கணேஷ் KV
தலைவர்- உள் துறைத் தணிக்கை
கணேஷ் KV
தலைவர்- உள் துறைத் தணிக்கை
நிர்வாகத்தின் செய்தி:
அன்புள்ள குழு உறுப்பினர்களே,
நாம் நிதியாண்டின் சரிபாதியில் இருக்கிறோம், இது எங்களுக்கு சவாலான ஒன்றாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. சவால்கள் அகம் மற்றும் புறம் என இரு மடங்காக உள்ளன. நாம் அனைவரும் அறிந்தபடி, இரண்டு பெரிய நிறுவனங்களின் இணைப்புச் செயல்முறையின் மூலம் நாங்கள் வழிசெலுத்துகிறோம், இதுவரை அனைவரின் ஆதரவுடன், அது சுமூகமாக உள்ளது. களப்பணிகளுக்கான கட்டமைப்பு அறிவிக்கப்பட்டுப் புதிய தலைமை பொறுப்பேற்றுள்ளது. நாம் இப்போது நாட்டின் சிறந்த MFI ஆவதற்குத் தயாராக இருக்கிறோம்.
சில நேரங்களில் வர வேண்டிய தொகைகள் சரியான நேரத்தில் வரத்தவறுதல் அதிகரித்து வருவதை நாம் கண்டிருப்பதால் வெளிப்புற சூழல் சவாலாக உள்ளது. நாம் அடிப்படைகளுக்குத் திரும்புவதற்கும், நமது வலிமையை முன்னிறுத்தி செயல் புரிவதற்கும் இதுவே நேரம். சரியான செயல்முறையைப் பின்பற்றுவதிலும், மையம் மற்றும் கிளையின் தர நிர்ணயங்கள் முழுமை செய்யப்படுவதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். நல்ல வாடிக்கையாளர்கள் தக்க வைக்கப்படுவதை உறுதி செய்ய, தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் புதுமைப் படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சேவைத் தரத்தை மேம்படுத்துவதில் நாம் பணியாற்றுவோம். ஒரு குழுவாக நாம் கடந்த காலங்களில் நெருக்கடிகளை சமாளித்துள்ளோம் என்பதையும், உயர்தரமான வாடிக்கையாளர் சேவையை உறுதி செய்ய, உள் செயல்முறைகளில் கவனம் செலுத்துவதன் மூலமும், களஊழியர்களுக்கு ஆதரவளிப்பதன் மூலமும் இதை நாம் சாதிக்க முடிந்தது என்பதை நாம் நிரூபித்துள்ளோம். நாம் நமது இலக்குகளை அடைவதை உறுதி செய்வதற்கு நம் ஒவ்வொருவரின் பங்கும் முக்கியமானது.
வரவிருக்கும் மாதங்களில், கிடைக்கக்கூடிய அனைத்துத் திறமைகளிலும் சிறந்தவற்றைப் பயன்படுத்திப் பல்வேறு நிலைகளில் இரண்டு அணிகளின் ஒருங்கிணைப்பைக் காண்போம். நாம் வலுவாகவும் சிறப்பாகவும் வெளிவருவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அனைவருக்கும் இனிய பண்டிகைக் கால வாழ்த்துகள் மற்றும் இனி வரும் ஆண்டு சிறப்பாக அமையவும் வாழ்த்துக்கள்.
நமது வரம்புகளைக் கண்டறிதல்
எட்டப்பட்ட மைல்கற்கள்!
"எங்கெல்லாம் ஒரு படிக்கல் இருக்கிறதோ அங்கே ஒரு மைல்கல்லும் இருக்கும்"
ஒரு நிறுவன அமைப்பாக, நமது ஒவ்வொரு அடியையும் போற்றத்தக்க மைல்கல்லாக மாற்ற நாம் கடுமையாக உழைத்து வருகிறோம். இந்த காலாண்டில் நமது தனித்துவமான செயல்திறன் நமது கூட்டு முயற்சிகளுக்கு ஒரு சான்றாக இருக்கும்.
ஆகஸ்ட் 2024ல் இந்தியா ரேட்டிங்ஸ், சைதன்யா இந்தியாவின் மதிப்பீட்டை "IND AA/- ஸ்டேபிள்" ஆக மேம்படுத்தியுள்ளது என்பதைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தக் குறிப்பிடத்தக்க மைல்கல் நம் நிறுவனத்தின் வளர்ச்சி, வலுவான செயல்பாட்டுத் செயல்திறன் மற்றும் உறுதியான மூலதனமாக்கல் விவரத்தின் வலிமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த மேம்படுத்தல் வெறும் எண்களை மட்டும் பிரதிபலிக்கவில்லை, இந்தியா முழுவதிலும் உள்ள சமூகங்களை மேம்படுத்துவதற்கும், நிதி உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கும் முழு சைதன்யா குழுவின் உறுதியான அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது. சவால்களை முறியடிப்பதில் நமது மீண்டெழும் திறன், பொறுப்பான வளர்ச்சிக்கான நமது அர்ப்பணிப்பு மற்றும் மிக முக்கியமாக, நமது பங்குதாரர்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு இது ஒரு சான்றாகும்.
இந்தக்குறிப்பிடத் தக்க பயணத்தைத் தொடர்கையில், நம் வேகத்தைத் தக்க வைத்துக்கொள்வதிலும், நாம் சேவை செய்யும் சமூகங்களில் பொருள் பொதிந்த தாக்கத்தை ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறோம்.
