26-மீனவர் பிரச்னை பற்றி

மீனவர் பிரச்னை பற்றி , யாழ் முதல்வர் விக்னேஸ்வரன் , கூறியுள்ளதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். இது தமிழ் மீனவர்- சிங்கள மீனவர் பிரச்னை அல்ல. மாறாக, இலங்கையின் தமிழ் மீனவர்களுக்கும் , தமிழ்நாட்டின் மீனவர்களுக்கும் இடையிலான பிரச்னை. இயந்திரப் படகுகள், இரட்டை மடி வலைகள் முதலியவற்றை பயன்படுத்தி, தமிழக மீன்பிடித்தொழில் முதலாளிகள், சர்வதேச எல்லையை தெரிந்து கொண்டே மீறுவது மட்டுமல்லாமல், அந்தப் பகுதியின் மீன் வளத்தை முற்றிலும் ஒழிக்கிறார்கள் என்று விக்னேஸ்வரன் கூறியுள்ளார். ..இதே கருத்தை இலங்கை மீனவர் பிரதிநிதிகளும், ராஜபக்சேயும், சுப்பிரமணிய சுவாமியும் கூறியுள்ளனர். காங்கிரஸ் தவிர, தமிழ்நாட்டின் எந்த ஒரு அரசியல் கட்சியும் இந்த விஷயத்தில் நேர்மையான, தொழிலாளர் சார்பான நிலை எடுக்கவில்லை. தமிழ்நாட்டின் பி.ஜே.பி. அரசியல் காரணங்களுக்காக எடுக்கும் நிலைப்பாடு, மைய அரசின் ,மற்றும் . .பி.ஜே.பி.யின் அகில இந்திய தலைமையின் நிலைப்பாடு அல்ல .கூறப் போனால், மோடி அரசு, , அயல் நாடுகளுடன் உள்ள உறவுகள் பற்றி ,காங்கிரஸ் காட்டிய வழியில் தான் செல்கிறது. இது தவறல்ல. . நல்லது. .இது தேசியக் கட்சிகளின் பார்வை