அனுப் குப்தா

(நிறுவன செயலாளர்)

நிர்வாகத்தின் செய்தி:

திரு. சைதன்யா உறுப்பினர்களே!

முதலில், மீண்டும் ஒரு வெற்றிகரமான நிதியாண்டு அமைய உங்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் நாங்களும் மிகவும் நல்ல முறையில் வளர்ந்து வருகிறோம். நமது சைதன்யா நிறுவனம் ஒரு வேகமாக வளர்ந்து வரும் NBFC-MFI நிறுவனமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்தச் சாதனைக்கு காரணம் நமது தரம் மிக்க சேவை மற்றும் பெரு-நிறுவனங்களுக்கான நிர்வாக நடைமுறைகளின் மிக உயர்ந்த தரத்தின் மீது நாம் கொண்டிருந்த அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகும்.

2020 ஆம் ஆண்டு டிசம்பர் மதம் நான் சைதன்யா நிறுவனத்தில் செயலாளர் மற்றும் இணக்க அதிகாரியாக பணியில் சேர்ந்தேன். கோவிட்-19 நோய் தொற்று பரவலில் இருந்து இன்னமும் மீண்டு வரும் ஆண்டாக 2020-21 நிதியாண்டு குறிப்பிடப்பட்டிருந்த நிலையில்,  முன்னெப்போதும் இல்லாத அளவில் பல்வேறு சவால்களை நாம் எதிர்கொண்ட போதிலும், அந்த ஆண்டுக்கான ஃபைனான்ஸ் செயல்பாடுகள் பாராட்டத்தக்கதாக இருந்தது. மார்ச் 31, 2023 அன்று நிதியாண்டு முடிவடையும்போது, நாம்கடைப்பிடித்டு வந்த ஆறு முக்கிய கோட்பாடுகளான நியாயம், கற்றல், தகுதி, வெளிப்படைத்தன்மை, மரியாதை மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை எவ்விதத்திலும் குறைவில்லாமல் கடைபிடித்ததன் காரணமாக சைதன்யா நிறுவனம் தொடர்ந்து புதிய சாதனைகளை எட்டி வருகிறது. இந்த கோட்பாடுகள் நமது கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இது நமது  பணியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் செயல்திறனைத் தூண்டுகிறது.

தனிப்பட்ட முறையிலும், தொழில்ரீதியிலும், சைதன்யா நிறுவனத்தில் வளர்ச்சிக்குரியதாக முன்னேற்றத்தை ஒட்டியே உள்ளது. வாழ்க்கையில் வளர்ச்சி மட்டுமே நிலையானது என்று நான் உறுதியாக நம்புகிறேன், மேலும் நமது  இடைவிடாத சிறந்த ஈடுபாடு நமது முதன்மை நோக்கமாக உள்ளது. நமது முக்கிய கோட்பாடுகளும், நல்ல நிறுவனதிற்கான நிர்வாக நடைமுறைகளுக்கான அர்ப்பணிப்பும் கொண்டு வழிநடத்தப்பட்டு, எதிர்காலத்தில் மேலும் அதிக மற்றும் பெரிய அளவிலான சாதனைகளை எட்ட தொடர்ந்து பாடுபடுவோம்.

 எட்டப்பட்ட மைல்கற்கள்!


"எங்கெல்லாம் ஒரு படிக்கல் இருக்கிறதோ அங்கே ஒரு மைல்கல்லும் இருக்கும்"


ஒரு நிறுவன அமைப்பாக, நமது ஒவ்வொரு அடியையும் போற்றத்தக்க மைல்கல்லாக மாற்ற நாம் கடுமையாக உழைத்து வருகிறோம். இந்த காலாண்டில் நமது தனித்துவமான செயல்திறன் நமது கூட்டு முயற்சிகளுக்கு ஒரு சான்றாக இருக்கும்.


 ஜனவரி மாதம் முதல் நாம் எட்டிய  குறிப்பிடத்தக்க மைல்கற்கள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை இங்கே  வழங்குகிறோம் ஜனவரி 2023 - மார்ச் 2023

நமது வரம்புகளைக் கண்டறிதல்

ஃபீல்ட் டவுன்ஹாலின் சிறப்பம்சங்களாக சைதன்யா நிறுவனத்தின் லீடர்கள் பின்வருவனவற்றை அறிவுறுத்தியுள்ளனர்

ஒரு நிறுவனமாக நாம் நிறுவனத்திற்குள்ளாக பணியாளர்கள் வளர்ச்சியை எட்டுவதற்கான வாய்ப்புகள் சம அளவில் வழங்கப்படுவதை  உறுதி செய்ய முயற்சி செய்கிறோம். நிறுவனத்திற்குள் செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை வளர்ப்பதில் நாம் முழு கவனம் செலுத்துகிறோம். மேலும், ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதில் முக்கியமாக அக்கறை செலுத்துகிறோம்.