சைதன்யாவின் முழுமையான வளர்ச்சி முயற்சிகளின் பல்வண்ணக் காட்சிக்கள்
விரிவான கற்றல் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் தொடர்ச்சியான கற்றல் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை உண்டாக்குவதற்கு சைதன்யா வலுவான முக்கியத்துவத்தை அளிக்கிறது. முழுமையான நல்வாழ்வின் முக்கியத்துவத்தை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எனவே, எங்களின் அனைத்துப் பயிற்சித் திட்டங்களிலும் அர்ப்பணிப்புள்ள உடல் மற்றும் மன நல அமர்வுகள் அடங்கும்.
கடந்த காலாண்டின் சுவாரஸ்யமான சில காட்சிகள் பின்வருமாறு:
பீஹார் வடக்கு-21வது பேட்ச் (குழு) பயிற்சி
பீஹார் வடக்கு 26வது பேட்ச் பயிற்சி
பீஹார் வடக்கு- 22வது பேட்ச் பயிற்சி
பீஹார் வடக்கு 29வது பேட்ச் பயிற்சி
அயோத்தி - BM & ABM புதுப்பித்தல் பயிற்சி
அயோத்தி - CREs புதுப்பித்தல் பயிற்சி
கடக் - ABMs புதுப்பித்தல் பயிற்சி
தார்வாட் - முதல் முறை மேலாளர் பயிற்சி
கோகாக் - BM’s புதுப்பித்தல் பயிற்சி
தமிழ்நாடு - கடன் புதுப்பித்தல் பயிற்சி
ஹாவேரி - BMs புதுப்பித்தல் பயிற்சி
ஹஸாரிபாக் - யூனிட் CRE புதுப்பித்தல் பயிற்சி
தமிழ்நாடு - UMs அறிமுகப் பயிற்சி
தமிழ்நாடு - வணிகம் மற்றும் ஆதரவுக் குழு MD
ராஞ்சி - முதல் முறை மேலாளர் பயிற்சி
ராஞ்சி - 6வது பேட்ச் பயிற்சி
ராஞ்சி - 10வது பேட்ச் பயிற்சி
ராஞ்சி - 14வது பேட்ச் பயிற்சி
ராஞ்சி - 16வது பேட்ச் பயிற்சி
தென் மண்டல - L&D சந்திப்பு
சுல்தான்பூர் - தொகுதி 22வது TCRE வகுப்பறைப் பயிற்சி
சுல்தான்பூர் - 32வது TCRE வகுப்பறைப் பயிற்சி
சுல்தான்பூர் தொகுதி- 34வது TCRE வகுப்பறைப் பயிற்சி
சுல்தான்பூர் தொகுதி- 31வது TCRE காலை யோகா பயிற்சி
மதுரை - UM புதுப்பித்தல் பயிற்சி
மத்தியப் பிரதேசம்- UMs புதுப்பித்தல் பயிற்சி
ராஜஸ்தான் - UMs புதுப்பித்தல் பயிற்சி
குஜராத் - UMs புதுப்பித்தல் பயிற்சி
வாராந்திர வினாடி வினாக்களில் தொடர்ச்சியாக சாதனை புரிபவர்கள்
(நமது அமைப்பின் அனைத்திந்தியக் கிளைகளிலிருந்தும்)
எங்களது CREகள், செயல்முறை மற்றும் கொள்கைகள் குறித்த வாராந்திர வினாடி வினாக்களில் தொடர்ச்சியாக சிறந்து விளங்கி, அவர்களின் ஆழ்ந்த அறிவு மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றனர். எங்கள் HRMS இயங்குதளத்தால் இயக்கப் படும் பயிற்சிக் குழுவால் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி, CRE முதல் RM லெவல் வரையிலான அனைத்துப் பணியாளர்களின் வசதிக்காகப் பல மொழிகளில் கேள்விகள் கிடைக்கச்செய்து. அவர்கள் அறிவுக்கூர்மையுடன் விளங்குவதை உறுதி செய்கிறது.
தொடர்ச்சியாக சிறந்து விளங்கியவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். எங்களது அடுத்த இதழில் எங்கள் ஊழியர்கள் மேலும் பலரின் பெயர்கள் குறிப்பிடப்படுவதை எதிர்பார்க்கிறோம்! ஜூலை - செப்டம்பர் 24 - இந்தக் காலாண்டில் எங்களின் சிறந்து விளங்கிய கலைஞர்களின் பெயர்கள் இதோ:
ராஜேஷா U
குடேகோட்டா கிளை குட்லிகி பிரிவு
A ராஜா
குட்லிகி கிளை குட்லிகி பிரிவு
இப்ராஹிம் ஹுசேன் ஷேக்
ரெனாபூர் கிளை முருத் பிரிவு
கோட்ரேசகவுடா AM
ஹூவினா கிளை ஹடகாலி யூனிட்
சாகர்
ராதோர் கிளை நிலோகேரி யூனிட்
சுதீபா K
பரமஸாகர் கிளை சித்ரதுர்கா பிரிவு
(எங்கள் செயல்பாட்டின் முதுகெலும்பு)
எங்கள் நிறுவனத்தில் உள்ள நிர்வாகத்துறையானது நிறுவனம் முழுவதும் சீரான மற்றும் திறமையான செயல்பாடுகளை உறுதி செய்யும் முக்கிய சக்தியாக செயல்படுகிறது. குப்புதங்கதுரை G அவர்கள் தலைமையிலான இந்தத் துறையின் உன்னதமான முயற்சிகள் இன்றி, சைதன்யாவின் அன்றாட நடவடிக்கைகளில் எதுவும் தடையின்றி செயல்படாது. புதிய கிளைகளை அமைத்தல் முதல் புதுமையான திட்டங்களை செயல்படுத்துதல் வரை நிறுவனத்தின் செயல்பாட்டின் ஒவ்வொரு அம்சத்தையும் தொட்டு, இத்துறை நமது ஒட்டுமொத்த வெற்றிக்குப் பங்களிக்கிறது.
