தீபக் குமார் ஜா
தலைவர் - வணிகம்
தீபக் குமார் ஜா
தலைவர் - வணிகம்
நிர்வாகத்தின் செய்தி
சைதன்யா இந்தியா ஃபின் கிரெடிட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் புதிய ஆண்டைத் தொடங்கும் போது, நமது வணிகக் குழு மற்றும் சைதன்யா குடும்பத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக நான் பெருமிதமும் நன்றியும் தெரிவித்து கொண்டுள்ளேன். ஒன்றாக, வணிக வளர்ச்சியை உந்துதல், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல் மற்றும் மிக முக்கியமாக, கிராமப்புற இந்தியா முழுவதும் பல லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்துதல் இவற்றுக்கான ஒரு சிறந்த பாதையை நாம் செதுக்கியுள்ளோம்.
நாம் ஒரு குழுவாக சிறந்த வளர்ச்சியைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறோம். மேலும் நம் தொழில் துறையில் மிக உயர்ந்த தரமான போர்ட்ஃபோலியோக்களில் ஒன்றைப் பராமரித்துள்ளோம். சிறந்த வணிகத்தின் விளைவாக மிகச் சிறந்த கலாச்சாரத்துடன் நல்ல உயர் செயல்திறன் கொண்ட குழுவை உருவாக்க நாம் தொடர்ந்து பணியாற்றி வருவதால் இது சாத்தியமானது.
ஒரு நல்ல தரமான போர்ட்ஃபோலியோவுடன் வளர்ச்சியின் எதிர்பார்ப்புகள் தொடர்வதால், வரும் ஆண்டு மிகவும் சவால் மிக்கதாக இருக்கும். நம் வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு சிறப்பாகச் சேவை செய்வது என்பதை நாம் மறுபரிசீலனை செய்வோம். தயாரிப்பு மற்றும் செயல்முறையில் புதுமை என்பது நிறுவனத்தின் முக்கியமான கவனம் செலுத்தும் பகுதிகளில் ஒன்றாக இருக்கும்.
ஒழுக்கத்தை மேம்படுத்துதல், வரையறுக்கப் பட்ட செயல்முறைகளைக் கடைபிடித்தல், மையம் மற்றும் கிளையின் தரத்தைப் பராமரித்தல், நமக்கு வர வேண்டிய தொகைகளை வசூல் செய்யும் திறனை மேம்படுத்துதல், நம் பணியாளர்கள் நன்றாக நடத்தப் படுவதை உறுதி செய்தல், நமக்கான களமானது அதிக அளவு மக்கள் நட்பு மற்றும் செயல்திறன் நட்பு இரண்டையும் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக நமது கலாச்சாரத்தை மேம்படுத்துதல் ஆகியவை எங்களுக்கு இந்தத் துறையில் முக்கியமான கவனம் செலுத்தும் சில பகுதிகளாக இருக்கும்.
ஒரு குழுவாக நாம் நம்மிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதை விடச் சிறப்பாக வழங்குவோம் என்று நான் நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் வரவிருக்கும் ஆண்டுக்கான என் மனமார்ந்த வாழ்த்துகள்.
நன்றியுடன்,
தீபக் ஜா
நமது வரம்புகளைக் கண்டறிதல்
எட்டப்பட்ட மைல்கற்கள்!
"எங்கெல்லாம் ஒரு படிக்கல் இருக்கிறதோ அங்கே ஒரு மைல்கல்லும் இருக்கும்"
ஒரு நிறுவன அமைப்பாக, நமது ஒவ்வொரு அடியையும் போற்றத்தக்க மைல்கல்லாக மாற்ற நாம் கடுமையாக உழைத்து வருகிறோம். இந்த காலாண்டில் நமது தனித்துவமான செயல்திறன் நமது கூட்டு முயற்சிகளுக்கு ஒரு சான்றாக இருக்கும்.
₹6,000 கோடி AUM ஐக் கொண்டாடுகிறோம்
சைதன்யா இந்தியாவின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நமது போர்ட்ஃபோலியோ ₹6,000 கோடி AUM (ஏ யூ எம்) ஆக வளர்ந்துள்ளது, இது சைதன்யா குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் கூட்டு முயற்சிகள், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் சான்றாகும். இந்தச் சாதனை, இந்தியா முழுவதும், தாக்கத்தை ஏற்படுத்தும் நிதி உதவியை வழங்குவதில் சிறப்பு மற்றும் புதுமைக்கான எங்கள் உறுதிப்பாட்டின் ஒரு கலங்கரை விளக்கமாக உள்ளது.
இந்த மைல் கல்லை நாங்கள் கொண்டாடும் அதே நேரத்தில், எங்கள் செயல்பாடுகளின் அனைத்து அம்சங்களிலும் புதுமைகளைத் தழுவி, சிறப்பை வளர்ப்பதற்கான எங்கள் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதி செய்கிறோம். எங்கள் இலக்கு தெளிவாக உள்ளது: இந்தியாவில் மிகப் பெரிய மற்றும் சிறந்த MFI (எம்எஃப்ஐ) ஆக நாம் ஆக வேண்டும். எங்கள் பணியில் உறுதியான கவனம் செலுத்துவதன் மூலம், புதிய மைல் கற்களை சாதிப்பதைத் தொடர்வோம் மற்றும் நீண்ட காலம் நிலைத்திருக்கும் தாக்கத்தை உருவாக்குவோம். குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் நாடு முழுவதும் செழிக்க வாய்ப்புகளை உருவாக்குவோம்.
