Date - ----------------------
Period -
Time - 50 Minutes - 1 period
Grade 6 - Science - Unit 10
தேர்ச்சி 4.0
தேர்ச்சி மட்டம் 4.1
4.0 இயற்கை தோற்றப்பாடுகள் தொடர்பான விளக்கத்துடன் இயற்கை வளங்களை அறிவுப்பூர்வமாகவும் நீடித்து பயன்படுத்துவதற்கு புவியினதும், வெளியினதும் தன்மை, இயல்பை, செயற்பாடுகளை, தேடி அறிவார்
4.1 உணவு பழக்கத்திற்கு ஏற்ப அங்கிகளுக்கு இடையிலான தொடர்புகளை நியாயப்படுத்துவார்
மாணவர்கள் உணவுச் சங்கிலி மற்றும் உணவு வலை என்ற கருத்துக்களை விளக்கமாக விவரிக்க முடியும்.
தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையிலான போசனைத் தொடர்புகளை உணவுச் சங்கிலி மூலம் விளக்க முடியும்.
உற்பத்தியாக்கிகள், முதன்மை நுகரிகள், இரண்டாம் படி நுகரிகள், மூன்றாம் படி நுகரிகள் மற்றும் பிரிகையாக்கிகளின் வேட்களை உணவுச் சங்கிலியிலும் உணவு வலையிலும் வரிசைப்படுத்த முடியும்.
மாணவர்கள் உணவுச் சங்கிலி மற்றும் உணவு வலை இடையிலான வேறுபாடு மற்றும் ஒற்றுமைகளை புரிந்து கொள்ளலாம்.
உணவு வலைக்குள் ஒரு உயிரினம் பல பதவிகளில் (e.g. நுகரிகள் மற்றும் பிரதிநிதிகள்) செயல்பட்பதை விமர்சனபூர்வமாக அலச முடியும்.
சூழல் சமநிலை (ecological balance) ஏற்படுத்துவதில் உணவுச் சங்கிலியும் உணவு வலையும் எவ்வாறு முக்கியத்துவம் உடையவை என்பதை விவரிக்க முடியும்.
Flashcards
Textbook
Marker pen
Picture Cards
A3 laminated personal whiteboard
Video -
தாவரங்களிலும் விலங்குகளிலும் வெவ்வேறு பட அட்டைகளை மாணவர்கள் சேகரிப்பர் - inform one day prior
மாணவர்கள் A3 laminated white board ஒன்றைத் தயாரிப்பர் - inform one day prior
மாணவர்கள் WhatsApp வீடியோ இணைப்பை கண்டு களித்து word-wall செயற்பாட்டை செய்வார் - Share the video links one day prio
Pre-Lesson Activity Video, the word wall assessment
Digital Inputs - Video 1
நாங்கள் அன்றாடம் பல வேலைகளை செய்கின்றோம், இவ்வேளைகளை செய்வதற்கு எமக்கு என்ன தேவைப்படுகின்றது?
விலங்குகள் எவ்வாறு சக்தியை பெற்றுக் கொள்கின்றன?
Show the pictures and ask them whether there is an interrelated pattern in the way animals take food in the given pictures, and ask them to build a food chain based on the feeding pattern.
Caterpillar Eating leaf parts
A deer grazes grass
A bird eats a worm
A fox preys on a deer
A Vulture preys on a bird
A tiger preys on a fox
A snake catches a bird
A vulture eats snake
A grasshopper eats grass
A bird catches a worm
A buffalo eats grass
Man eats burger
கருத்துதிர்ப்பு - What about plants?
தாவரங்கள் எவ்வாறு சக்தியை பெற்றுக் கொள்கின்றன?
நாங்கள் எவ்வாறு சக்தியை பெற்றுக் கொள்கின்றோம்?
நாங்கள் எல்லோருமே இன்னொரு விலங்கின் மீது உணவுக்காக தங்கி இருக்கின்றோம். இக்கூற்றை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா?
தாவரங்கள் ஒன்றும் இவ்வுலகில் இல்லையெனில் எமக்கு உணவைப் பெற்றுக் கொள்ள முடியுமா
இவ்வுலகில் எல்லா தாவரங்களும் அழிந்துவிட்டது என்று எடுத்துக் கொள்வோம். எமக்கு எவ்வாறு உணவு கிடைக்கும் ? எமக்கு உணவு கிடைக்குமா?