முக்கியமான முயற்சிகள் மற்றும் சாதனைகள்
மையப்படுத்தப்பட்ட விற்பனையாளர் மேலாண்மை: மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா மற்றும் குஜராத்தில், கொள்முதல் செயல்முறை மையப் படுத்தப்பட்டு, சிக்கலான தன்மைகளைக் குறைத்து, ஒரு கிளைக்கு சுமார் Rs 18,000/- சேமிக்கப்படுகிறது. இது பிராஞ்ச் செட் அப் செய்கையில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கொள்முதல் செயல்திறனைக் கணிசமாக மேம்படுத்தியுள்ளது.
சரியான நேரத்தில் பிராஞ்ச் செட் அப் செய்தல்: நிர்வாகக் குழு, நிர்ணயிக்கப்பட்ட டர்ன்அரவுண்ட் நேரத்திற்குள் (TAT) கிட்டத்தட்ட 40 புதிய கிளைகளை வெற்றிகரமாக செட் அப் செய்துள்ளது.
நிலையான இயக்க நடைமுறைகள் (SOPகள்): மொத்தம் 34 SOPகள் உருவாக்கப் பட்டு செயல்படுத்தப் பட்டு, அனைத்து செயல்பாடுகளிலும் நிர்வாக நிலைத்தன்மை மற்றும் தரத்திற்கான உயர் நிர்ணயிப்பை அமைக்கிறது.
சேவைத் தரம்: 4.0 க்கு மேல் தொடர்ந்து சேவை மதிப்பீட்டைக் கொண்டு, துறையானது உயர் சேவைத் தரம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தியைப் பராமரித்து, தொடர்ந்து சிறந்து விளங்குகிறது.
HR டிராக்கர் செயல்படுத்தல்: அனைத்து மண்டலங்களிலிருந்தும் ஊழியர்களின் மொபைல் எண்களை HR டிராக்கரில் ஒருங்கிணைப்பதன் மூலம், தகவல் தொடர்பு நெறிப்படுத்தப் பட்டு, நிறுவனத்திற்குள் தொடர்பு கொள்வதைக் கணிசமாக மேம்படுத்துகிறது.
நிறுவன சமூகப் பொறுப்பு (CSR): நிர்வாகத் துறையானது, CSR முன்முயற்சிகளுக்குத் தீவிரமாகப் பங்களித்துள்ளது, திட்டப் பணிகளை நேரத்தில் மற்றும் பட்ஜெட்டுக்குள் வெற்றிகரமாக முடித்து, செயல்பாட்டுப் பங்களிப்புகளுக்கு அப்பாற்பட்டு அவற்றின் பல்துறைத்திறனை வெளிப்படுத்துகிறது.
புதுமையான செயல்முறை மேம்பாடுகள்
நிர்வாகத் துறையின் தொடர்ச்சியான கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துதல் பல பயனுள்ள திட்டங்களுக்கு வழிவகுத்தது:
புதுமையான செயல்முறை மேம்பாடுகள்
ஒரு கிளை, ஒரு ஸிம் & மொபைல்: இந்த முயற்சியானது ஒவ்வொரு கிளையிலும் ஒரு பிரத்யேக ஸிம் மற்றும் மொபைல் சாதனம் இருப்பதை உறுதி செய்கிறது, தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்துகிறது மற்றும் ஒட்டு மொத்த செயல்திறனை சிறக்கச் செய்கிறது.
பாதுகாப்பு லாக்கர் கொள்முதல்: பாதுகாப்பு லாக்கர்களுக்கான கொள்முதல் செயல்முறையை எளிதாக்குவதன் மூலம், முக்கிய ஆவணங்கள் மற்றும் கிளைகள் முழுவதும் உள்ள சொத்துகளுக்கான பாதுகாப்பைத் துறை வலுவாக்கியுள்ளது.
இன்வெர்ட்டர் & பேட்டரி பராமரிப்பு: பழுது மற்றும் பராமரிப்பு செயல்முறைகள் நெறிப்படுத்தப் பட்டு, இயங்காத நேரத்தைக் குறைத்து, செயல்பாட்டின் தொடர்ச்சியை உறுதி செய்கிறது.
கூரியர் மேலாண்மை: தலைமை அலுவலகத்திலிருந்து கிளைகளுக்குக் கூரியர் பொருட்களை நேரடியாக அனுப்புதல், தாமதங்களைப் போக்கி, விநியோக செயல்திறனைக் கணிசமாக உயர்த்துகிறது.
ஸிம் கோரிக்கைகள் & CRE பேக் மேலாண்மை: ஸிம் கோரிக்கைகள் மற்றும் CRE bag தொகைகள் தொடர்பான செயல்முறைகளை எளிமையாக்குவது மின்னஞ்சல் போக்குவரத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், பதில் அளிக்கும் நேரங்களையும் நிதியைக் கையாளுதலில் வெளிப்படைத் தன்மையையும் மேம்படுத்துகிறது.
