நிர்வாகம் அளிக்கும் செய்தி
நிர்வாகம் அளிக்கும் செய்தி
சைதன்யா குழுவிற்கு வணக்கம்,
க்வாலிட்டி போர்ட்ஃபோலியோவில் 4000 கோடி எனும் ஒரு புதிய மைல் கல்லை நாம் எட்டியுள்ளோம் என்பதைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். சைதன்யா இந்தியாவில் மிகத் துரிதமாக வளரும் MFI-களில் ஒன்றாக உருவாகி வருவதால், பல வருடங்களாக போர்ட்ஃபோலியோவின் தரமே வலுவான ஒரு முக்கியக் கூறாகத் திகழ்கிறது. தரமான வாடிக்கையாளர்களைச் சேர்த்தலும் செயல்முறை சார்ந்த அணுகுமுறை கொண்டு வசூல் செயல்முறையை மேம்படுத்துதலுமே நிறுவனத்தின் வெற்றிக்கான அடித்தளமாகும். தரமான போர்ட்ஃபோலியோவைப் பேணுவதில் கடன் ஒப்புறுதி முக்கிய பங்கு வகிப்பதால், ஃபின்டெக் ஒப்புறுதிக் கருவிகளின் வளர்ச்சியானது தரமான வாடிக்கையாளர் தேர்வில் ஒரு நல்ல பலனை அளிக்கிறது. குறுங்கடன் மக்கள்-சார்ந்த தொழில் என்பதால், வலுவான கடன் விதிக் கருவிகள், குறிக்கோளுடன் கூடிய மனிதத் தலையீடு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு வணிகத்தை விரைவாக விஸ்தரிக்கவும் அதிக துல்லியத் தன்மை கொண்ட முடிவுகளை எடுக்கவும் எங்களுக்கு உதவும். வேகமாக வளர்ந்துவரும் இந்த அமைப்பின் ஒரு பகுதியாக இருப்பது ஒவ்வொரு துறையிலும் உள்ளவர்களுக்கு நம்பமுடியாத வாய்ப்புகளை அளிக்கிறது. ஆர்வம் மற்றும் விடாமுயற்சியுடன், நிறுவனத்தின் வெற்றியோடு இணைந்து நமது வளர்ச்சியையும் நாம் அனுபவிக்க முடியும். நம் ஒவ்வொருவருக்கும் முன்னோக்கிய பயணத்திற்கான வாழ்த்துக்கள்.
மஞ்சுநாத் B V
தலைவர் - கடன் & தர சோதனை
எட்டிய மைல்கற்கள்
எல்லைகளை ஆராய்தல்
முழுமையான வளர்ச்சித் திட்டங்கள்
சைதன்யாவில், ‘தொடர்ச்சியாகக் கற்றுக்கொள்ளுதல்’ என்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்து கொண்டிருப்பதால், கற்றல் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். எங்களின் 3-நாள் துவக்கி வைத்தல் திட்டம் புதிதாக இணைந்தவர்கள் ஊடாடுதல் முறையில் நிறுவனத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவும் வகையில் அனைத்து துறைகளின் அறிமுக அமர்வுகள் கொண்டதாகும். தேவைகளைப் பொறுத்து, பல்வேறு துறைகளுக்கான புத்தாக்கப் பயிற்சியையும் நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்.
Induction Training - Dhanbad, JH
Induction Training - Mysuru, KA
Induction Training Prayagraj, UP
Induction Training - Vadodara, GJ
QC training - Varanasi, UP
Audit Refresher - Ahmednagar - MH
Learning & Development Training - West
Zendesk Training - Godhra
Train the trainer
CRE Refresher Training - Agra
Newly promoted BM training
Learning & Development Training - PAN India
சைதன்யாவுடன் 5 ஆண்டுகள்
ஒரு வலிமையான,முனைப்புள்ள ஆற்றல் மிக்க குழுவானது, நாம் எதை இலக்காகக் கொண்டாலும் அதை சாதிக்கச் செய்யும். எங்கள் ஊழியர்களுடனான எங்கள் பிணைப்பை நாங்கள் மிகவும் மதிப்பதுடன், ‘மக்கள் – முதலில்’ எனும் கொள்கையைப் பின்பற்ற முயற்சி செய்கிறோம். சைதன்யாவில் 5 ஆண்டுகளை நிறைவு செய்த எங்கள் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள். எதிர்காலத்தில் நீங்கள் மேலும் வெற்றிகளையும் சிறந்த அனுபவங்களையும் பெற வாழ்த்துகிறேன்.