மாமிசத்தை மட்டும் உணவா உட்கொண்டு நமக்கு வாழ்ந்துவிடலாம் தானே? என்ன நான் கூறுவது சரியா?
அப்படியாயின் எமது பூமியின் முதலான சக்தி முதல் யாது ?
இந்த முதலான சக்தி முதலை பதிக்கும் ஆற்றல் எந்த அங்கிகளுக்கு உள்ளது?
இவ்வங்கிகளால் செய்யப்படும் இச்சையன்முறை எவ்வாறு அழைக்கப்படும்?
ஒளித் தொகுப்பு
கீழே தரப்பட்டுள்ள வீடியோ இணைப்பை கண்டு களித்து அடுத்ததாக வரும் Word-wall பயிற்சிகளை செய்வார்
ஆசிரியர் பொருத்தமான விளக்கங்களை வீடியோவின் இடை இடையே வழங்குவார்.
மாணவர்கள் உணவுச் சங்கிலி அல்லது உணவு வலை எனும் பதங்களின் விளக்கத்தை கொண்டு வரும் வகையில் இடைவெளி நிரப்பும் செயல்பாடு ஒன்றை செய்வார்
Redo this activity and reinforce the concept.
Give chances to students who lack WhatsApp/ Internet facilities at home.
White board activity -
உணவு சங்கிலி என்றால் என்ன?
வாக்கியம்:
உணவுச் சங்கிலி என்பது ___________ இருந்து ___________ வரை போசனச் சக்தி ஒரு ___________ வழியாக நகரும் முறையாகும்.
✅ பதில்கள் பயன்படுத்த:
(1. உற்பத்தியாக்கி, 2. நுகரிகளுக்கு, 3. நேரடி வரிசை)
மாணவர்கள் குழுக்களாக இணைவார்
மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பர்சனல் வைட் போர்டை கொண்டு அவர்கள் எளிமையான உணவுச் சங்கிலி ஒன்றை உருவாக்குவார்
அதில் உற்பத்தியாக்கி, முதலாம் படி நுகரி, இரண்டாம் படி நுகரி, மூன்றாம் படி நுகரி, பிரிகையாக்கி போன்றவற்றை இனம் காண்பார்
மாணவர்கள் ஒழுங்கு முறையாக அம்புக்குறியை இடத்துக்கு இடத்துக்கு ஏற்றவாறு பொருத்தமான முறையில் இணைப்பார்
அம்புக்குறி ஆனது சக்தி பாயும் திசையில் உள்ளது என்பதை உறுதி செய்வார்
ஆசிரியர் பொருத்தமான முறையில் பின்னூட்டல் வழங்குவார்
🟩 தற்போதைய செயல்:
உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விலங்கு மற்றும் தாவர அட்டைகளைப் பயன்படுத்தி, கீழ்காணும் பணிகளைச் செய்யுங்கள்:
📌 பணி 1: உணவுச் சங்கிலி
📍 அட்டைகளை ஒட்டி உணவுச் சங்கிலியை உருவாக்கவும்.
📍 அட்டைகளில் இருந்து உணவு பரிமாற்ற திசையை காட்டும் அம்புகள் (arrows) வரைந்து ஒவ்வொரு உயிரினமும் யாரை உணவாகக் கொள்கின்றது என்பதை காட்டவும்.
📌 பணி 2: வகைப்பாடு செய்யுங்கள்
உங்களுடைய உணவு வலைக்கு அடிப்படையில் கீழ்காணும் வகைப்பாடுகளை நிரப்புங்கள்:
நிலை உயிரினத்தின் பெயர் (உங்கள் உணவு வலையிலிருந்து)
உற்பத்தியாக்கி (Producer) ____________________________
முதலாம் படி நுகரி (Primary consumer) ____________________________
இரண்டாம் படி நுகரி (Secondary consumer) ____________________________
மூன்றாம் படி நுகரி (Tertiary consumer) ____________________________
பிரிகையாக்கி (Decomposer) ____________________________
மாணவர்கள் மதிப்பீட்டுக்கான ரூப்ரிக் (Rubric) குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படுவார்கள்.
ஒவ்வொரு குழுவிற்கும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் புள்ளிகள் வழங்கப்படும்.