சைதன்யா இந்தியாவில், “அனைவரையும் உள்ளடக்கிய ஒரு நிதி அமைப்பானது வாழ்க்கையை மாற்றும்” என்ற நம்பிக்கையால் எங்கள் பயணம் உந்தப் படுகிறது. நாம் முன்னோக்கிப் பார்க்கையில், தனி நபர்கள் மற்றும் சமூகங்கள் தங்கள் கனவுகளை அடையவும், எதிர்கால சந்ததியினருக்கு ஒளிமயமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்பவும் இந்தப் பயணத்தை ஒன்றாகத் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
சைதன்யாவின் முழுமையான வளர்ச்சி முயற்சிகளின் பல்வண்ணக் காட்சிக்கள்
விரிவான கற்றல் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் தொடர்ச்சியான கற்றல் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை உண்டாக்குவதற்கு சைதன்யா வலுவான முக்கியத்துவத்தை அளிக்கிறது. முழுமையான நல்வாழ்வின் முக்கியத்துவத்தை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எனவே, எங்களின் அனைத்துப் பயிற்சித் திட்டங்களிலும் அர்ப்பணிப்புள்ள உடல் மற்றும் மன நல அமர்வுகள் அடங்கும். கடந்த காலாண்டின் சுவாரஸ்யமான சில காட்சிகள் பின்வருமாறு:
பேட்ச் பயிற்சிகள் @ சைதன்யா
ஜூன் 2023 முதல், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர் சேவை நிர்வாகிகளுக்கு (CRE’s- சிஆர்ஈ) விரிவான பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன், நாடு முழுவதும் சைதன்யாவின் பயிற்சி மையங்களை நிறுவுவதில் எங்கள் பயிற்சிக் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த மையங்கள், இந்தியா முழுவதும் 13 இடங்களில் பரவி, எங்கள் பயிற்சி CRE களுக்கு அத்தியாவசிய செயல்முறை அறிவை வழங்குவதற்கான மையங்களாகச் செயல் படுகின்றன.
எங்கள் அணுகுமுறையானது CRE க்களைத் தேவையான திறன்கள் மற்றும் அறிவுடன் தயார் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தீவிர ஆறு நாள் பேட்ச் பயிற்சித் திட்டத்தை வலியுறுத்துகிறது. பயிற்சி முறையானது, சிறந்த புரிதல் மற்றும் தாம் பெற்ற அறிவைத் தக்க வைத்தலை உறுதி செய்வதற்காக ரோல்-பிளேயிங் (தன் ரோலை நடித்துக் காட்டுதல்) பயிற்சிகள் மற்றும் தினசரி மதிப்பீடுகள் போன்ற புதுமையான நுட்பங்களை உள்ளடக்கியது.
சைதன்யாவின் நிறுவனக் கலாச்சாரம், மதிப்பு மற்றும் செயல்பாட்டு நெறிமுறைகளைப் புரிந்து கொள்வதற்கான அடித்தளத்தை அமைக்கும் நிகழ்ச்சியின் முதல் நாள் முழுவதுமாக நிறுவன அறிமுகத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அனுபவம் மிகுந்த பயிற்சியாளர்களால் எளிதாக்கப்படும் ஆழ்ந்த செயல்முறைப் பயிற்சிக்குப் பின்வரும் ஐந்து நாட்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
இந்த கட்டமைக்கப்பட்ட பயிற்சி மாதிரியை கடைபிடிப்பதன் மூலம் எங்கள் பயிற்சி CRE க்களுக்கு சைதன்யாவின் செயல்முறைகள், தயாரிப்புகள் மற்றும் செயல்பாட்டு அமைப்புகளின் வலுவான அடித்தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
இந்த விரிவான அணுகுமுறை அவர்களின் புரிதலை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, ஊழியர்கள் மற்றும் எங்கள் நிறுவனத்தின் வெற்றி சூழ்நிலையை வளர்த்து, அவர்களுக்குத் தங்கள் பாத்திரங்களில் சிறந்து விளங்கத் தேவையான நிபுணத்துவத்தையும் அளிக்கிறது.