கர்நாடகா
C3218 - தர்மராயா
C3270 - சச்சினா காந்தா K U
C3285 - மஹேஷ் பானுதாஸ் போரடே
C3401 - கங்கப்பா
C3301 - அஜ்ஜய்யா G
C3366 - பசவராஜ் ஸுடி
C3380 - சந்திரசேகர் M
C3384 - லோகேஷ் MM
C3191 - யமனூரப்பா மாரியப்பா பூஜர்
C3267 - நவீனா R
C3461 - H K அபிஷேக்
CR0008 - மஞ்சுநாத் B V
மகாராஷ்டிரா
ஜார்கண்ட்
C3253 - அப்பராயா மஹாதேவ் கடிகர்
C3414 - வைபவ் பாங்கட் ஃபுடனே
C3203 - மஹாதேவ் ஜோதிராம் ஹெலாகர்
C3328 - விகாஸ் தாதாராவ் காம்ப்ளி
C3491 - ராகேஷ் குமார் ரோஷன்
உத்தரப்பிரதேசம்
பீஹார்
C3419 - பாஸ்கர் பிரசாத் ஷுக்லா
C3223 - ஆகாஷ் குமார்
C3227 - அம்ரேஷ் குமார்
C3421 - பங்கஜ் குமார்
C3427 - பின்டு குமார் குமார்
C3422 - ரோஹித் குமார்
C3450 - உத்பால் குமார்
C3332 - யுகேஷ் குமார்
C3429 - ராஜு குமார் குமார்
CSR செயல்பாடுகள்
கிராமப்புற இளைஞர் திறன் மேம்பாட்டுத் திட்டம்
நமது இளைஞர்களின் வேலை-சார்ந்த திறன்களை மேம்படுத்துவதன் மூலம் அவர்களை மேம்படுத்துவதை சைதன்யா நோக்கமாகக் கொண்டுள்ளது. நாங்கள் வீ கேர் சொசைட்டியுடன் (WCS) இணைந்து, கர்நாடகாவின் மாண்டியா மற்றும் ராம்நகரா மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுக்குப் பயிற்சி அளித்தோம். பயிற்சித் திட்டத்தில் கணினி தரவு உள்ளிடல், கிடங்கு - உதவியாளர், இயந்திர செயல்பாடு - ஃபிட்டர், கணினிக் கல்வியறிவு & தரவு உள்ளிடல், மற்றும் குறுங்கடன் செயல்அலுவலர் ஆகியவை அடங்கும். இந்தப் படிப்புகள் பங்கேற்பாளர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் என்றும், அவர்கள் வாழ்க்கையில் தன்னிறைவு அடைய உதவும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.
வெள்ள நிவாரணமும் நீர் சுத்திகரிப்பு சாதன விநியோகமும்
எளிய மற்றும் நடுத்தர வகுப்பு மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவே சைதன்யா பாடுபடுகிறது. பெருநிறுவன சமூகப் பொறுப்புகளும் சமுதாயத்தில் நமது பணியின் மூலம் மதிப்பைச் சேர்க்கும் ஒரு வழியாகும். இந்த காலாண்டில், அயோத்தியா, அஷோக் நகர் மற்றும் மைசூர் ஆகிய பகுதிகளிலுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் குடும்ப அட்டைப் பொருட்களின் தொகுப்புகளையும் அடிப்படைத் தேவைகளுக்கான பொருட்களையும் விநியோகம் செய்தோம். நாங்கள் இயங்கும் எல்லாப் பகுதிகளிலும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், காவல் நிலையங்கள், கிராமப் பஞ்சாயத்துகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட 101 இடங்களில் தண்ணீர் சுத்திகரிப்பு சாதனம் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளை நாங்கள் நிறுவியுள்ளோம்.
பணியாளர் கருத்து
“வரும் முன் காப்பதே சிறந்தது” என்ற பழமொழியை நாம் கேள்விப்பட்டுள்ள போதிலும், சமீபத்தில் நான் ஒரு விபத்தில் சிக்கிய போதுதான் அதைப் புரிந்து கொண்டேன். 3 ஆண்டுகளுக்கு முன்பு ஔரங்கபாத் பகுதியில் ஓர் யூனிட் மேலாளராகப் பணிபுரிந்தபோது சைதன்யாவுடனான எனது பயணம் தொடங்கியது. அக்டோபர் 3-ம் தேதி, பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது நான் விபத்துக்குள்ளானேன். நான் தலைக்கவசம் அணிந்திருந்ததால், பெரும் காயம் ஏற்படாமல் தப்பினேன். எனது இடது கையில் மட்டும் எலும்பு முறிவு ஏற்பட்டது. எப்பொழுதும் நான் தலைக்கவசம் அணிவதுடன், என் குழுவினரையும் அணியும்படி செய்கிறேன்.