பின்னூட்டம் (Feedback) மற்றும் முன்னேற்ற வழிகாட்டுதல் (Feedforward) தேவையானபடி வழங்கப்படும்.
மாணவர்களின் செயல்திறன், பாடப்பிரிவு தலைவரால் பராமரிக்கப்படும் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட பதிவேட்டில் பதிவு செய்யப்படும்.
They fill in the marks in the given Excel sheet attached here
Students' Fun Activity - Who will get the chance! - Time 5 Minutes
இங்கு வழங்கப்பட்டுள்ள விளையாட்டை செய்து பார்ப்பார்
Enter students' names in the wheel of Names or simply ask students to count numbers.
Then pin the wheel, the winner has to do the task in the word wall coming to the board.
Adapt this if the lesson has to be done in a traditional classroom without a smartboard, facilities for bean bag passing, and ask students to come to the board and do the adapted task
உணவு வலை எனும் கருத்தை மாணவர்கள் அறிவார். (Fill in the blank Activity)
உணவு சங்கிலி எனும் பதத்திலிருந்து உணவு வலை எனும் பதம் எவ்வாறு வேறுபடுகின்றது என்பதை மாணவர்கள் அறிவார் (Scaffolding)
காட்சிப்படுத்தப்பட்டுள்ள உணவு வலைப்பாடத்தை இனம் கண்டு உணவு சங்கிலிக்கும் உணவு வலைக்கும் இடையிலான வேறுபாடுகளை மாணவர்கள் infer அறிவார், அதை அவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பர்சனல் வாய்ப்பாடு எழுதி காட்டுவார்.
மாணவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பட அட்டைகளை கொண்டு பொருத்தமான முறையில் இணைத்து விலங்குகளுக்கு இடையிலான போசனை இடைத்தொடர்பை வெளிக்காட்டும் வகையில் உணவு வலை ஒன்றை உருவாக்குவார்
மாணவர் குழுக்கள் அதில் உள்ள உற்பத்தியாக்கி, முதலாம் படி நுகரி, இரண்டாம் படி நுகரி, மூன்றாம் படி நுகரி, பிரிகையாக்கி போன்றவற்றை ஆசிரியர் கேட்கும் போது பொருத்தமான முறையில் கூறுவார்
வாக்கியம்:
உணவு வலை என்பது பல ___________ ஒன்று சேர்ந்து உருவாகும் ஒரு ___________ அமைப்பாகும், இதில் ஒரு உயிரினம் பல ___________ உடையதாக இருக்கலாம்.
✅ பதில்கள் பயன்படுத்த:
(1. உணவு சங்கிலிகள், 2. கூடல், 3. உணவு தொடர்புகள்)
உணவு வலை மற்றும் உணவு சங்கிலி இடையே என்ன வேறுபாடு?
ஒரு விலங்கு அழிந்தால், அது உணவு வலையில் ஏற்படுத்தும் பாதிப்பை விவரியுங்கள்.
படத்தில் காணப்படும் உணவு வலையில், எந்த விலங்குகள் முதலாம் படி நுகரிகள், இரண்டாம் படி நுகரிகள் மற்றும் மூன்றாம் படி நுகரிகள்? அவற்றை வகைப்படுத்துங்கள்.
உணவு வலையில் உள்ள பிரிகையாக்கியின் பங்கு என்ன? அது இல்லாவிட்டால் என்ன நடக்கும்?
உணவுச் சங்கிலி உற்பத்தியாக்கில் ஒரு ஆரம்பிக்கப்படும் ( )
உணவுச் சங்கிலியின் இறுதி இணைப்பு பிரிகையாக்கி ஆகும் ( )
அம்புக்குறி சக்தி பாயும் திசையை குறிக்கின்றது ( )
உணவுச் சங்கிலி வழியே இணைப்புகள் அதிகரிக்கும் போது சக்தியும் அதிகரிக்கும் ( )
உணவு சங்கிலியானது அங்கிகளுக்கு இடையிலான வளர்ச்சி தொடர்பை காட்டுகின்றது ( )
ஒரு சூழலின் சமநிலைக்கு உணவுச் சங்கிலி அல்லது உணவு வலை தேவையற்றது ( )
Share the link in the WhatsApp group and follow up during the next lesson
Name of the task and Date
Creativity to the next level - Group B - Circular food chain and Date
Name of the task and Date
Name of the task and Date