"பௌர்ணமி இரவுகளில் நமக்குள்ளும் வெளியிலும் உயர்ந்த சக்திநிலை இருக்கிறது. இந்த சக்தியை நம் ஆரோக்கியம், பேரானந்தம் மற்றும் வெற்றிக்கு பயன்படுத்திக்கொள்ள வழிகள் உள்ளன." — சத்குரு
"பௌர்ணமி இரவுகளில் நமக்குள்ளும் வெளியிலும் உயர்ந்த சக்திநிலை இருக்கிறது. இந்த சக்தியை நம் ஆரோக்கியம், பேரானந்தம் மற்றும் வெற்றிக்கு பயன்படுத்திக்கொள்ள வழிகள் உள்ளன." — சத்குரு
பௌர்ணமி இரவுகள், இயற்கை இலவசமாக சக்திவெள்ளத்தை வழங்குவதாக இருப்பதால், அவை ஆன்மீகப் பாதையில் இருப்பவர்களது தியானத்திற்கு உகந்தவையாக இருக்கின்றன.
ஒவ்வொரு பௌர்ணமி இரவையும் உங்கள் உச்சபட்ச தன்மையை உணர்வதற்கான படிக்கல்லாக மாற்ற இந்த சத்சங்கம் ஒரு ஈடு இணையற்ற வாய்ப்பினை உங்களுக்கு வழங்க முடியும்.
முன்பதிவு அவசியம், இலவசமாக பதிவு செய்துகொள்ளலாம்.
மார்ச் 28, 2021 அன்று துவங்கி 12 பௌர்ணமிகளுக்கு சத்சங்கங்கள் நடைபெறும்.
90 நிமிடங்களை இதற்கென முழுமையாக ஒதுக்கத் தயாராக இருங்கள்.
அனைத்து வயதினரும் கலந்துகொள்ளலாம், வயதுவரம்பு கிடையாது.
தமிழ், ஹிந்தி, ரஷ்யன் மற்றும் ஸ்பேனிஷ் மொழிகளில் இந்நிகழ்ச்சி நேரலையில் வழங்கப்படுகிறது.
உங்கள் கிரகிப்பாற்றலை உயர்த்தி இந்த வாய்ப்பினை நீங்கள் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள சில வழிகாட்டிகள்:
சத்சங்கத்தை அதன் புனிதம் மாறாமல் உணர்வது அவசியம். இந்நேரத்தை இதற்கென பிரத்யேகமாக ஒதுக்கிடுங்கள், இடையே எந்த இடையூறுகளும் தொந்தரவுகளும் இல்லாதவிதமாக முன்னேற்பாடுகள் செய்துகொள்ளுங்கள் (90 நிமிடங்களுக்கு இடையே கழிப்பறை செல்வதோ, அலைபேசி பயன்படுத்தவோ கூடாது).
தடங்கல் இல்லாத இணைய இணைப்பு இருக்க வேண்டும்.
மடிக்கணினி அல்லது மேசைக்கணினி வழியாக கலந்துகொள்வது சிறந்தது.
In case of any registration queries, you can write to the following e-mails
English or Tamil Webinars - tnk.onlineofferings@ishafoundation.org
Malayalam Webinars - kerala@ishayoga.org