சைதன்யா நிறுவனத்தில்  முழுமையான வளர்ச்சியை எட்டுவதற்கான முயற்சிகளின் முப்பரிமாணம்

நாங்கள் இதுவரை வழக்கமாக கற்று கொண்டுள்ளவற்றையும், எங்களின் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் இன்னமும் கற்று கொண்டு வருவதன் மூலமும் எங்களின் தனிப்பட்ட வளர்ச்சியை பெற சைதன்யா நிறுவனம் தீவிர  முக்கியத்துவம் அளிக்கிறது. முழுமையான நல்வாழ்வின் முக்கியத்துவத்தை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எனவே, எங்களின் அனைத்துப் பயிற்சித் திட்டங்களிலும் பிரத்யேக உடல் மற்றும் மனநிலை சார்ந்த ஆரோக்கியதிற்கான பயிற்சிகளும் இணைக்கப்படும். கடந்த காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளில் சில குறிப்பிடத்தக்க மற்றும் சிறப்பு மிக்க நிகழ்வுகள் பின்வருமாறு:

இண்டக்ஷன் டிரெய்னிங் -கோரக்பூர்

இண்டக்ஷன் டிரெய்னிங்- அம்பாலா

TOT டிரெய்னிங்- புனே

LDP டிரெய்னிங்-கர்நாடகா

CRE இண்டக்ஷன் டிரெய்னிங்-மகாராஷ்டிரா

 ரெஃப்ரெஷர் டிரெய்னிங்-ராய்கர் 

இண்டக்ஷன் டிரெய்னிங்-குஜராத்

இண்டக்ஷன் டிரெய்னிங் -உதய்பூர்

வகுப்பறை  பயிற்சி-தர்வாட்

இண்டக்ஷன் டிரெய்னிங்-கோலாப்பூர்

 POSH டிரெய்னிங்-பெங்களூர்

CRE ரெஃப்ரெஷர் டிரெய்னிங்  - மீரட்

சைதன்யாவுடன் 5 ஆண்டுகள்

 சைதன்யா நிறுவனத்தில் இணைந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்ததற்கு வாழ்த்துகள். உங்கள் கூட்டணியை நாங்கள் மனதார பாராட்டுகிறோம். அத்துடன், எதிர்காலத்தில் நீங்கள் மேலும் வெற்றிகளையும் சிறந்த அனுபவங்களையும் பெற விரும்பி வாழ்த்துகிறோம்.

