RATE LIST FOR ALL PRODUCTS
முதல்தர சுத்தமான இயற்கை எண்ணெய்வித்துக்களைக் கொண்டு பாரம்பரிய முறையில் வாகை மரச்செக்கினால் தயாரிக்கப்பட்ட இயற்கை நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய். கிராமத்து விவசாயிகளிடமிருந்து மரச்செக்கு எண்ணெய் நேரடியாக உங்கள் வீட்டிற்கு .......
இயற்கை விவசாயிகள் அங்காடி – 8012259588
Natural Farmers Online Shop – 8012259588
8012259588 (வாட்ஸ் ஆப்)
Website : http://bit.ly/2sZZDIn
You Tube Link: https://www.youtube.com/channel/UC9temCIh5HYmRXrJ7NUsaPg
(Please Subscribe to Our Channel and click the bell icon for notifications)
*மரச்செக்கில் எண்ணெய் சூடேறாது.
*இந்தப் பிண்ணாக்குக்கு விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.
*இந்தச் செக்கில் இருக்கிற உரல், உலக்கை இரண்டுமே மரத்தால் ஆனது.
'வைத்தியருக்குக் கொடுக்கிற காசை, வாணிகருக்குக் கொடு’ இது, மரச் செக்கில் பிழியும் எண்ணெயின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக சொல்லப்பட்ட பழமொழி. ‘
கண்ட எண்ணெயைப் பயன்படுத்தி, பிணிக்கு ஆளாகி, வைத்தியம் பார்ப்பதைவிட, செக்கு மூலமாக தயாரிக்கப்படும் தரமான எண்ணெயை வாங்கி ஆரோக்கியத்தைப் பேணுவதே மேல்’ என்பதுதான் இந்தப் பழமொழியின் பொருள்.
செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி ஆகும். இதனை பெரும்பாலும் கிராமங்களில் சமையல் எண்ணெய் எடுக்க பயன்படுத்துகின்றனர். செக்கானது மரத்தால் செய்யப்பட்டிருக்கும். மாடு முதலான விலங்குவலு ஆரம்பத்தில் பயன்பட்டது. ஆயினும் தற்காலத்தில் சுவட்டு எரிபொருள் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் செக்குகள் பாவனையில் உள்ளன.
சர்க்கரை நோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் என, அவதிப்படும் மக்கள், தற்போது இயற்கை உணவு முறைக்கு மாறி வருகின்றனர்..
இயந்திரச் செக்கில் எண்ணெய் எடுக்கும்போது, அதன் வேகத்தால் எண்ணெய் அதிகம் சூடாகிறது. அந்த வெப்பத்தால் எண்ணெயில் இருக்கும் உயிர்ச்சத்துகள் குறைந்துவிடும். அதனால் தான், ‘ஒரு தடவை பலகாரம் செய்ய பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது’ என்கின்றனர்.
மர செக்கை மாடுகள் மூலம் மெதுவாக இயக்குவதால், எள் சூடாவதில்லை. நல்ல பக்குவத்தில் அதில் உள்ள சத்துகள் சிதையாமல் பாதுகாக்கப்படுகின்றன. அப்படியே ஏறும் குறைந்த வெப்பத்தையும் எள்ளுடன் சேர்த்து அரைக்கப்படும் கருப்பட்டி, சமன் செய்துவிடும்.
இயந்திரத் தயாரிப்பில் எண்ணெய் வித்துப் பொருட்களில் உள்ள சத்துகளையும், தயாரிப்பாளர்கள் வடிகட்டி விடுவர். இதனால், பாக்கெட் எண்ணெய், பார்க்க பளிச்சென இருக்கும். கம்பெனிகள், தங்களுக்கு என நிரந்தரமாக வைத்திருக்கும் நிறம், மணம், குணத்தைச் சேர்க்கின்றனர். அதனால் தான் இந்த எண்ணெய் அதிகபட்சம் மூன்று மாதங்கள் வரை மட்டுமே தாக்கு பிடிக்கிறது.
ஆனால், மரச்செக்கு எண்ணெய் நிறம் குறைவாகவே இருந்தாலும், நல்ல வாசனையுடனும் ஓராண்டு வரை கெட்டுப் போகாமல் இருக்கும். இந்த எண்ணெயில் சமைக்கும் உணவுகள், ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.
மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்போது, எண்ணெய் சூடேறாது. வாசனையும் மாறாமல் இருக்கும். நல்ல ருசியுடனும் ஒரு வருட காலத்துக்குக் கெட்டுப் போகாமலும் இருக்கும். ஒரு முறை மரச்செக்கு எண்ணெயை உணவு வகைகளில் கலந்து சாப்பிட்டு விட்டால்… அதன் ருசி காலகாலத்துக்கும் மறக்காது.