ஆறு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதன் பின் மூன்று மாதங்கள் வீட்டில் ஓய்வெடுத்தேன். நான் குணமடைந்துவந்த காலகட்டத்தில், எனது மூத்த அதிகாரிகள் எனது உடல்நிலையைத் தொடர்ந்து விசாரித்துவந்ததுடன், தேவையான அனைத்து உதவிகளையும் அளித்து வந்தனர். உண்மையில், ஓர் ஊழியர் நோய்வாய்ப்பட்டால், நிறுவனத்திற்கு அது ஒரு சுமையாக மாறும். ஆனால் சைதன்யாவிலிருந்த நல்ல கலாச்சாரத்தால், நான் ஒரு சொத்தாக, நன்கு நடத்தப்பட்டேன். இந்த நேரத்தில் எனக்கு எந்த பொருளாதாரக் கஷ்டங்களும் ஏற்படாமல் துணையாக இருந்த சைதன்யாவுக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். அதனால் தான் சைதன்யா தனித்துவமானது. சைதன்யாவின் ஊழியர் என்பதில் பெருமை கொள்கிறேன்.
எனது இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு உதவிய மூத்த அதிகாரிகள் திரு. சித்தார்த் உகே சார் மற்றும் திரு. ராஜு தோண்ட்கே சார் ஆகியோருக்கு நன்றி.
திரு. பினித் ஜா சாரின் மதிப்புமிக்க ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுக்காக நான் அவருக்கு சிறப்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அனுபவத்தின் மூலம், வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணியுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
ப்ரவீண் அலேகாவ்ன்கர்
யூனிட் மேலாளர்
ஃபுலம்ப்ரி, ஔரங்கபாத், MH
வாடிக்கையாளர் கதை
குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மான்ஸாவைச் சேர்ந்த மனிஷாபென் ராஜ்புத். சைதன்யா குடும்பத்தின் அங்கமாக விளங்குபவர். மனிஷாபென் ராஜஸ்தானில் சானியா சோலிஸில் வெள்ளி ஜரிகை வேலை செய்துவந்தார். அகமதாபாத்தில் உள்ள மான்ஸாவில் ஒரு கூட்டுக் குடும்பத்தில் திருமணம் செய்துகொண்ட பிறகு, அவர் தனது மாமியாரிடம் சானியா சோலிஸ் தைக்கக் கற்றுக்கொண்டார், மேலும் தைப்பதை ஒரு தொழிலாக மேற்கொள்ளத் திட்டமிட்டார். தையல் இயந்திரம் மற்றும் தேவையான பொருட்களை வாங்க சைதன்யாவிடம் கடன் வாங்கி ஒரு நாளைக்கு ரூ. 250 சம்பாதிக்கத் தொடங்கினார். அவரது மாமியார் அவர்களின் அண்டை வீட்டாருக்கு இலவசமாகத் தையல் கற்றுத் தருகிறார். சரியான நேரத்தில் சைதன்யா வழங்கிய நிதி உதவி மனிஷாபென் மற்றும் அவரது குடும்பம் திருப்திகரமான வாழ்க்கையை வாழ உதவுகிறது.
அடித்தள நாள்
சைதன்யா நவம்பர் 2-ஆம் தேதி அதன் அடித்தள நாளைக் கொண்டாடுகிறது. இந்த நாளில், இந்த சிறப்பு நிகழ்வை தனிசிறப்பான நபர்களுடன் கொண்டாட முடிவு செய்தோம். பெங்களூரில் உள்ள மாற்றுத்திறனாளி இளம் பெண்களுக்கான பராமரிப்பு மையமான பிரேர்னா வளஆதார மையத்திற்கு தினசரி தேவைப்படும் பொருட்களை நன்கொடையாக வழங்கினோம். பெங்களூரில் உள்ள எங்கள் தலைமை அலுவலகத்தில் ரத்த தான முகாமையும் அமைத்துள்ளோம். நாங்கள் இயங்கும் பிற பகுதிகளில், அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மரத்தோட்டங்கள் போன்றவற்றுக்கான நன்கொடைகள் மற்றும் ரத்த தான முகாம்கள் ஆகிய செயல்பாடுகளுக்கு ஏற்பாடு செய்தோம்.
தொகுப்பு