இந்தக் காலாண்டில் நடத்தப்பட்ட பேட்ச் பயிற்சிகளின் சில காட்சிகள் கீழே பகிரப் பட்டுள்ளன:
சுல்தான்பூர் பயிற்சி மையம் 11வது பேட்ச் பயிற்சி
டால்டன்கஞ்ச் பயிற்சி மையம்- முதல் பேட்ச் பயிற்சி
ஹடா பயிற்சி மையம் 12வது பேட்ச் பயிற்சி
அலிகார் பயிற்சி மையம் - 7வது பேட்ச் பயிற்சி
அலிகார் பயிற்சி மையம்- 3வது பேட்ச் பயிற்சி
டால்டன்கஞ்ச் பயிற்சி மையம் - 2வது பேட்ச் பயிற்சி
போபால் பயிற்சி மையம் -19வது பேட்ச் பயிற்சி
அஜ்மேர் பயிற்சி மையம்- 11வது பேட்ச் பயிற்சி
சித்ரதுர்கா பயிற்சி மையம் -26வது பேட்ச் பயிற்சி
போபால் பயிற்சி மையம் -13வது பேட்ச் பயிற்சி
கலபுர்கி பயிற்சி மையம் - 3வது பேட்ச் பயிற்சி
சுல்தான்பூர் பயிற்சி மையம் -12வது பேட்ச் பயிற்சி
புதுக்கோட்டை பயிற்சி மையம் - 2வது பேட்ச் பயிற்சி
அலிகார் பயிற்சி மையம் -7வது பேட்ச் பயிற்சி
வதோதரா பயிற்சி மையம் -17வது பேட்ச் பயிற்சி
லாட்டூர் பயிற்சி மையம்- 26வது பேட்ச் பயிற்சி
இந்தக் காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட மற்ற பயிற்சி முறைகள்
அவுரங்காபாத் பயிற்சி மையம் - காலை உடற்பயிற்சி
ஹோஸ்பெட் பயிற்சி மையம் - நிறுவன அறிமுகப் பயிற்சி
கோலாப்பூர் பிராந்தியம் - நிறுவன அறிமுகப் பயிற்சி
ஹோஸ்பெட் பிராந்தியம் - நிறுவன அறிமுகப் பயிற்சி
கலபுர்கி பிராந்தியம் - நிறுவன அறிமுகப் பயிற்சி
சுல்தான்பூர் பிராந்தியம் - நிறுவன அறிமுகப் பயிற்சி
புனே கிளஸ்டர் அலுவலகம் 2வது பேட்ச் - முதல் முறை மேலாளர் பயிற்சி
புனே கிளஸ்டர் அலுவலகம் - முதல் முறை மேலாளர் பயிற்சி
வாராந்திர வினாடி வினாக்களில் தொடர்ந்து விற்றிபெற்றவர்கள்
(எங்கள் அமைப்பின் அனைத்து இந்திய கிளைகளிலிருந்தும் CRE-கள் பங்கேற்றன )
நயனா GN
சித்ரதுர்கா, கர்நாடகா.
KT ராகேஷா
சித்ரதுர்கா, கர்நாடகா.
கீர்த்தி G
சித்ரதுர்கா, கர்நாடகா.
B ரமேஷா
சித்ரதுர்கா, கர்நாடகா.
சித்தையா
சித்ரதுர்கா, கர்நாடகா.
பயிற்சிக் குழுவால் ஒரு புதிய முயற்சியாக அறிமுகப் படுத்தப் பட்ட செயல்முறை மற்றும் கொள்கைகள் குறித்த வாராந்திர வினாடி வினா, நிறுவனத்திற்குள் அறிவை மேம்படுத்துவதற்கான ஒரு மூலக்கல்லாக மாறியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், மேற்கூறிய CREகள் இந்தக் காலாண்டின் (ஜனவரி-மார்ச் 2024) வினாடி வினாக்கள் முழுவதிலும் முன் மாதிரியான நிகழ்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளனர். இது அவர்களின் பாடம் பற்றிய ஆழ்ந்த புரிதல் மற்றும் பாடத்தில் அவர்களுக்குள்ள தேர்ச்சி இவற்றைத் தொடர்ந்து வெளிப்படுத்துகிறது.
பயிற்சிக் குழு 5 செயல்முறை தொடர்பான கேள்விகளைப் பகிர்ந்து கொள்கிறது, இவை எங்கள் HRMS (ஹெச்ஆர்எம்எஸ்) இயங்குதளமான PeopleStrong (பீப்பிள்ஸ்ட்ராங்) உதவியுடன் சம்பந்தப் பட்ட ஊழியர்களுக்கு மார்க் செய்யப்படுகின்றன. கேள்விகள் முக்கியமாக CRE க்கு மார்க் செய்யப்பட்டிருப்பதால், பயிற்சிக் குழு இந்தக் கேள்விகளை அவர்களின் வசதிக்காக இந்தி, கன்னடம், தமிழ் மற்றும் ஒடியா ஆகிய 4 மொழிகளில் மொழி பெயர்க்கிறது. கேள்விகள் பொதுவாக CRE இடமிருந்து பிராந்திய மேலாளர் (RM -ஆர்எம்) நிலைக்கு மார்க் செய்யப் படும்.
தொடர்ந்து தங்கள் பணியில் சாதிப்பவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! மேலும் எங்களது அடுத்த இதழில் எங்கள் ஊழியர்கள் பலரின் பெயர்கள் குறிப்பிடப்படுவதை எதிர்பார்க்கிறோம்!
சைதன்யாவுடன் 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் இணைந்து பணியாற்றுவோர்
எங்கள் ஊழியர்களே எங்கள் பலம், எங்கள் நிறுவனம் எங்கள் ஊழியர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் உருவகமாகும். எங்களுடனான எங்கள் ஊழியர்கள் ஒவ்வொருவரையும் நாங்கள் மதிக்கிறோம். எங்கள் நிறுவனத்தில் 10 புகழ்பெற்ற ஆண்டுகளை நிறைவு செய்த எங்கள் அணியினரின் பெயர்கள் இங்கே உள்ளன.
