இடது தீவிரவாதிகளுக்கு!
எனக்கு தெரிந்தவரை, அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு , இடதுசாரி தேசியம் , என்ற கலவை, பின்வரும் மகத்தான வெற்றிகளை கொடுத்திருக்கிறது.
==========================================================
ஸ்டாலின் காலத்திய ருஷ்யா, ( இரண்டாம் உலகப்போர், அதற்கு பிந்தைய சோவித் யூனியனின் சாதனைகள்)
மாவோ காலத்திய சீனா,
கொரியா யுத்தம்,
ஹோசிமின் காலத்தில் இந்தோ சீனா,
சுகர்னோ காலத்தில் இந்தோனேசியா,
க்யூபா,
இன்று லத்தீன் அமெரிக்க விடுதலை இயக்கங்கள், ,,
லுமும்பா காலத்தில் கானா,...
நெல்சன் மண்டேலா காலத்தில் தென் ஆப்ரிக்க விடுதலை இயக்கம்
CHILE'S ALLENDE
===================================================
எல்லாவற்றிற்கும் அடித்தளமாக விளங்கி , மாபெரும் வெற்றி தந்த பாதை.
தத்துவார்த்த விவாதம் நடந்த நாட்களில் , குருச்சேவின் அமெரிக்காவுடன் 'சமாதான சக வாழ்வு' என்ற கொள்கைக்கு எதிராக , பின் தங்கிய , காலனி நாடுகளின் "தேசிய விடுதலை இயக்கம்' தான் சர்வதேச பொதுவுடைமை இயக்கத்தின் , முதன்மையான வெற்றிப்பாதை என்று, ஆசிய, ஆப்ரிக்க , லத்தீன் அமெரிக்க நாடுகள் தீர்மானித்தன.
இந்தியா அப்படிப்பட்ட , ஒரு வளரும் நாடு.
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஆசியாவில் இந்தியாவும், சீனாவும், சரியான மரண அடி கொடுக்க முடியும்.
இந்தியா தீவிர இடதுசாரிகளின் முழு சோஷலிஸ்ட் நாடு அல்ல என்பது தெரிந்ததுதான். .. ஆனால் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் முதலாளிகளும் கூட அங்கத்தினர்களாக இருப்பதை சற்று பாருங்கள்.!
'இந்தியா ஒரு தேசமே இல்லை ! பல தேசிய இனங்களின் சிறைக்கூடம்' என்று சொல்லிக்கொண்டே இருந்தீர்களானால், "..
'இந்திய நாடு ஒரு மகத்தான வல்லரசாக உருவாகவேண்டும், எந்த ஒரு அந்நிய முரடனுக்கும் இனி எக்காலத்தும் அடி பணியக்கூடாது, ..அடி வாங்கினது போதும்! இனி எவனாவது வாலாட்டினால், அவனை நிர்மூலம் செய்வோம் " என்று தான்
இன்று, தீவிர இந்திய தேசபக்த இளைஞர்கள் அனைவரும் விழைகிறார்கள். இந்த கனவிற்கு ஒரு வடிவம் தந்து, அதை இடதுசாரி திசையில் கொண்டுசெல்ல வேண்டுமே தவிர, , மொழி, இனம் என்று உங்களது வட்டத்தை சுருக்கிக்கொள்ளாதீர்கள் .
'மொழி மட்டும் தான் , தேசியத்தின் ஒரே அடிப்படை ' என்று வரட்டுத்தனமாக பின்பற்றாதீர்கள். ..உங்களது இயக்கத்தையே எடுத்துக்கொள்ளுங்கள .. வங்கம் , பீகார், ஆந்திரம், மகாராஷ்டிரம், அசாம், ஓரிசா, என்று பல மாநிலங்களில் இருந்தும் , தொண்டர்கள்
அமைகிறார்களா இல்லையா? அன்று , காந்திஜி , எங்கு சென்றாலும், அது தென்கோடி குமரி மாவட்டமோ, அல்லது, வடகோடி ஆப்கனிஸ்தான எல்லை பெஷாவரோ , எப்படியிருந்தாலும், லட்சக்கணக்கில் மக்கள் எப்படி திரண்டார்கள்?...மொழிவாரி தேசியம் ஏன் பொய்த்துப்போனது? ..
உலகில் எங்குமே இதுவரை என்றெல்லாம் சொல்லாதீர்கள். பல விதமான, மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள், எவ்வளவோ வேற்றுமைகள் இருந்தாலும், பாரதம் என்ற ஒரு மகத்தான பொதுவுடைமை சமுதாயத்தை ஏற்படுத்துவோம் வாருங்கள் . ...முடியும் என்று நம்புங்கள். முடியும்.
===================================================
..1) ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இருக்க வேண்டும்.. அதிலும் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இருக்க வேண்டும்.
2) உழைக்கும் மக்களாகிய , நிலமில்லாத விவசாய தொழிலாளர்கள் , ஏழை விவசாயிகள் , மற்றும் நகர்ப்புற பாட்டாளி வர்க்க ஏழைகளுக்கு சாதகமாக இருக்க வேண்டும்.
3) ஹிந்துவோ முஸ்லிமோ கிருஸ்துவரோ , யாராயினும் , அனைத்து மதங்களுக்கும் மதிப்பு கொடுத்து , விட்டுக்கொடுத்து , இந்திய தேச ஒற்றுமையை கண்ணின் மணி போல காப்பாற்றவேண்டும்.
