RATE LIST FOR ALL PRODUCTS
நாட்டு சர்க்கரை இந்திய துணைக்கண்டத்தில் சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்றுதொட்டு உட்கொள்ளப்படும் ஒரு பண்டமாகும். நாட்டு சர்க்கரை கரும்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
கொஞ்ச வருடத்திற்க்கு முன்ன வரைக்கும் எல்லா வீட்டுலையும் நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்தினாங்க. வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்கு சாப்பாட்டு இலையில சர்க்கரை, பழம் வைக்கும் வழக்கம் இருந்தது. அதிரசம், லட்டு, பணியாரம்னு பலகாரங்கள்கூட இதுலதான் செய்வாங்க. கோடை காலத்தில் தண்ணீர் பந்தலில் நாட்டுச் சர்க்கரையுடன் புளிக்கரைசல் கலந்த ‘பானகம்’ கொடுப்பாங்க. இப்ப அந்தப் பழக்கமெல்லாம் மறைஞ்சுட்டு வருது”
இதுல கலப்படம் இல்லை !
”நாகரிகம் என்று சொல்லிக் கொண்டு ரசாயனம் கலந்த அஸ்கா சர்க்கரையை (சீனி) வாங்கி பயன்படுத்த மக்கள் பழகிட்டாங்க. இதனால் வயிறு சம்பந்தமான நோய், வயிறு எரிச்சல் ஏற்படுது. சில கலப்படக்காரங்க அஸ்காவோட, அதேமாதிரி இருக்கும் செயற்கைத் துகள்களையும் கலக்கறாங்க.
ஆனால், நாட்டுச் சர்க்கரையில் எந்தக் கலப்படமும் கிடையாது. மூன்று வருடம் வரைக்கும்கூட கெட்டுப் போகாது. வளரும் குழந்தைகளுக்கு பாலில் நாட்டுச் சர்க்கரையைக் கலந்து தினமும் தூங்கப் போறதுக்கு முன் ஒரு டம்ளர் கொடுத்தால்… வயிறு சம்பந்தமான எந்த நோயும் அண்டாது. உடம்பும் ஊக்கமாகும்”
கரும்புச் சாறு பாகாகக் காய்ச்சப்பட்டு அவை குறிப்பிட்ட கொதிநிலை வரும்போது அதன் சத்துகளில் மாற்றம் ஏற்படுகிறது. அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் என்று மாற்றம் அடைந்த பின்னர் பிரவுன் நிறத்தில் கிடைக்கும் பொருளே கரும்புச் சர்க்கரையாகும்.
இந்தக் கரும்புச் சர்க்கரையில் வெல்லத்தைக் காட்டிலும் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக் கூடிய அனைத்துச் சத்துகளும் உள்ளன. மேலும் அது உடலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றும் செயலையும் செய்கிறது.
நாட்டு சர்க்கரை வாதம் மற்றும் செரிமான நோய்களை குணப்படுத்தும் தன்மை உள்ளதாக எழுதப்பட்டுள்ளது. நவீன மருத்துவத்தில் நாட்டு சர்க்கரை தொண்டையில்/நுரையீரலில், புழுதி மற்றும் புகையினால் ஏற்படும் சிதைவை தடுக்கும் குணம் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
100 கிராம் நாட்டு சர்க்கரையில் அடங்கியுள்ள சத்துக்கள்:
1) சக்தி 383 கலோரிகள்
2) ஈரப்பதம் 3.9 கிராம்
3) புரதம் 0.4 கிராம்
4) கொழுப்பு 0.1 கிராம்
5) தாதுக்கள் 0.6 கிராம்
6) மாவுச்சத்து (carbohydrates) 95 கிராம்
7) சுண்ணம் (calcium) 80 மில்லி கிராம்
8) எரியம் (phosphorus) 40 மில்லி கிராம்
9) இரும்பு 2.64 மில்லி கிராம்
வெள்ளைச் சர்க்கரை (சீனி ) மெல்லக்கொல்லும் வெள்ளைநஞ்சு!
நாம் தினமும் உண்ணும் சக்கரையில் எவ்வளவு நச்சுத் தன்மை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால் நமக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும். நாம் காலையில் எழுந்தவுடன் குடிக்கும் டீ அல்லது காபியில் இருந்து இரவு படுக்கும் முன் குடிக்கும் பால் வரை நாம் சக்கரையைப் பயன்படுத்துகிறோம்.