செயல்பாட்டு இடைவெளிகள் நிவர்த்தி செய்யப்படுவதையும், பணிகள் சீரமைக்கப் படுவதையும், திட்ட முன்னேற்றம் கண்காணிக்கப் படுவதையும் உறுதி செய்ய, தெளிவான தகவல் தொடர்பு மற்றும் கவனத்தைப் பராமரிக்க உதவும் வகையில், துறையானது அன்றாட ஹடில் கூட்டங்களை
( சிறு கூட்டம்) நடத்துகிறது.
நிர்வாகத் துறையின் விவரங்களின் மீதான கவனம், செயல்பாட்டுத் திறனுக்கான அர்ப்பணிப்பு மற்றும் புதுமைக்கான உற்சாகம் ஆகியவை சைதன்யா இந்தியாவின் வளர்ச்சியைத் தொடர்ந்து ஆதரிக்கின்றன. குப்புதங்கதுரை G அவர்களின் தலைமையில், இந்தத் துறையானது நமது செயல்பாடுகளின் முதுகெலும்பாக உள்ளது, நமது ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளை முழுமை செய்ய நாம் எப்போதும் தயார் நிலையில் உள்ளோம். நாம் விரிவடையும் போது, சைதன்யாவின் வெற்றியை நீடித்து நிலைக்கும் விதத்தில் தக்க வைப்பதில் நிர்வாகத் துறையின் முக்கியப் பங்கு மேலும் இன்றியமையாததாக அமைகிறது.
சைதன்யாவுடன் 15 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல்:
எங்கள் ஊழியர்களே எங்கள் வலிமை. எங்கள் நிறுவனம் எங்கள் ஊழியர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் உருவகம். எங்களுடனான எங்கள் ஊழியர்கள் ஒவ்வொருவரையும் நாங்கள் மதிக்கிறோம். எங்கள் நிறுவனத்தில் 15 புகழ்பெற்ற ஆண்டுகளை நிறைவு செய்த எங்கள் அணியினரின் பெயர்கள் இங்கே உள்ளன.
C0008 சுரேஷா SM
C0009 - நவீன் குமார் H
சைதன்யாவுடன் 10 ஆண்டுகள்
C0487-சங்கப்பா
சைதன்யாவுடன் 5 ஆண்டுகள்
C5905 - ஷைலேந்திர குமார்
C5819 - முகேஷ் குமார்
C5823 - ஸ்வர்ண திலக்
C5965 - மன்டு குமார்
C6019 - ஆதித்ய குமார் துபே
C5579 - குஞ்சன் குமார் மிஸ்ரா
C5832 - சந்தோஷ் குமார் குப்தா
C6012 - முன்னா குமார்
C5811 - உதய் சங்கர் குமார்
C6035 - சுமித் குமார்
C5609 - ராஜீவ் ரஞ்சன்
C5613 - பிக்ரம் குமார்
C5810 - பங்கஜ் குமார்
C5817 - சுதிர் குமார்
C5596 - பர்வீன் குமார்
C5903 - அம்புஜ் ரே
C5603 - சந்திர சேகர் குமார்
C5808 - ஷைலேந்திர மாஞ்சி
C5818 - தினேஷ் குமார்
C5595 - சங்கர் பிரசாத் குப்தா
C5816 - குமார் அமன்
C5954 - விகாஷ் பார்தி
C5957 - ஸன்னி குமார்
C5805 - நாகேஷ்வர் குமார் ஸா
C5849 - தர்மேந்திர சிங்
C5589 - ஆனந்த் மஹதோ
C5955 - ஹரேந்திர மஹதோ
C5651 - பஸவராஜு A
C5877 - ஸ்ரீஷைல் யல்லட்டி
C5941 - விட்டல் அசோக் தலனட்டி
C6022 - நாகேந்திர ஹுலியா கவுடா
C6044 நாகராஜா M A
C5556 - சந்தோஷ் குமார்
C5739 - சந்திரகாந்த்
C6014 - சித்தாராம்
C5706 -அன்னப்பா T P
C5528 - பர்வீன்
C5637 - நாகராஜ்
C5964 - ஜெகதீஷ்
C6041 - பஸவராஜ்
C5777 - சங்கப்பா சிவானந்த் சோமனகட்டி
C5519 - அங்குஷ் தேவிதாஸ் குதர்
C5649 - அம்பரீஷ் பதிங்கராவ் கோடே
C5678 - சுனிதா உத்தம் ஸால்வே
C5687 - அங்கத் கோர்காநாத் சோன்சலே
C5861 - சூரஜ் சந்தோஷ் காஷித்
C5990 - மஹாதேவ் குண்ட்லிக் கோரே
C5996 - பாலாஜி சந்திரகாந்த் பவார்
C5882 - ரமேஷ் பாண்டுரங் பாவ்கர்
C5569 - தேஜஸ்வினி அமோல் குமாடே
C5621 - ஹஸன் ஷபீர் ஷேக்
C5748 - சந்தீப் ரத்திலால் பண்டாரே
C5732- சாயபு
C5586 -அபினவ் குப்தா
C5930 - திலீப் குமார் கௌதம்
C5585 - குந்தன் குமார் சுக்லா
C5924 - Teja Prasad
C5924 தேஜா பிரசாத்
C5937 - அஜய் குமார் பார்தி
C5536-அபிஷேக் குமார்
வசீகரிக்கும் மற்றும் தவிர்க்க முடியாத நுண்ணறிவு
சைதன்யாவின் கண்ணோட்டம்
ரத்னம்மாவின் பயணம்: கிராமப்புறத் தொழில்முனைவோர்
கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள மலவல்லி தாலுகா, கெம்புதகெரே கிராமத்தைச் சேர்ந்த ரத்னம்மா, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கல்கள் மிகுந்த பட்டு வளர்ப்புக் கலையில் ஈடுபட்டு வருகிறார்.