மாதந்தோறும் ஒரு குடும்பத்துக்கு 5 லிட்டர் கடலை எண்ணெய் பயன்படுத்துகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்தக் குடும்பத்துக்கு மரச்செக்கு மூலம் ஆட்டப்பட்ட எண்ணெய் 3 லிட்டர்தான் செலவாகும். காரணம், இந்த எண்ணெய் அடர்த்தியாக இருக்கும். இதனால், குறைவான எண்ணெயைப் பயன்படுத்தினாலே போதும்.
மர செக்கில் ஒரு நாளுக்கு, 28 லிட்டர் வரை மட்டுமே உற்பத்தி பண்ண முடியும். நல்லெண்ணெய் மட்டுமின்றி கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய் செக்கில் ஆட்டி எடுக்கப்படுகின்றன. இது ஒரு குடிசை தொழில் என்பதால், அரசு மானியம் வழங்கினால், மரச்செக்கு தொழில் மீண்டும் புத்துயிர் பெறும். நம் பாரம்பரிய தயாரிப்பு முறைகளை, அரசு முன் வந்து ஊக்குவிக்க வேண்டும்.
தற்போது பாரம்பர்ய உணவுகள் குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்து வருகிறது. இதனால், மரச்செக்குக்கும் மறுவாழ்வு கிடைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏறத்தாழ அழிவு நிலையில் இருந்த மரச்செக்கின் நன்மைகளை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்.
முன்பெல்லாம் மரத்தின் மூலம் செய்யப்பட்ட செக்கில், மாடுகள் மூலம்தான் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்… போன்றவற்றை ஆட்டி வந்தார்கள்.
காலப்போக்கில், கால்நடைகள் குறைந்து போனதாலும், மரச்செக்கின் மகத்துவம் தெரியாமல் போனதாலும், இந்தத் தொழிலின் வளர்ச்சி குறைந்துபோனது. மரச்செக்குகளின் இடத்தை இயந்திரங்கள் (ரோட்டரி) பிடித்துவிட்டன. ஆனால், மீண்டும் மரக்செக்குகள் வளரத் தொடங்கிவிட்டன. மாடுகளைப் பயன்படுத்தாமல், இப்போதும் கூட, சிறிய அளவு மின்சார இயந்திரத்தைக் கீழே பொருத்தி, வாகை மரத்தில் செய்யப்பட்ட செக்கைக் கொண்டுதான் எண்ணெய் எடுக்கப்படுகின்றது.
.
ரோட்டரி, மரச்செக்கு என்ன வித்தியாசம்?
‘‘இந்த மரச் செக்கு 1.5 குதிரைத் திறனுள்ள மோட்டார் மூலமா ஓடுது.
எட்டு மணிநேரம் இயக்க, சுமார் எட்டு யூனிட் கரன்ட் செலவாகும்.
இந்த செக்குல இருக்கிற உலக்கை, உரல் ரெண்டுமே மரத்தால ஆனது.
உலக்கை, வம்மரை மரத்திலும், உரல், வாகை மரத்திலும் செஞ்சிருக்காங்க.
உலக்கையோட எடை 40 கிலோ. உலக்கையும் உரலும் ஒரு நிமிஷத்துல ஒன்பதரை சுத்து சுத்தும். இதனாலதான் மரச்செக்குல ஆட்டுற எண்ணெய் சூடாகாம இருக்கு.
ஆனா,
ரோட்டரியில உலக்கை, உரல் ரெண்டுமே இரும்புல இருக்கும்.
உலக்கையோட எடை 80 கிலோ.
ஒரு நிமிஷத்துக்கு 38 சுத்து சுத்தும்.
அதோட உற்பத்தித் திறன் மரச் செக்கை விட, நாலு மடங்கு அதிகம்.
10 குதிரைத் திறன் மின்மோட்டார்ல அது இயங்குது’’ .
Groundnut Marachekku Ennai
High blood pressure: Groundnut wood pressed Oil lowers high blood pressure, It contains mono unsaturated fats which indirectly helps to reduce the risk of heart diseases.
Stomach problems: Groundnut Oil helps to prevent & cure disorders like constipation, digestive problems, diarrhea, etc.
Skin & Hair care: Groundnut Oil thickens the hair, adds moisture, regenerates damaged hair and reduces flaking of the scalp
Strengthen body: Groundnut Oil is a very rich in protein. It should be consumed in a moderate amount daily for building muscles and for body strengthening.
Heart Health: Groundnut wood pressed Oil is Rich in mono-unsaturated fatty acids (MUFA) that increases your “good cholesterol” and lower your “bad cholesterol” in the blood . This helps to prevent coronary heart attacks and artery disease by maintaining a healthy blood lipid profile.
Blood flow: Organic Groundnut Oil contains linoleic acid which helps to improve Blood Flow.
Traditionally Extracted Groundnut Wood Pressed Oil.
Hence No Heat Generated, No Loss of Vitamins & Proteins
Zero Chemicals used – Free from Sulphur
Zero Paraffin Wax and Free from Argemone Oil
Shipping Mode: Standard Shipping (By Surface)
Tamil nadu: 1- 2 Working Days
Kerala, Karnataka & AP: 3-4 Working Days
Other Locations: 5-6 Working Days