C0383 - மஞ்சுநாத் சித்தப்பா நாயக்
சைதன்யாவுடன் 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் இணைந்து பணியாற்றுவோர்
C4958 - ராஜேஷ் குமார்
C5027 - ஓம்பிரகாஷ் குமார்
C5037- விகாஷ் குமார்
C5215 - ஜிதேந்திர குமார் சந்திரவன்ஷி
C5187 - அனில் குமார்
C5212 - பங்கஜ் குமார்
C4954 - சுனில் பிரசாத் பாரி
C5038 - சோனு குமார்
C5168 - தீபக் குமார்
C5191 - துலார்லால் தாஸ்
C5021 - விபின் குமார்
C5048 - சந்தோஷ் குமார்
C5049 - பப்லு குமார்
C5050 - சதாப்ரிக்ஷ் குமார்
C4825 - நிஷு ராஜ்
C4947 - தீரஜ் குமார்
C5213 - ஆரிஃப் ராஸா
C5167 - விக்ரம் குமார்
CR0048 - சம்யுக்தா S (எஸ்)
C5107 - அமினா G ( ஜீ) பாவிக்கட்டி
CR0050 - நேஹா N (என்)
CR0051 - ஜோதி அப்பன் கவுடா பாட்டீல்
C4859 - போரேஷா
C4892 - வைஜநாத் V ( வீ) போகூர்
C4854-மாருதி காலி
C5147-மஹாதேவ் மாருதி
சௌக்யுலே
C5149 - பத்மண்ணா பீரப்பா கணேஷ்வாடி
C5150 - விட்டல் யல்லப்பா அஜ்ஜன்கட்டி
C4794-பிரஷாந்த்
C4798-போகர் கிஷோர்
C4995-சுனில்
C5109- பரமேஷ்வர் லாலப்பா
C4992 - P (பீ) ரவி
C4867- ஸ்ரீதரா S.U (எஸ் யூ)
C4985-மஞ்சப்பா N(என்)
C4791 மல்லனகௌடா பஸனகௌடா குடிஹாலா
C4939 - அதுல் பாபன் சால்வே
C5060 - தீபக் விஜய் ஓவல்
C5196 - சர்ஜேராவ் ராவ்சாஹேப் கோர்டே
C4852 - காம்ப்ளே ஹரிதாஸ் த்னானோபா
C4976 - சந்தோஷ் ஷேஷராவ் யெர்மே
C4978 - கிரண் ராமகாந்த் சோன்பேட்
C4979 - ஆகாஷ் பங்கட் ரத்தோட்
C5158- சச்சின் தியானேஷ்வர் குரவ்
C4942-பிரமோத் குமார் சுக்லா
C5057- அவினாஷ் குமார் வர்மா
C5192-சத்ய பிரகாஷ் திரிபாதி
C5210-சுஷில் யாதவ்
C5165-அமர்நாத் நிஷாத்
C5163 - ஃபிரோஸ் கான்
சைதன்யாவின் பார்வையில் வசீகரிக்கும் மற்றும் தவிர்க்க முடியாத நுண்ணறிவு
சைதன்யாவின் கண்ணோட்டம்
செல்வி - ப்ரீத்தி
குர்ஜா, உத்தரப் பிரதேசம்
எங்கள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையில் நீண்ட கால பொருள் பொதிந்த தாக்கத்தை உருவாக்குவது எங்களின் வழிகாட்டும் ஒளி. சில சமயங்களில் கிளையில் உள்ள எங்கள் ஊழியர்கள் மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களின் நலன் குறித்து அறிய, நாடு முழுவதும் உள்ள கிளைகளுக்குச் செல்வதை நாங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளோம். இதனால், பெங்களூரில் சைதன்யாவின் தலைமை அலுவலகத்தில் இருந்து ஒரு குழு களப் பார்வைக்குப் புறப்பட்டது. எங்கள் வாடிக்கையாளர்களில் ஒருவரைப் பற்றி மேலும் அறிய, மேலும் படிக்கவும்:
எங்கள் வாடிக்கையாளர்களில் ஒருவரின் கதையை நாங்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம் - செல்வி. ப்ரீத்தி, ஒரு உற்சாகமான தொழில்முனைவோர், உத்தரப் பிரதேசம், புலந்த்ஷஹரைச் சேர்ந்தவர். தனது குடும்பத்தின் ஆதரவு மற்றும் சைதன்யாவிடமிருந்து பெற்ற கடன் இவற்றுடன் ப்ரீத்தி தனது சொந்த வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தனது சமூகத்தின் ஆன்மாவுக்குப் புத்துயிர் அளிக்கும் ஒரு மாற்றம் கொணரும் முயற்சியில் இறங்கினார்.
ஃபிப்ரவரி 2023 இல், சைதன்யாவின் 40,000 ரூபாய் நிதியுதவியுடன், ப்ரீத்தி தனது கனவை நனவாக்குவதற்கான முதல் படியை எடுத்தார். ஒரு எளிமையான முயற்சியாக ஆரம்பித்தது இப்போது செழிப்பான தொழிற்சாலையாக மலர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும், ப்ரீத்தி மற்றும் அவரது அர்ப்பணிப்புள்ள குடும்ப உறுப்பினர்கள் களிமண்ணை நேர்த்தியான தயாரிப்புகளாக வடிவமைத்து, ஒவ்வொரு படைப்பிலும் அவர்களின் தனித்துவமான கைவினைத் திறனின் சாரத்தை உட்செலுத்துகிறார்கள்.