இந்த வெள்ளை சக்கரை தயாராகும் விதத்தை நாம் தெரிந்து கொண்டால் அது உடலுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். இந்த வெள்ளைச் சக்கரை தயாரிக்க பயன்படுத்தும் ரசயானப் பொருட்கள் மிகவும் ஆபத்தானவை.
சர்க்கரை வியாதியஸ்தர்களின் எண்ணிக்கை இன்னும் 10 வருடங்களில் 70 மில்லியன்களைத் தொடும்’ என்கிறது பன்னாட்டுச் சர்க்கரை நோய்க் கழகம். பிறக்கும் போதே சர்க்கரை வியாதியுடன் பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கையும் இளம் வயதில் மாரடைப்பால் இறந்து போவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருதற்க்கு மிக முக்கியமான காரணம் வெள்ளைச்சர்க்கரை என பல்வேறு மருத்துவ அறிக்கைகள் உறுதிப்படுத்திய நிலையில் வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.
சர்க்கரை குறிப்பாக
1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் நம்ம் வீட்டு கழிப்பறைக்கு பயன்படுத்தும் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.
2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.
4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.
5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.
6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.
7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.
8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது தினமும் 24 தேக்கரண்டி சர்க்கரையை நாம் உணவில் சேர்த்தால், 92 சதவீத வெள்ளை ரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும்.
உடலில் அதிகம் சர்க்கரை இருந்தால் அதை சுத்தப்படுத்த அதிகமாக "இன்சுலின்' வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் "இன்சுலினுக்கும்' நோய் எதிர்ப்புசக்தியை தடுக்கும் ஹார்மோன்களான, புரோஸ்டேகிளேன்டான்-க்கும் அதிக தொடர்பு இருக்கிறது.
இது புற்றுநோய் கட்டியை உருவாக்குகிறது. "கேன்டிடா எல்பிகன்ஸ்' என்ற பெண் உறுப்பு தொற்றுநோயை, சர்க்கரை, இன்னும் அதிகளவு துரிதப்படுத்துகிறது. அளவுக்கு அதிகமாக "சுக்ரோஸ்' உள்ள உணவு எலும்பில் கால்சியத்தை குறைத்து, எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது. மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு இயற்கையாகவே கால்சியம் சத்துக்குறைபாடு ஏற்படும். அந்த சமயத்தில் வெள்ளைச்சக்கரையை தவிர்ப்பது நல்லது.
வளர்ச்சி என்ற பெயரில் தொழில் நுட்பம் கொண்டுவந்ததுதான் வெள்ளைச் சர்க்கரை. உண்மையில் மதுவையும் புகையையும் போல தடை செய்யப்பட வேண்டிய பொருள் இந்த வெள்ளைச் சர்க்கரை. ஆனால் இன்று சர்க்கரை, உணவு அரசியலில் அரிசிக்கும் கோதுமைக்கும் அடுத்தபடியாக உள்ளது.
உலகின் சர்க்கரை நோயில் நம்மை முதலிடத்தில் தள்ளியமைக்கும், பெருவாரியான பெண்களின் ஆஸ்டியோபோரோசிஸ் இடுப்புவலிக்கும், இன்னும் பல கான்சர் நோயின் வளர்ச்சிக்கும் வெள்ளை சர்க்கரை ஆற்றிய பங்கு அளப்பறியது.
இனிப்புக்கள் அத்தனையும் அப்போது பனைவெல்லத்திலும், தேனிலும் தான் செய்யப்பட்டிருந்தன. வெள்ளை சர்க்கரையில்ல. எந்த வ்கையிலும் இந்த இயர்கையின் இனிப்புக்கு மாற்றாக வர இயலாத வெள்ளை சர்க்கரை தொழில் நுட்ப உதவியால் ஒட்டு மொத்தமாய் திணிக்கப்பட்டுவிட்ட்து.
ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது .
இயற்கை விவசாயிகள் இணைய அங்காடி-8012259588
(Natural Farmers Online Shop)- 8012259588
8012259588 (வாட்ஸ் ஆப்)
Website : http://bit.ly/2sZZDIn