பட்டுப் புழு வளர்ப்பு: பட்டு உற்பத்தி செய்ய பட்டுப் புழுக்களை வளர்ப்பது, அதிக உழைப்பு மிகுந்த ஆனால் வெகுமதியளிக்கும் நடைமுறையாகும். இது அவரது குடும்பத்திற்குக் குறிப்பிடத் தக்க வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
பட்டுப்புழுக்கள் கொக்கூன்களை உருவாக்கும் வரை அவற்றின் வாழ்க்கைச் சுழற்சியின் மூலம் அவற்றை வளர்ப்பதை இந்த செயல்முறை உள்ளடக்கியது, பின்னர் இந்தக் கொக்கூன்கள் அவற்றின் பட்டுக்காக அறுவடை செய்யப் படுகின்றன - இது ஜவுளித் தொழிலில் மதிப்பு வாய்ந்த ஒரு பொருளாகும்.
பட்டுப்புழு வளர்ப்பில் தனது அர்ப்பணிப்பு மூலம், ரத்னம்மா தனது ஐந்து பேர் கொண்ட குடும்பத்தை ஆதரிப்பதில் முக்கியமான பங்காற்றியுள்ளார், அவரது கணவர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார் மற்றும் அவரது மகன் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். பட்டுப்புழு வளர்ப்பில் அவரது நிபுணத்துவம், அவருடைய குடும்பத்தின் நிதி ஸ்திரத்தன்மைக்குப் பங்களிக்க உதவியது.
எவ்வாறாயினும், எங்கள் அமைப்பான சைதன்யா இந்தியாவிடமிருந்து அவருக்கு நிதியுதவி கிடைத்ததும் அவரது பயணம் குறிப்பிடத் தக்க அளவில் முன்னேறியது. ₹50,000 கடனுடன், ரத்னம்மா தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், உற்பத்தியை மேம்படுத்தவும், மேலும் தனது தொழிலில் முதலீடு செய்யவும் முடிந்தது. இந்த நிதி ஆதரவு அவருடைய வருமானத்தை மட்டும் உயர்த்தவில்லை, மாறாக, அவருடைய குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான வழிகளையும் அவருக்கு வழங்கியது. ரத்னம்மாவின் கதை, கிராமப்புறத் தொழில்முனைவோர் மீது, குறிப்பாகப் பட்டு வளர்ப்பு போன்ற பாரம்பரியத் தொழில்களில் சிறுகடன் செலுத்தும் தாக்கத்தை எடுத்துக் காட்டுகிறது. சைதன்யா இந்தியாவின் ஆதரவுடன், அவர் தொடர்ந்து செழித்து வருகிறார், தனது சமூகத்திற்குப் பங்களித்து, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் நிதி சுதந்திரம் வேண்டும் என்ற கனவு காணும் மற்றவர்களுக்கு உத்வேகமாக சேவை செய்கிறார்.
பயிற்சிகள் மூலம் திறன்களை மேம்படுத்துதல்
சைதன்யா இந்தியாவில், தொடர்ச்சியான கற்றல் வெறுமே ஊக்குவிக்கப் படுவதில்லை-இது ஒரு வாழ்க்கை முறை. கடந்த காலாண்டில், எங்கள் தலைமை அலுவலக ஊழியர்கள், தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப் பட்ட ஒரு புதுமையான மனிதவள முயற்சியின் ஒரு பகுதியாக, தொடர்ச்சியான மாற்றம் கொணரும் பயிற்சி அமர்வுகளில் பங்கேற்றனர். அனைத்துப் பங்கேற்பாளர்களும் செழுமையுடன் பங்கேற்றதால், தாக்கம் ஆழமாக இருந்தது, பலர் இந்த அமர்வுகள் தங்கள் பணி மற்றும் தினசரி நடைமுறைகளை மாற்றியமைப்பதாகக் கூறினர்.
"சரி சமனான வாழ்க்கை" அமர்வு உண்மையிலேயே ஊழியர்களின் உணர்வைப் பிரதிபலித்தது, உடற்பயிற்சி, ஊட்டச்சத்து மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு இடையேயான இன்றியமையாத தொடர்பை வெளிச்சமிட்டுக்காட்டியது. வாழ்க்கைமுறையில் சிறிய மாற்றங்கள் எவ்வாறு பணியிட உற்பத்தித்திறனையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் கணிசமாக மேம்படுத்தும் என்பதைப் பலரும் கண்டறிந்தனர்.
"டைனமிக் கம்யூனிகேஷன்" அமர்வு தெளிவான, உறுதியான தொடர்புகளுக்கான நடைமுறை நுட்பங்களை வழங்கியது, மேலும் நீடித்த தொழில்முறை உறவுகளை உருவாக்குவதற்குத் தாங்கள் சிறந்த முறையில் தயார் நிலையில் இருப்பதாக ஊழியர்கள் உணர்ந்தனர். குறிப்பாக, இதற்கு முன்பாகத் தகவல் தொடர்பு சவால்களுடன் போராடியவர்களுக்கு இது கண்களைத் திறப்பதாக அமைந்தது.