மூலப்பொருளில் தொடங்கி இறுதித் தயாரிப்பு வரையிலான பயணம் அன்பு மற்றும் அர்ப்பணிப்பின் உழைப்பாகும். களிமண்ணை வடிவமைத்த பிறகு, தயாரிப்புகள் உலையில் உலர்த்தும் செயல்முறைகளுக்கு உட்படுகின்றன. குடும்ப அங்கத்தினர்கள் ஓவியம் வரைவதிலும், ஃபினிஷிங் டச் கொடுப்பதிலும் தங்கள் பங்கான நிபுணத்துவத்தை அளிக்கின்றனர், இது ஒவ்வொரு படைப்பும் அதன் சொந்த அடிப்படையிலேயே ஒரு மாஸ்டர்பீஸாக இருப்பதை உறுதி செய்கிறது.
ப்ரீத்தியின் லட்சியத்திற்கு எல்லையே இல்லை. அவரது தயாரிப்புகள், ஒரு காலத்தில் உள்ளூர்ச் சந்தைகளில் மட்டுமே புழங்கி வந்தன. இப்போது அவை டெல்லி மற்றும் அதற்கு அப்பால் உள்ள பரபரப்பு மிகுந்த தெருக்களை அலங்கரிக்கின்றன. சைதன்யா இந்தியாவின் கடன் மூலம் இந்த விரிவாக்கத்தை சாதிக்க முடிந்தது, இது ப்ரீத்தியின் முயற்சியின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்தது.
ப்ரீத்தியின் கதை தொழில்முனைவோரின் மாற்றம் கொணரும் சக்தி மற்றும் சைதன்யாவின் ஆதரவின் குறிப்பிடத் தக்க தாக்கத்திற்கு ஒரு சான்றாகத் திகழ்கிறது. சுயதொழில் செய்யும் கைவினைஞராகத் தொடங்கி வெற்றிகரமான தொழிற்சாலை உரிமையாளராக ஆகும் வரையிலான அவரது பயணம், நிதி உதவி மற்றும் சமூக ஆதரவு ஆகியவை எவ்வாறு கனவுகளை நனவாக மாற்றும் என்பதற்கு ஒரு எழுச்சியூட்டும் உதாரணம்.
சைதன்யாவில், வெளிப்படைத் தன்மை என்பது வெறும் மந்திரச் சொல் அல்ல;
வெளிப்படைத் தன்மை மற்றும் தகவல் தொடர்புக்கான அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டும் வகையில், எங்களின் பெங்களூரில் நடக்கும் டவுன் ஹால் கூட்டங்களில் ஒன்று, CLE (சிஎல்ஈ) அறக்கட்டளையைச் சேர்ந்த திரு. ராகுல் பாண்டே மற்றும் திருமதி லீலா O.M. (ஓஎம்) ஆகியோரை வரவேற்றது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் பின்தங்கிய பின்னணியில் உள்ள குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பதில் அவர்கள் காட்டிய அர்ப்பணிப்பு எங்கள் இதயங்களில் அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முன்முயற்சிகள் இரண்டையும் இணைப்பதன் மூலம், அவர்கள் இந்தக் குழந்தைகளின் வாழ்க்கையை விலை மதிப்பற்ற அறிவைக் கொண்டு ஒளிரச் செய்கிறார்கள்.
CLE அறக் கட்டளையின் செயல்பாடுகளை ஸ்தம்பிக்க வைத்த கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிர் வினையாற்றும் வகையில் இந்த முயற்சி உருவானது. புதிய இயல்புக்கு (New normal) இணங்கிச் செல்வதில், அறங்காவலர்கள் ஆன்லைன் முறைகள் மூலம் தொடர்ந்து கற்பிக்க ஓர் உத்தியை வகுத்தனர். இன்று, கிராமப்புறங்களில் உள்ள 6-14 வயதுடைய பழங்குடியின மாணவர்களுக்காக சைதன்யா, CLE அறக்கட்டளையுடன் இணைந்து இந்தக் கற்றல் மையங்களை நடத்துகிறது. ஜூலை 2023 முதல் மார்ச் 2024 வரை, நாங்கள் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் வகுப்புகளை வழங்கும் 10 கற்றல் மையங்களை நிறுவியுள்ளோம். இந்த மையங்களில் மொத்தம் 10 ஆஃப்லைன் ஆசிரியர்கள் மற்றும் 17 ஆன்லைன் ஆசிரியர்கள், 541 மாணவர்களுக்கு சேவை செய்கின்றனர். ஆண்டு முழுவதும், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் போன்ற பாடங்களை உள்ளடக்கிய 1295 ஆஃப்லைன் மற்றும் 579 ஆன்லைன் வகுப்புகள் நடத்தப் பட்டுள்ளன.
இந்த முன்முயற்சிகள் சாதாரணமாகத் தோன்றினாலும், அவற்றின் தாக்கம் ஆழமானது. நிலையான ஆதரவுடன், கிராமப்புற கிராமங்களின் நம்பிக்கைக்குரிய மனதை நாளைய வெளிச்சங்களாக மாற்றும் ஆற்றல் இந்த முன்முயற்சிகளுக்கு உள்ளது. இது போன்ற உன்னதமான நோக்கங்களைப் பற்றி நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், மேலும் எங்கள் குழு உறுப்பினர்கள் அவர்களுடன் தன்னார்வத் தொண்டு செய்வதன் மூலம் தாம் சேவை செய்யும் அரிய வாய்ப்பைப் பெற்ற சமூகங்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்குப் பங்களிப்பதைக் கருத்தில் கொள்ள ஊக்குவிப்போம்.