பீகார்

கயா

C3573- உப்தேஷ் குமார்

C3574- அர்ஜுன் குமார்

C3575- சந்தன் குமார்

C3582- அஜித் குமார்

C3696- போலா குமார்

தர்பங்கா

C3453- சந்தோஷ் குமார்

லக்கிசராய்

C3581- கௌஷல் குமார்

பாட்னா

C3709- விஷால் குமார்

மகாராஷ்டிரா

ஜார்கண்ட் 

உத்தரப்பிரதேசம்

கோலாப்பூர்

C3469- பிரசாந்த் உத்தம் பவார்

C3570- ரூபேஷ் சுனில் காம்ப்ளே

சோலாப்பூர்

C3476- சச்சின் அர்ஜுன் திம்திமே

C3566- சிக்கந்தர் லாஹு சூர்யவன்ஷி

C3656- சஜித் ஜைனோடின் பதான்

C3665- பிடே சந்திப் ஆத்மாரம்

டால்டோங்கஞ்ச்

C3578- ஜெய் பிரகாஷ் பாஸ்வான்

கோரக்பூர்

C3452- ராகுல் குமார்

கர்நாடகா 

பெங்களூர்

CR0014- அக்ஷதா படிவல்

CR0016- மகரிஷி ரிதுராஜ்

தவண்கெரே

C3645- அசோக் குமார்

ஹாவேரி

C3689- ரமேஷ் கல்லப்பா தொட்மணி

ஹோஸ்பெட்

சி3446- கும்பர் பசவராஜ்

C3448- திப்பேசுவாமி ஒபன்னா

C3521- ஷரணப்பா வீரப்ப மதார்

C3530- சங்கப்பா

லிங்கசுகூர்

C3490- பசவ ராஜ்

C3635- அல்லப்பா

மைசூர்

C3695- சங்கேத் I கோலசங்கி

சிவமொக்கா 

C3504- பிரகாஷா நாயக் என்சி 

3506- சிவகுமார் எல் ஆர்

C3686- மஞ்சுநாத் ஷெதவாஜி முனவல்லி

விஜயபுரா

C3623 - ஷேக்கப்பா

C3693 - ஸ்ரீஷைல் அகோஜி

துறைசார் நிகழ்வுகள்

இந்த வாய்ப்பு நமது நிறுவனத்தின் பல்வேறு துறைகளைப் பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்க களம் அமைத்து கொடுத்துள்ளது. நமது நிறுவனத்தின் இந்த அம்சம் நமது பயிற்சித் துறையை நாங்கள் சிறப்பாக மேம்படுத்தியுள்ளோம்.

நாம் நமது பணியாளர்களின் செயல்திறனை மேம்படுத்த நிறுவனத்திற்கு உதவும் வகையில் அனைத்து பயிற்சிகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது, ஒரு பணியாளரின் அறிவுத்திறன் மட்டும் செயல்பாட்டு திறனை மேம்படுத்துவது எந்தவொரு நிறுவனத்திற்கும் மிகவும் இன்றியமையாததாகும். இது ஒரு பணியாளரின் செயல்திறனில் மட்டுமல்ல, நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்திறனிலும் எளிதாக காணும் வகையிலான பாசிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்தவல்லது.

இந்த பயிற்சிகளானது நமது பணியாளர்களுக்கு அவர்களின் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் ஒட்டுமொத்த ஆளுமையையும் மேம்படுத்தும் கலந்துரையாடல் மற்றும் பயனுள்ள பயிற்சி  தொகுதிகளை உருவாக்குவதற்கு இது எங்களுக்கு ஒரு உந்துதல் காரணியாக உள்ளது. எங்கள் ஊழியர்களுக்கு பின்வரும் பயற்சிகள் சைதன்யாவில் வழங்கப்பட்டு வருகின்றன:

சினெர்ஜி டிரெய்னிங் (அனைத்து ரீஜினல், கிளஸ்டர்                      மற்றும் ஜோனல் ஃபங்க்ஷனல் மேனேஜர்கள் @ தலைமை            அலுவலகம்)

பயிற்சியாளருக்கு பயிற்சி அளிக்கவும்

தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டம் (UM - களுக்கு)

இண்டக்ஷன்

ரெஃப்ரஷர் டிரெய்னிங் (சேவை / உதவி மைய  துறை                      மற்றும் செயல்பாட்டுக் குழு)

முதல் முறையாக மேனேஜர் ஆனவர்களுக்கான   பயிற்சி

UTM  வழங்கும் குறைந்த செயல்திறன் CRE                                                 கொண்டவர்களுக்கான பயிற்சி

RTM வழங்கும் குறைந்த செயல்திறன் கொண்ட ABM/BM-             களுக்கான பயிற்சி

இத்தகைய பயிற்சிகளானது நமது பணியாளர்களை மிகவும் திறமையாகச் செயல்பட உதவுகிறது. இதன் மூலம் ஈடுபாடு அதிகரித்து, உற்பத்தித்திறன் மேம்படுகிறது. இந்த நோக்கத்தை நோக்கி, சைதன்யாவில், தலைமை அலுவலகம் மற்றும் களத்தில் இருக்கும் சுமார் 90க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பயிற்சிக் குழு முன்னிறுத்தி உழைக்கிறது. 

