உப-யோகா
உப-யோகா மூட்டுகளை உயவூட்டுகிறது, தசைகளுக்கு பயிற்சி கொடுக்கிறது, மேலும் உங்கள் சக்தி முடிச்சுகளை செயல்படுத்துகிறது. நீங்கள் உயர்ந்த விழிப்புணர்வை உணர்வீர்கள். - சத்குரு
உப-யோகா மூட்டுகளை உயவூட்டுகிறது, தசைகளுக்கு பயிற்சி கொடுக்கிறது, மேலும் உங்கள் சக்தி முடிச்சுகளை செயல்படுத்துகிறது. நீங்கள் உயர்ந்த விழிப்புணர்வை உணர்வீர்கள். - சத்குரு
உபா-யோகா என்பது மிக எளிய மற்றும் சக்திவாய்ந்த பயிற்சி தொகுப்பாகும், இது மூட்டுகள், தசைகள் மற்றும் சக்தி அமைப்பைச் செயல்படுத்தி, முழு அமைப்பையும் எளிதாக்கும். புதிதாக யோகா கற்றுக்கொள்பவர்களுக்கு இது ஒரு நல்ல தொடக்க பயிற்சியாக இருக்கும், மேலும் பிற யோகாசனங்களுக்கு தயார்படுத்திக்கொள்ள இது பயனுள்ளதாக இருக்கும். இந்த பயிற்சி, உடலின் இயக்கவியல் பற்றிய அதிநவீன புரிதலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கு.
உடல் அழுத்தத்தையும் சோர்வையும் போக்கும்
மூட்டுகள் மற்றும் தசைகளுக்கான உடற்பயிற்சி
செயலற்ற காலத்திற்குப் பிறகும் உடலைப் புதுப்பிக்கும்
ஜெட் லேக் மற்றும் நீண்ட பயணத்தின் விளைவிளிருந்து எளிமையாக வெளிவர உதவும்