சைதன்யாவின் ஃபிட்னஸ் (உடற்தகுதி) ஆர்வலர்கள்
திரு. இம்ரான் கான்
ஸைபர் பாதுகாப்புத் திட்ட மேலாளர்
பெங்களூர்
இம்ரானின் மாற்றம் கொணரும் பயணம் - 8 கிலோ எடையைக் குறைத்தல் - ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்தல், சவால்களை சமாளித்தல் மற்றும் மகிழ்ச்சியைக் கண்டறிதல்.
இம்ரானின் உடற்தகுதிப் பயணம் ஆனது, அர்ப்பணிப்பு மற்றும் சுய கண்டுபிடிப்பின் சக்திக்கு ஒரு சான்றாகும். ஆரோக்கியமாக இருப்பவர்களுக்குக் கூட மாரடைப்பு வருகிறது என்பதை கவனித்த போது இது தொடங்கியது, ஒரு நாள் கூட ஜிம்மிற்குத் தவறாமல் சென்று வந்த கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமாரும் எவ்வாறு 46 வயதில் மாரடைப்பால் இறந்தார் என்பதை நாம் அறிவோம்.
இம்ரான் இப்போதுதான் தந்தையாகி உள்ளார். அவரது குழந்தை பிறந்து 11 மாதங்களே ஆகின்றன. இதனால், அவரது குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பது அவருக்கு ஒரு முக்கிய முடிவாக மாறியது, இது ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நோக்கி அவரை மாற்றம் கொணரும் பாதையில் செலுத்தியது.
நடைமுறை சாத்தியம் உள்ள இலக்குகளை அமைப்பதே இம்ரானின் பயணத்தின் அடிக்கல்லாக இருந்தது. உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டிலும் சீரான கவனம் செலுத்தி, அவர் தனது உடலை மட்டுமல்ல, தனது மன நிலையையும் செதுக்குவதற்கான தேடலைத் தொடங்கினார். ஒரு சத்தான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியை அவரது தினசரி வழக்கத்தில் இணைத்துக் கொள்வதில் மட்டும் எந்தவொரு பேரம் பேசுவதற்கோ அல்லது சமரசத்துக்கோ இடமில்லை. இது அவரது புதிய வாழ்க்கை முறையின் முதுகெலும்பாக அமைந்தது. சவால்கள் மற்றும் பின்னடைவுகளை எதிர் கொண்டாலும் இம்ரானின் அர்ப்பணிப்பும் ஒழுக்கமும் சற்றும் அசைந்து கொடுக்கவில்லை. அவர் ஒவ்வொரு தடையையும் வளர்ச்சிக்கான வாய்ப்பாகவே ஏற்றுக் கொண்டார். செல்லும் பாதையில் மதிப்பு மிக்க பாடங்களைக் கற்றுக் கொண்டார் மற்றும் அவற்றுக்கேற்ப தனது அணுகுமுறையை அமைத்தார்
இம்ரானின் பயணத்தின் மிகவும் பலனளிக்கும் அம்சங்களில் ஒன்று, ஹைகிங் மற்றும் யோகா போன்ற அவரது ஆர்வத்தை உண்மையிலேயே கொழுந்து விட்டெரிய வைக்கும் செயல்களைக் கண்டுபிடித்தது. இந்த ஈடுபாடுகள் அவரது உடல் மாற்றத்தைத் தூண்டியது மட்டுமல்லாமல், அவருக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியையும் நிறைவையும் தந்தன. சிறு சிறு வெற்றிகளைக் கொண்டாடுவது இம்ரானுக்கு ஒரு தினசரி சடங்காகவே மாறிப் போனது. அவர் தன் பாதையில் ஒரு அற்புதமான 8 கிலோ எடையை இழந்தார். இது அவரது முன்னேற்றத்தைக் குறிக்கும் ஒரு மைல் கல்லாக அமைந்தது, மேலும் முன்னேற அவரது உந்துதலைத் தூண்டவும் செய்தது. சக ஊழியர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவான நெட்வொர்க்கால் சூழப்பட்ட அவர், அவர்களின் ஊக்கத்தில் வலிமையையும் பொறுப்புணர்வையும் கண்டார். இன்று, இம்ரானின் உடற்பயிற்சிப் பயணம் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி பெற்று வருகிறது, இது சுய முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வை நோக்கிய ஒரு நிரந்தரத் தேடலாகும். புதிய ஆற்றல் நிலைகள் மற்றும் தன்னம்பிக்கை கொண்டு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி மூலம், எவரும் தங்கள் உடற்பயிற்சி இலக்குகளை அடைய முடியும் மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ முடியும் என்பதற்கு அவர் வாழும் ஆதாரமாகத் திகழ்கிறார்.
சைதன்யாவின் மகளிர் தின விழாக்கள்
11 மார்ச் 2024 அன்று, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் பன்னாட்டு மகளிர் தினத்தைக் கொண்டாடுவதன் மூலம் எங்கள் அமைப்பில் உள்ள பிரமிப்பூட்டும் பெண்களை சைதன்யா இந்தியா கவுரவித்தது. எங்கள் கள அலுவலகங்களில் வசீகரமான விளையாட்டுகள் மற்றும் செயல்பாடுகளுடன் அந்த நாள் கொண்டாடப் பட்டது, எங்கள் பெண் ஊழியர்களுக்கும் சிந்தனையுடன் தேர்ந்தெடுக்கப் பட்ட பரிசுகள் வழங்கப் பட்டன. ஒரு மகிழ்ச்சியான கேக் வெட்டும் விழா, பண்டிகைச் சூழ்நிலையைக் கூட்டி, தோழமை மற்றும் பாராட்டு உணர்வை வளர்க்கிறது.
