூதிரி-நாயர் அடக்குமுறையிலிருந்து விடுதலை பெற்றுத் தந்தார் என்பது அறிந்திருப்பீர்கள். .அவர் செய்த முதற்காரியம், நாத்திகம் அல்ல, மாறாக, ஆண்டவன் முன்னிலையில், , மக்கள் யாவரும் சமம் என்று போதித்ததும், அனைவருக்கும் சம்ஸ்க்ருதம் பயிற்றுவித்து, கற்றறிந்தவர்களாக மாற்றியதும் தான். இன்று, கேரளத்தில், சிரியன் கிருஸ்தவர்கள், நாயர்கள், ஈழவர்கள், நம்பூதிரிகள் அனைவரும் சம்ஸ்க்ருதத்தில் ஓரளவேனும் புலமை கொண்டவர்கள். .உண்மையில், சிரியன் கிருத்தவர்கள் சிலர், வடமொழி விற்ப்பன்னர்கள் கூட. ! பாடகர் ஜேசுதாஸ் பற்றி அறிவீர்கள். செம்பை வைத்யநாத பாகவதரின் சிஷ்யர். குருவாயூர் பக்தர். ..தமிழ்நாட்டில் மட்டும்தான், சீர்திருத்தம் முற்ப்போக்கு என்ற பெயரில், பண்பாட்டுச் சீரழிவு நடந்து வந்துள்ளது. சிந்தியுங்கள்.