நமது பணியாளர்களின் செயல்திறனை மேம்படுத்த, கற்றுக் கொள்ளுதல் மற்றும் மேம்பாட்டிற்கான முக்கியத்துவம் எப்போதுமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. நமது  ஊழியர்களுக்கு அடிப்படை மட்டத்தில் இருந்து பயிற்சி அளிக்க, நிறுவனத்தின் வாடிக்கையாளர் தொடர்பு நிர்வாகிகள் (CREகள்) மற்றும் கிளை மேலாளர்கள் (BMகள்) ஆகியோருக்கு மேம்பட்ட பயிற்சிக்கான உதவிகளை வழங்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

சைதன்யாவின் கண்ணோட்டம்

நமது வாடிக்கையாளர்களின் வாழ்க்கையில் நீண்ட கால அடிப்படையில் பயனுள்ள தாக்கத்தை ஏற்படுத்துவதே எங்களின் முக்கிய நோக்கம். சில சமயங்களில் கிளை அலுவலகங்களில் உள்ள நமது ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலன் குறித்து அறிந்து கொள்ள, நாடு தழுவிய அளவிலான பயணத்தை மேற்கொண்டு கிளை அலுவலகங்களுக்கு செல்வதை நாம் வழக்கமாக  கொண்டுள்ளோம். அதன்படி, ஒரு மதிய வெயில் நாளில், பெங்களூரில் உள்ள சைதன்யா தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு குழு கள ஆய்வுக்காக புறப்பட்டது. முதலில் குதிரைகளுக்குப் பெயர் பெற்ற குனிகல் கிளைக்கு சென்றோம். இந்த நகரத்தில் பசுமையான மேய்ச்சல் நிலங்கள் அதிகமாக இருப்பதால், பெங்களூரு நகரத்தின் சந்தடியில் இருந்து நமது புலன்களை ஆற்றுப்படுத்த இந்த பயணம் மிகவும் உதவியாகவே இருந்தது.

களத்தில் நடந்த GRT கலந்தாய்வு ஒன்றில் கலந்துகொண்ட எங்கள் (பெயர் வெளியிட விரும்பாத) குழு உறுப்பினர் ஒருவர் எங்களுடன் பகிர்ந்து கொண்ட தகவல்களில் இருந்து சிலவற்றை  கீழே வழங்குகிறோம்:

"GRT கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக சைதன்யா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுடன் கிட்டத்தட்ட 7 திறமையான பெண் வாடிக்கையாளர்களும் இங்கே வருகை தந்துள்ளனர். நாம் இருக்கும் இந்த நிறுவனம் மிகவும் பாதுகாப்பானது. ஆனால் இங்கே வருகை தந்திருக்கும் இளம் பெண்களின் முகத்தில் வெளிப்படும் புன்னகை, நம்பிக்கை மற்றும் ஆசைகள் பாராட்டுக்குரியவை. அவர்களின் தினசரி செயல்பாடுகளில், சைதன்யா நிறுவனத்துடன் இணைந்து அதன் உதவியுடன், அவர்கள் தங்கள் அன்றாட சிக்கலகளை எதிர்கொள்ளவும், சிறந்த நாளைக்கான நம்பிக்கையை அளிக்கவும் உதவக்  கூடிய ஒரு வழிகாட்டுதலை அவர்கள் உடன் கொண்டுள்ளனர்.

மின்சாரம் இல்லா ஒரு சிறிய அறையில்,  நமது வாடிக்கையாளர்களுடன் அவர்களது பூனை மற்றும் முயலும் கூட இந்த பயிற்சியில் கலந்து கொள்கின்றன. இருப்பினும், பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில், இந்த இளம் பெண்களின் பல கனவுகளைத் தூண்டும் நம்பிக்கையின் ஒளியாக இந்த கலந்தாய்வு இருக்கிறது. ஒரு பெண் தன் குழந்தையை இந்தக் கூட்டத்திற்கு அழைத்து வந்திருக்கிறார். குழந்தை தொடர்ந்து தன் தாயாரை தொந்தரவு செய்கிறது, ஆனாலும் அவர் சைதன்யாவுடன் இணைந்து செயல்பட வழிமுறைகள் கிடைத்துள்ளதை இந்த உலகிற்கு நிரூபிக்க அதை எதோ ஒரு வகையில் தொடர்ந்து சமாளித்துக் கொண்டார்.

இங்கு வருகை தந்திருக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும், அவர் விரும்பும் வாழ்க்கையைப் பெறுவதற்குத் தேவையான அனைத்தையும் செய்து தர தயாராக இருக்கும் மேலாளர்களை நான் அங்கே கண்டேன். அவர்களின் கண்களில் நான் காணும் கனவுகள், தியாகங்கள், அன்பு மற்றும் அர்ப்பணிப்பு அற்புதமாக உள்ளன. அதிகாலையில் காலை உணவு கூட சாப்பிடாமல் இந்த அற்புதமான பெண்கள் சைதன்யா வழங்கவிருக்கும் இந்த அழகான வாய்ப்பைப் பெற இங்கே வருகை தந்திருக்கிறார்கள்.