நிதித் துறைக்கு வெளியே உள்ளவர்களுக்கு, "நிதி அல்லாத தொழில் வல்லுநர்களுக்கான நிதிப் பாடங்கள்" அமர்வு சிக்கலான நிதிக் கருத்துகளைத் தெளிவு படுத்தியது. பல பங்கேற்பாளர்கள் தாங்கள் எவ்வளவு அதிகாரம் பெற்றவர்களாக உணர்கிறோம் என்பதை வெளிப்படுத்தினர், அவர்கள் இப்போது நம்பிக்கையுடன் தனிப்பட்ட மற்றும் பணி தொடர்பான சூழ்நிலைகளில் தகவலறிந்த நிதி முடிவுகளை எடுக்க முடியும் என்பதை உணர்ந்தனர்.
இன்றைய வேகமாக வளர்ந்து வரும் உலகில், "VUCA உலகில் பயனுள்ள முடிவெடுத்தல்" என்பது நிலையற்ற தன்மை (ஏற்ற இறக்கம்), நிச்சயமற்ற தன்மை, சிக்கலான தன்மை மற்றும் தெளிவின்மை ஆகியவற்றில் ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்குகிறது. பணியாளர்கள் சவாலான சூழல்களிலும் சிறந்த முடிவுகளை எடுக்க உதவும் புதிய கருவிகளைப் பெற்றனர், சிக்கல்களைத் தீர்ப்பதற்கான அவர்களின் அணுகுமுறையில் மாற்றம் கொண்டு வந்தனர்.
இறுதியாக, "MS Excel மூலம் சிறந்து விளங்குதல்" அமர்வு இந்த அன்றாடக் கருவியின் திறனை பெரும்பாலானவர்கள் இது வரை கருத்தில் கொள்ளாத வழிகளில் வெளிக்கொண்டு வந்தனர். பலருக்கு, இந்த அமர்வு ஒரு வெளிப்பாடாக அமைந்திருந்தது, அதிக செயல் திறனுடன் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட சவால்களை சமாளிக்க Excel ஐ எவ்வாறு பயன்படுத்த இயலும் என்பதை நிரூபிக்கிறது.
இந்த முன்முயற்சி உண்மையான கற்றல் மைல்கல்லாக இருந்தது, சம்பந்தப்பட்ட ஒவ்வொரு பணியாளரையும் வளப்படுத்தி, சைதன்யா இந்தியாவின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புடன் அவர்களை இணைத்தது. பயிற்சி என்பது திறன் மேம்பாடு மட்டுமல்ல - இது நமது தொழிலாளர்களின் எதிர்காலத்துக்கான முக்கியமான முதலீடாகும். சைதன்யா இந்தியாவில், எந்தவொரு அமைப்பின் உண்மையான வெற்றியும் அதன் மக்களின் வளர்ச்சியில் உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். இந்த மாற்றம் கொணரும் அமர்வுகள் பணியாளர்களின் திறன்களைக் கூர்மைப்படுத்தியது மட்டுமின்றி வாழ்நாள் முழுவதும் கற்றல் கலாச்சாரத்தையும் வளர்த்தன. சிறந்து விளங்குவதற்கும், மாற்றம் கொணர்வதற்கும், புதுமைப் படுத்துவதற்குமான கருவிகளை எங்கள் குழுக்களுக்கு வழங்குவதன் மூலம், நிறுவனத்துடன் இணைந்து அவர்களின் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியை நாங்கள் உறுதி செய்கிறோம்.
இந்தக் காலாண்டு அமர்வுகளில் பங்கேற்பாளர்களின் உற்சாகமான பதில்கள், அவர்களின் பணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் உறுதியான முன்னேற்றங்களை எடுத்துக் காட்டுகின்றன. நாங்கள் முன்னேறும் போது, எங்கள் பணியின் முக்கிய அங்கமாகப் பயிற்சிக்குத் தொடர்ந்து முன்னுரிமை வழங்குவோம், நாளைய சவால்களுக்கு எங்கள் ஊழியர்கள் நன்கு தயாராக இருப்பதை உறுதி செய்வோம்.
உடற்தகுதி முன்முயற்சி: குழு உணர்வை உருவாக்குதல் மற்றும் ஆரோக்கியமாக இருத்தல்
சைதன்யாவில், உடல்ரீதியான செயல்பாடு ஆரோக்கியத்தை அதிகரிப்பது மட்டுமின்றி , குழு உணர்வையும் கூட்டுறவையும் வளர்க்கும் சக்தியையும் கொண்டது என்று நாங்கள் நம்புகிறோம். அதனால்தான், எங்கள் தலைமை அலுவலகம் ஒரு உடற்பயிற்சி முன்முயற்சியை அறிமுகம் செய்துள்ளது, அங்கு நிர்வாகிக் குழு வார இறுதி நாட்களில் எங்கள் அணியினருக்குப் புல்வெளி மைதானங்களை முன்பதிவு செய்கிறது. கிரிக்கெட், கால்பந்து மற்றும் பேட்மிண்டன் போன்ற பிரபலமான விளையாட்டுகளுக்கு நிறுவனம் நிதியுதவி செய்வதால், அணியினர் கூடி விளையாடுவதற்கும், மிகவும் தேவையான சில உடல் ரீதியான செயல்பாடுகளை அனுபவிக்கவும் வாய்ப்பு உள்ளது.