எங்கள் பெங்களூர் தலைமையகத்தில், அலுவலகம் அழகான அலங்காரங்கள் கொண்டு அழகூட்டப் பட்டதால் கொண்டாட்டம் புதிய உச்சத்தை எட்டியது. இந்தக் கண் கவரும் காட்சி எங்கள் பெண் ஊழியர்களை அரவணைப்புடனும் பாராட்டுதலுடனும் வரவேற்றது. பண்டிகைக் கொண்டாட்டத்துடன் கூடவே, அனைவருக்கும் இலவசப் பல் பரிசோதனைகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளை ஏற்பாடு செய்வதன் மூலம் எங்கள் பெண் பணியாளர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு நாங்கள் முன்னுரிமை அளித்தோம். அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் அதே வேளையில், எங்கள் நிறுவனத்தில் உள்ள பெண்களை அங்கீகரித்து ஆதரிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை இந்த முயற்சி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சைதன்யா இந்தியாவில், எங்கள் நிறுவனம் மற்றும் பரந்த அளவில் சமூகத்திற்குப் பெண்கள் வழங்கும் விலை மதிப்பற்ற பங்களிப்பை நாங்கள் புரிந்து கொள்கிறோம்.
பன்னாட்டு மகளிர் தினத்தை இத்தகைய பொருள் பொதிந்த விதத்தில் கொண்டாடுவதன் மூலம், ஒவ்வொரு தனி நபரும் செழிக்கக் கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் ஆதரவான பணியிடத்தை வளர்ப்பதற்கான எங்கள் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப் படுத்துகிறோம்.
இந்தப் பகுதி எங்கள் அமைப்பின் பல்வேறு துறைகளைப் பற்றி ஒரு கண்ணோட்டத்தைக் கொடுக்க விரும்புகிறது. இந்தக் கட்டுரையில், எங்கள் தர உத்தரவாதம் & கிரெடிட் துறையை நாங்கள் விவரித்துதுள்ளோம்.
சைதன்யா இந்தியா ஃபின் கிரெடிட் பிரைவேட் லிமிடெட், திரு. மஞ்சுநாத் BV (பீவி)யின் திறமையான தலைமையின் கீழ், QC (கியூசி) (தர சோதனை) மற்றும் கிரெடிட் குழுக்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளின் வாடிக்கையாளர் சுயவிவரத்தையும் அதன் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியையும் உறுதி செய்வதில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. இவற்றின் பொறுப்புகளை ஆராய்வோம்
ஒவ்வொரு குழுவின் பொறுப்புகள் மற்றும் செயல்பாடுகளை ஆராய்வோம்:
தர சோதனைக் (QC) குழு
துல்லியமான அணுகுமுறையால், QC குழு உயர்நிலை சுகாதார சோதனைகளை மேற்கொண்டு செயல்முறைகளின் தரம் மற்றும் துல்லியத்தை நிலைநிறுத்துகிறது. அவர்களின் பொறுப்புகளில் கீழ்க் கண்டவை அடங்கும்:
ஆவணத் திரையிடல்: வாடிக்கையாளரின் KYC (கேஒய்சி) களை முழுமையாக ஆய்வு செய்து சரியாக இணங்கி இருப்பதை உறுதிப்படுத்துதல் மற்றும் துல்லியம், இதனால் தவறான உள்ளீடுகளை நீக்குகிறது.
தரவு சரிபார்ப்பு: வாடிக்கையாளர்களுக்கு வழங்கப் பட்ட தகவல் மற்றும் தரவின் நம்பகத்தன்மையைச் சரி பார்த்தல், செல்லுபடியாகும் KYC க்கள் மட்டுமே செயலாக்கப் படுவதை உறுதி செய்கிறது.
ஆட்டோமேஷன்: செயல்முறைகளை நெறிப் படுத்தவும் பிழைகளைக் குறைக்கவும் இயலக் கூடிய இடங்களில் தானியங்கு தீர்வுகளைச் செயல் படுத்துதல், இதனால் செயல் திறனை மேம்படுத்துதல்.
பிழைக் குறைப்பு: தரவுப் பிடிப்பு மற்றும் செயலாக்கத்தில் ஏற்படும் பிழைகளைக் குறைப்பதற்குக் கடுமையான நடவடிக்கைகளைப் பயன்படுத்துதல், அதன் மூலம் நிறுவனத்தின் செயல்பாடுகளின் நேர்மையைப் பேணுதல்.
கள விஜயங்கள்: : எந்தவொரு செயல்முறை இடைவெளிகளையும் நேரில் கண்டறிவதற்காக வழக்கமான கள விஜயங்களை நடத்துதல், நிலையான முன்னேற்றம் மற்றும் நிறுவப் பட்ட தரநிலைகளைக் கடைபிடிப்பதை உறுதி செய்தல்.