அவர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களின் இலக்குகளை எட்டவும், அதற்காக கடினமாக உழைக்கத் தயாராக இருப்பதையும் காண்கிறேன். அவர்களின் இலக்குகளுக்காக அவர்களை  வாழ்த்துகிறேன். நமது நிறுவனத்துடனான அவர்களின் பயணம் நிச்சயம் வெற்றி பெறும்!''

ராஜேந்திர சி நந்தக்வாலி

மண்டல மேலாளர்,

சோலாப்பூர்

சைதன்யா தகுதி வரம்புகளுக்கான  ஆர்வலர்கள்

ஒரு நிறுவனமாக, நமது ஊழியர்களுக்கான ஆரோக்கியமான பணிச்சூழலை உருவாக்குவதன் மூலம் அவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்த நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். எங்கள் நியூஸ் லெட்டரில் ஒரு புதிய பிரிவை இத்துடன் அறிமுகம் செய்கிறோம். இதன் மூலம் நமது ஊழியர்களின் குறிப்பிடத்தக்க உடற்தகுதிக்கான செயல்பாடுகள் பாராட்டுதலைப் பெற்றுள்ளன. அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் ஆரோக்கியமான மற்றும் வலிமையான வாழ்க்கை முறையை மேற்கொள்வது  பற்றி சோலாபூரின் மண்டல மேலாளர் ராஜேந்திர சி நந்தக்வாலியின் எழுச்சியூட்டும் கதையை இத்துடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. அதனைக் கேட்டு உந்துதல், ஊக்கம் மற்றும் உத்வேகம் பெற தயாராகுங்கள், உடற்தகுதி பெற்று வெற்றி பெற உங்கள் சொந்த முயற்சியை தொடங்குங்கள்.

எங்கள் உடற்பயிற்சி சாகச அனுபவங்களில் பங்குபெற உங்களை  வரவேற்கிறோம்!

வணக்கம், எனது உடற்பயிற்சி அனுபவத்தை நமது   சைதன்யா குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் ஃபிட்னஸ் லைஃப் ஸ்டைலை பெறுவதற்கான எனது பயணத்தைத் தொடங்கியபோது சுமார் 97 கிலோ எடையுடன் இருந்தேன். இன்று, நான் 80 கிலோவுக்கும் கீழே எனது எடையைக் குறைத்திருக்கிறேன் என்பதை மிகவும் பெருமையுடன் சொல்கிறேன். சைதன்யா நிறுவனத்தின் ஆரோக்கியத்திற்கான குழு எனக்கு முழு உடல்தகுதி பெறுவதன் முக்கியத்துவத்தை அறிமுகப்படுத்தியது. நான் 2016 ஆம் ஆண்டில் சைதன்யாவில் சேர்ந்தேன் - அப்போதிருந்து நான் சைதன்யாவின் ஆரோக்கியதிற்கான வாட்ஸ்அப் குழுவில் உறுப்பினராக இருக்கிறேன்.

நான் எந்தவொரு ஃபேன்ஸியான உபகரணங்களையும் பயன்படுத்தவில்லை, ஜிம்முக்கும் செல்லவில்லை. ஆகஸ்ட் 2016 இல், எங்கள் நிறுவனத்தின் வாட்ஸ்அப் குழு மற்றும் எங்களின் சிறந்த லீடர்களில் ஒருவராக உள்ள  ஆனந்த் சார் மற்றும் கணேஷ் சார் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நான் தொடர்ந்து நடைபயிற்சியும் உடற்பயிற்சியும் செய்யத்  தொடங்கினேன். ஆனந்த் சாரை நாங்கள் ஒவ்வொரு முறை சந்தித்த ஒவ்வொரு முறையும்  அது உடற்தகுதி தொடர்பான கேள்விகளுடனேயே  தொடங்கியது. நான் ஃபிட்னஸ் ஆர்வலர் அல்ல, ஆனாலும், மேற்கூறிய எங்கள் ஆரோக்கியதிற்கான  குழுவில் எனது உடற்பயிற்சி படங்களை போஸ்ட் செய்வேன். எனது படங்களுக்கு ஆனந்த் சார் இடும் ஒவ்வொரு லைக்கும், இந்த ஃபிட்னஸ் பயணத்தில் உறுதியாக இருக்க ஒவ்வொரு நாளும் என்னைத் தூண்டியது.