4) சமுதாயத்தின் அடிமட்டத்தில் , ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அடக்கப்பட்டு அல்லலுறும் , தலித் மக்கள் சமூக , பொருளாதார, அரசியல் அரங்கில் ஏற்றமும், பெருமையும் பெறவேண்டும்.
5) பொருளாதார , சமுக ஏற்றத்தாழ்வு நிறைந்த சமுதாயத்தில், அரசியல் சமத்துவம் வெறும் ஏட்டளவில்தான் இருக்க முடியும். எனவே, முதலில் பொருளாதார சமத்துவம், பின்னர் சமூக சமத்துவம், இறுதியில் அரசியல் சமத்துவம் என்ற வகையில்தான் முன்னேற்றம் காண முடியும்.
6) மக்களாட்சி தத்துவம் , ஏழை-பணக்காரன் நிறைந்த சமுதாயத்தில் , சரியாக செயல் பட முடியாது. எனவே சோசியலிசம் என்பது, ஜனநாயகத்தின் முதல் படி. .. மாறாக , வெறும் வாக்குச்சீட்டு தேர்தல் அரசியலை , ஜனநாயகம் என்று முன்னிறுத்துவது, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை இன்னமும் கூர்மையாக்கி , சமத்துவத்தை கனவாக்கி விடும் .
7) இடதுசாரி என்றால் , மதங்களுக்கு எதிராக இருக்கவேண்டும் என்ற கருத்தை நான் நிராகரிக்கின்றேன் .. இறை உணர்வு என்பது வேறு. , மூட பழக்க வழக்கங்கள் வேறு. .. உண்மையான இறை உணர்விலிருந்துதான்
மனித நேயமும் , சமத்துவ வேட்கையும் உருவாகின்றன. .. கடவுள் மறுப்பு அல்லது ஏற்பு என்பது ஒரு தத்துவ இயல் பிரச்னை. .. 'கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் எல்லோரும் , மனித நேயமோ சமதர்ம ஆர்வமோ உள்ளவர்கள் அல்ல '..என்பது கண்கூடாக , நாம் காணும் உண்மை. .
.எனினும் , நாத்திகர்கள் எல்லோரும் , ஜாதி மறுப்பாளர்களா ? சமதர்ம ஆதரவாளர்களா? பொதுவுடமையை ஏற்ப்பவர்களா ? என்று பார்த்தால் அதற்கும் விடை 'இல்லை' என்றுதான் வரும்.
ஒருவர் எந்த மொழி பேசினாலும் எந்த மதத்தவராயினும் நாத்திகராயினும், ஆத்திகராயினும் , பொருளாதார சமத்துவ சோஷலிச , பொதுவுடைமை லட்சியத்தை ஏற்பவராயின் அவர் எமது வழித்துணை என்பது எனது கருத்து.
தென் அமெரிக்க நாடுகளில் ( லத்தீன் அமெரிக்க) , இந்த
கொள்கை 'விடுதலை இறையியல் ' ( LIBERATION THEOLOGY)என்ற பெயரில் , பெருமளவு மக்களைப் பண்படுத்தி , வலிமை மிக்க இடதுசாரி இயக்கத்தை கட்டமைப்பதில் வெற்றி கண்டு வருகிறது. ..உலகம் முழுதும் உள்ள கத்தோலிக்கர்களின் குருவான போப் அவர்கள் கூட , இடதுசாரி இயக்கத்தோடு ஒத்திசைந்து , ஒத்துழைப்பு தருகின்றார்.. ஏழை எளிய மக்களின் கோரிக்கைகளுக்காக , கத்தோலிக்க குருமார்கள் , கையில் துப்பாக்கி ஏந்தி போராடும் காட்சிகளை அங்கு காண்கிறோம் ..
இத்தகைய இறையியல் மிகவும் நல்லதுதான் ..
மாறாக , மூட நம்பிக்கையை எதிர்ப்பதாக சொல்லிக்கொண்டு, சுய நலம் , முதலாளித்துவம் , ஜாதி வெறி , நுகர்வு கலாச்சார வெறி ,லஞ்ச ஊழல், பண்பாட்டு சீரழிவு போன்றவற்றை , போற்றிப் பாதுகாப்பவர்கள் , முற்போக்குவாதிகளாக ஏற்கப்பட முடியாது.
மதங்களின் பெயரால் பல அக்ரமங்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக நடைபெற்றுவருகின்றன என்பது உண்மையானாலும் , நன்னடத்தையும் சமூக உணர்வும் கூட அதே மத போதனையினால்தான் ஏற்ப்பட்டன என்பதும் உண்மையே. ......எனவேதான் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் 'விடுதலை மறையியல் ' என்ற LIBERATION THEOLOGY இயக்கம் வளர்ந்து வருகின்றது. இயேசு பிரான் ஒடுக்கப்பட்டவர்களுக்காக எதிர்ப்பு இயக்கம் நடத்தியவர் SOCIAL REBEL என்ற கருத்தில் காஸ்ட்ரோ போன்ற பொதுவுடமை புரட்சியாளர்கள் , கம்யுனிஸத்தையும் , கிறிஸ்துவத்தையும் இணைப்பதில் வெற்றி கண்டு வருகிறார்கள். 'மதம் என்பது ஒரு அபின் போன்றது' என்ற மார்க்ஸ் கூறிய கருத்து , தவறாக புரிந்து கொள்ளப்பட்டு , யந்திரத்தனமாக மேற்கோள் காட்டப்படுகிறது. ...சமுதாய வளர்ச்சியில் மதம் முன்னாட்களில் ஆற்றிய பங்கை மார்க்ஸ் மறுக்கவில்லை.
=================================================================