இந்த முன்முயற்சி விரைவில் எங்கள் அணியினர் மத்தியில் மிகவும் பிரபலமாயிற்று. விறுவிறுப்பான கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும், வேகமான கால்பந்து விளையாட்டாக இருந்தாலும் அல்லது நட்புரீதியான பேட்மிண்டன் விளையாட்டாக இருந்தாலும், சக ஊழியர்கள் தங்கள் வழக்கமான பணிச்சூழலுக்கு வெளியே ஒன்று கூடுவதால், மறுக்க முடியாத உற்சாகம் உருவாகிறது. ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை, சிரிப்பு மற்றும் தோழமையுடன் கலந்து, ஒவ்வொரு வார இறுதியையும் பலர் எதிர்பார்க்கும் ஒரு துடிப்பான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. இந்த விளையாட்டுக்கள் எப்படி வேலை வாரத்தில் புத்துணர்ச்சியூட்டும் இடைவேளையை வழங்குகின்றன என்பதை எங்கள் அணியினர் அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார்கள், மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ரீசார்ஜ் செய்ய உதவுகின்றன என்கிறார்கள்.
ஒரு உடற்பயிற்சி மையம் என்பதைத் தாண்டி, இந்த நடவடிக்கைகள் பொதுவாகத் தொடர்பில் இல்லாத வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த குழு உறுப்பினர்களிடையே தொடர்புகளை வளர்த்துள்ளன. அவர்கள் ஒரு கால்பந்து போட்டியில் இணைந்தாலும் அல்லது பேட்மிண்டன் விளையாட்டின் போது ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தினாலும், ஒற்றுமை மற்றும் பரஸ்பர ஆதரவின் உணர்வு தெளிவாகத் தெரிகிறது. இவகையான தொடர்புகள் பணியிட உறவுகளை வலுப்படுத்துகின்றன, மேலும் வலுவான, ஒன்றுபட்ட குழுவை உருவாக்குகின்றன.
உடற்தகுதி மற்றும் குழுவாக இயங்குவதை ஊக்குவிப்பதன் மூலம், சைதன்யா தனது குழு உறுப்பினர்களின் நல்வாழ்வுக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளித்து, சீரான பணி-வாழ்க்கை என்னும் நற்பழக்கத்தை உறுதி செய்கிறது. இந்த உடற்பயிற்சி முன்முயற்சி சுறுசுறுப்பாக இருக்கச் செய்வது மட்டுமின்றி, வலுவான அணிகள் மற்றும் உறவுகளை, ஆடுகளத்திலும் அதற்கு வெளியேயும் உருவாக்குகிறது.
எங்கள் அணியினர் விளையாடுவதற்கும் விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கும் இந்த வாய்ப்புகளைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறார்கள், நட்பு ரீதியான போட்டி மற்றும் வேடிக்கைகள் நிறைந்த இந்த வார இறுதிகளைத் தாங்கள் எவ்வளவு ரசிக்கிறோம் என்பதைப் பலர் வெளிப்படுத்துகிறார்கள். இந்த முயற்சி ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமை உணர்வைத் தொடர்ந்து ஊக்குவிப்பதால், வரும் நாட்களில் இன்னும் அதிகமான பங்கேற்பை எதிர்பார்க்கிறோம்.
எங்கள் CSR செயல்பாடுகள் பற்றிய விரிவான அறிவிப்பு:
வெள்ள நிவாரணப்பணிகள்
எங்கள் CSR குழு கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிராவில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு முக்கியமான உதவிகளை வழங்கியது. 49 கிராமங்களில் உள்ள 1,900 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள், படுக்கை விரிப்புகள் மற்றும் பாய்கள் விநியோகிக்கப் பட்டன.
பேரிடரால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இந்த உதவி உடனடி நிவாரணம் அளித்தது. எங்கள் அணிகள் பொருட்களை விநியோகிப்பதில் கோகாக் மற்றும் கும்தா அணிகள் முக்கியப் பங்கு வகித்தன, CSR குழு நிவாரணம் மிகவும் பாதிக்கப் படக்கூடியவர்களுக்குப் பயனளிக்கிறது.
கல்வி முயற்சி: கற்றல் மையங்கள்
எங்கள் கல்வித் திட்டத்தின் கீழ், ஜார்கண்ட் மாநிலம், பலாமு மாவட்டத்தில் உள்ள கற்றல் மையங்கள், இளம் மனங்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உள்ளன. CLE அறக்கட்டளையுடன் இணைந்து செயல்படும் இந்த மையங்கள், 10 இடங்களில் உள்ள 480 மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கற்பித்தலின் கலவையை வழங்குகின்றன. பள்ளிக்குப் பின் நிகழ்ச்சி, மதியம் 3:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை, தொடர்ந்து மாணவர்களை ஈடுபடுத்துகிறது, கல்வி இடைவெளியைக் குறைக்க உதவுகிறது மற்றும் இந்தக் குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குகிறது.
மொபைல் ஹெல்த் யூனிட் (MHU)
பீஹாரில், கயா மாவட்டத்தில் உள்ள எங்கள் மொபைல் ஹெல்த் யூனிட், தொலைதூர கிராமங்களுக்கு அத்தியாவசிய உடல்/ மன நல சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. ஜூலை முதல் செப்டம்பர் 2024 வரை, 5,180 பேர் (2,020 ஆண்கள் மற்றும் 3,160 பெண்கள்) மருத்துவ சிகிச்சை பெற்றனர். இரத்த அழுத்தம், நீரிழிவு, மூட்டுவலி, இரத்த சோகை, தோல் அழற்சி, தசை வலி மற்றும் இரைப்பை அழற்சி ஆகியவற்றுக்கான சிகிச்சை பொதுவாகப் பெருமளவு நடக்கிறது. MHU உயர்மட்ட மருத்துவப் பராமரிப்புக்காக நான்கு கேஸ்களையும் பரிந்துரைத்தது. மேலும், சமூகங்களின் நல்வாழ்வைப் பேணுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டன.