ஆனந்த் சார் எங்கள் கிளைக்கு வந்தபோது, அவருடன் மதிய உணவு சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. சுவையாக ஏதாவது சாப்பிடலாம் என்றபோது ஒரு கப் சாதமும் அதனுடன் கொஞ்சம் பருப்பும் மட்டும் எடுத்துச் சென்றதைக் கண்டேன். நான் ஆர்வமாக கேட்டபோது, தொடர்ந்து பேசிய அவர், ஃபிட்டாக இருக்க நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மட்டும் போதாது என்றும், உணவுமுறைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார். அப்போதிருந்து, நான் எனது உணவுப் பழக்கத்திலும் கவனமாக இருக்கிறேன்.  நான் காபி, டீ சாப்பிடுவதில்லை, சர்க்கரையை முற்றிலும் தவிர்க்கிறேன். எனது சர்க்கரை தேவைக்காக வெல்லம் உபயோகிக்கிறேன். மேலும் எனது சக ஊழியர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சர்க்கரையை தவிர்க்கவும், அதற்கு பதிலாக வெல்லத்தை பயன்படுத்தவும் அறிவுரை செய்து ஊக்குவிக்கிறேன். சைதன்யாவில் இருக்கும் இந்த 7 வருடங்களில் எனது எடையை 80 கிலோவுக்கும் கீழாக குறைக்க முயற்சி செய்து வருகிறேன்.

நான் தினசரி 20 நிமிடங்கள் இடைவிடாத ஓட்ட பயிற்சி மற்றும் 25 நிமிடங்கள் நடைப்பயிற்சியுடன் 15-20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்கிறன்- இதில் வாரத்தில் 4 முதல் 5 நாட்கள் யோகா மற்றும் தியானம் ஆகியவையும் அடங்கும். இந்த உடற்பயிற்சிகளை மேலும் தொடர என்னை ஊக்குவிப்பது எது என்று அனைவரும் எண்ணைக்  கேட்கிறார்கள். உடற்பயிற்சியின் போது வெளியேறும் வியர்வைதான் என்னைத் உற்சாகப்படுத்துகிறது என்பதே எனது பதில்.

சுனில் ஷெட்டி, கத்ரீனா கைஃப் மற்றும் பல உடற்பயிற்சி ஆர்வலர்களின் ஊக்கமூட்டும் வீடியோக்களைப் பார்ப்பதற்கும் எனது ஓய்வு நேரத்தைப் பயன்படுத்திக்கொள்கிறேன்.

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்ற பழைய பழமொழியை இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். ஆரோக்கியமான மனிதனாக இருப்பதற்கான காரணங்களை நான் உணர்ந்து கொண்டேன். என் பயணம் உங்களையும் என்னைப் போல் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழத் தூண்டும் என்று நம்புகிறேன்.

சமூக ஊடகங்களில் எங்களைப் பின்தொடரவும்

கேலரி

இந்தத் தகவல்தொடர்பு வழிமுறைகளின் மூலம், உங்களுடன் தினசரி  தொடர்பு கொள்ள விரும்புகிறோம். எங்கள் நிறுவனத்தில் காலாண்டுக்கு ஒருமுறை லேட்டஸ்ட் அப்டேட்ஸ் குறித்து உங்களுக்குத் தெரியப்படுத்துவதே எங்கள் நோக்கம். கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் குழுவானது @சைதன்யாவுடனான பயணத்தை எங்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளும் சக ஊழியர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் குழுவின் செயல்பாடுகளின் படங்கள்,  கள ஆய்வில் கண்ட சுவாரஸ்யமான விஷயங்கள், கதைகள், குறிப்பிடத்தக்க வாடிக்கையாளருடனான சந்திப்பு அல்லது நீங்கள் கண்ட சிந்தனையைத் தூண்டும் விஷயங்கள் குறித்த கட்டுரை போன்ற சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள ஏதேனும் உங்களிடம் இருந்தால், எங்களுக்கு  communication@chaitanyaindia.in என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு உங்களை ஊக்குவிக்கிறோம். எதிர்காலத்தில் உங்களிடம் இருந்து கூடுதல் பங்களிப்புகளை பெற நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.