கிரெடிட் குழு
கிரெடிட் குழு, பெரும்பாலும் தரச் சரிபார்ப்புத் துறைக்கு ஒத்ததாக இருக்கிறது, வாடிக்கையாளர்களின் நிதி நம்பகத் தன்மையை மதிப்பிடுவதற்கும், விவேகமான கடன் வழங்கும் நடைமுறைகளை உறுதி செய்வதற்கும் இக்குழு முதன்மையாக பொறுப்பாகும். இக்குழுவின் முக்கியமான பொறுப்புகளில் பின்வருவன அடங்கும்:
வாடிக்கையாளர் சேர்க்கை: வாடிக்கையாளர்களின் நிதி நிலை மற்றும் பணப் பாய்ச்சல் பகுப்பாய்வு ஆகியவற்றை உன்னிப்பாகப் புரிந்துகொள்வதன் மூலம், கிரெடிட் குழு அபாயங்களைக் குறைக்கும் அதே வேளையில் தடையின்றி ஆன்போர்டிங்கை எளிதாக்குகிறது.
வருமான மதிப்பீடு: வருமான அளவை மதிப்பிடுவதற்கு சரி பார்ப்புகளை மேற்கொள்ளுதல் மற்றும் வாடிக்கையாளர் சுயவிவரங்களைப் பகுப்பாய்வு செய்தல், இவற்றின் மூலம் விண்ணப்பதாரர்களின் கடன் பெறும் தகுதியைத் தீர்மானிக்கிறது.
இடர் (அபாயம்) குறைப்பு: நல்ல மற்றும் மோசமான வாடிக்கையாளர்களை வேறுபடுத்துவதற்கு விலகல் மேட்ரிக்ஸ் மற்றும் கடன் ஹிஸ்டரி பகுப்பாய்வு ஆகியவற்றைப் பயன்படுத்துதல். இது டீஃபால்ட் செய்யும் அபாயத்தைக் குறைத்துக் கடன் போர்ட்ஃபோலியோவின் தரத்தை மேம்படுத்துகிறது.
மெய்நிகர் எழுத்துறுதி (Virtual underwriting): தொழில் நுட்ப முன்னேற்றங்களை ஏற்றுக் கொண்டு, குழுவானது கடன் மற்றும் எழுத்துறுதி செயல்முறைகளைத் தானியக்கம் ஆக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது மெய்நிகர் எழுத்துறுதி மற்றும் அதிக செயல்திறனுக்கு வழி வகுக்கிறது.
நீண்ட காலத் திட்டங்கள்: உடனடி நோக்கங்களுக்கு அப்பால், நிறுவனம் பல நீண்ட காலத் இலட்சியங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் சில பின்வருபவை ஆகும்.
செயல்முறைகளின் தானியக்கமாக்கல்: : கடன் மற்றும் எழுத்துறுதி செயல்முறைகளை தானியக்கமாக்குவதற்குத் தொடர்ச்சியான முயற்சியை மேற்கொள்ளுதல், அதன் மூலம் செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் மேனுவல் இடையீட்டைக் குறைத்தல்.
பணியாளர் திறன் மேம்பாடு: : தற்போதைய பயிற்சித் திட்டங்கள் மூலம் பணியாளர்களின் திறன் தொகுப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துதல், அவர்கள் நவீன தொழில் வளர்ச்சிகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றுடன் இணைந்திருப்பதை உறுதி செய்தல்.
கொள்கையை வலுப் படுத்துதல்: கடன்களைத் திறம்பட அண்டர்ரைட் செய்வதற்கான வலுவான செயல்முறைகள் மற்றும் கொள்கைகளைப் பராமரிப்பதில் உறுதியளித்தல், அதன் மூலம் நிறுவனம் மற்றும் அதன் வாடிக்கையாளர்களின் நலன்களைப் பாதுகாத்தல்.
சுருக்கமாக, திரு. மஞ்சுநாத் BV யின் வழிகாட்டுதலின் கீழ், சைதன்யா இந்தியாவிலுள்ள QC (223 பணியாளர்களைக் கொண்டது) மற்றும் கிரெடிட் (188 பணியாளர்கள்) குழுக்கள், அவர்களின் செயல்முறைகள் மற்றும் செயல்பாடுகளில் புதுமை மற்றும் முன்னேற்றத்திற்காக, இடைவிடாமல் கடும் முயற்சி செய்தவாறே, தரம், செயல்திறன் மற்றும் வாடிக்கையாளர் மகிழ்ச்சி ஆகியவற்றின் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்த உறுதி பூண்டுள்ளன.
இந்தத் தகவல்தொடர்பு வழிமுறைகளின் மூலம், உங்களுடன் தினசரி தொடர்பு கொள்ள விரும்புகிறோம். எங்கள் நிறுவனத்தில் காலாண்டுக்கு ஒருமுறை லேட்டஸ்ட் அப்டேட்ஸ் குறித்து உங்களுக்குத் தெரியப்படுத்துவதே எங்கள் நோக்கம். கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் குழுவானது @சைதன்யாவுடனான பயணத்தை எங்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளும் சக ஊழியர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
உங்கள் குழுவின் செயல்பாடுகளின் படங்கள், கள ஆய்வில் கண்ட சுவாரஸ்யமான விஷயங்கள், கதைகள், குறிப்பிடத்தக்க வாடிக்கையாளருடனான சந்திப்பு அல்லது நீங்கள் கண்ட சிந்தனையைத் தூண்டும் விஷயங்கள் குறித்த கட்டுரை போன்ற சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள ஏதேனும் உங்களிடம் இருந்தால், எங்களுக்கு communication@chaitanyaindia.in என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு உங்களை ஊக்குவிக்கிறோம். எதிர்காலத்தில் உங்களிடம் இருந்து கூடுதல் பங்களிப்புகளை பெற நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.