காடு வளர்ப்புத் திட்டம்
கர்நாடக மாநிலம் தாவண்கரே மாவட்டம் ஜகலூரில் கடந்த ஆண்டு தொடங்கப் பட்ட காடு வளர்ப்புப் பணிகள் தற்போது பராமரிப்பில் உள்ளன. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் SDMC உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன், மரம் நடப்பட்ட பகுதிகள் நன்கு பராமரிக்கப்பட்டு, தண்ணீர் விநியோகம் மற்றும் பாதுகாப்பு மூலம் இளம் மரங்கள் செழித்து வளர்கின்றன. செப்டம்பர் 2024 நிலவரப்படி, மரங்களுக்கு 11 மாதங்கள் ஆகின்றது மற்றும் ஆரோக்கியமாக வளர்கின்றன. இது சுற்றுச்சூழல் நீடித்து நிலைக்கும் தன்மைக்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.
இந்தக் காலாண்டில் எங்கள் பெங்களூரு தலைமையகம் இரண்டு அழகான கொண்டாட்டங்களைக் கண்டது - கணேஷ் சதுர்த்தி மற்றும் ஓணம் - இது நம் பணியிடப் பிணைப்பை வலுப்படுத்தியது மற்றும் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டியது.
விநாயக சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது, எங்கள் குழுவினர் துடிப்பான பாரம்பரிய உடைகளில் ஒன்று கூடி, ஒரு இதயபூர்வமான பூஜையில் கலந்து கொண்டனர், அது அலுவலகத்தை நேர்மறையான உணர்வுகளால் நிரப்பியது. அந்த இடம் வண்ணமயமான அழகூட்டலால் அலங்கரிக்கப் பட்டிருந்தது, மேலும் சிற்றுண்டிகள், புன்னகைகள் மற்றும் மகிழ்ச்சியான உரையாடல்களின் பகிர்வுகளால் இந்த நிகழ்வு சிறப்புற்றது. அன்றைய தினம் விநாயகப் பெருமானின் தெய்வீக ஆசீர்வாதத்தையும் எங்கள் குழுவினர் பெற்று மகிழ்ந்தனர். அது மட்டுமின்றி இந்தக் கொண்டாட்டம் நமது சைதன்யா இந்தியா குடும்பத்தின் வலிமையை வெளிக்கொண்டு வந்தது.
விரைவில், துடிப்புமிகு ஓணம் பண்டிகையை நாங்கள் வரவேற்றோம். அறுவடைக் காலத்தைக் குறிக்கும் பாரம்பரிய கேரள உணவு வகைகளை ருசித்து, மகிழ்ச்சிகரமான ஓணம் சத்யாவை எங்கள் குழுவினர் உண்டு மகிழ்ந்தனர். இந்தப் பண்டிகை மதிய உணவு வெறும் உணவு என்பதை விட மிக அதிகமாக மாறியது - இது பிணைப்பு, சிரிப்பு மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தின் ஒரு தருணம். பாரம்பரியம் மற்றும் ஒற்றுமையின் செழுமையை அனுபவித்து, நாங்கள் ஒன்றாகச் சேர்ந்த போது ஓணத்தின் மகிழ்ச்சியான உணர்வு அழகாகப் படம்பிடிக்கப் பட்டது.
இந்தப் பண்டிகைகளை நாம் கொண்டாடுகையில், நமது கூட்டு மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றி ஆகியவை ஒற்றுமையின் அடித்தளத்திலேயே கட்டமைக்கப் பட்டுள்ளன என்பதை நினைவு கூருகிரோம். இந்த அற்புதமான திருவிழாக்களின் மகிழ்ச்சி அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள்!
இந்தத் தகவல்தொடர்பு வழிமுறைகளின் மூலம், உங்களுடன் தினசரி தொடர்பு கொள்ள விரும்புகிறோம். எங்கள் நிறுவனத்தில் காலாண்டுக்கு ஒருமுறை லேட்டஸ்ட் அப்டேட்ஸ் குறித்து உங்களுக்குத் தெரியப்படுத்துவதே எங்கள் நோக்கம். கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் குழுவானது @சைதன்யாவுடனான பயணத்தை எங்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளும் சக ஊழியர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
உங்கள் குழுவின் செயல்பாடுகளின் படங்கள், கள ஆய்வில் கண்ட சுவாரஸ்யமான விஷயங்கள், கதைகள், குறிப்பிடத்தக்க வாடிக்கையாளருடனான சந்திப்பு அல்லது நீங்கள் கண்ட சிந்தனையைத் தூண்டும் விஷயங்கள் குறித்த கட்டுரை போன்ற சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள ஏதேனும் உங்களிடம் இருந்தால், எங்களுக்கு communication@chaitanyaindia.in என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு உங்களை ஊக்குவிக்கிறோம். எதிர்காலத்தில் உங்களிடம் இருந்து கூடுதல் பங்களிப்புகளை பெற நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.