Welcomes You

முனைவர் மா.தமிழ்ச்செல்வி

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,

வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி,

விருதுநகர் - 626001

நான் 2005ஆம் ஆண்டு முதல் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில்  தமிழ்த்துறை உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன். 5 ஆண்டுகள் தேனி மேலப்பேட்டை இந்துநாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணி புரிந்துள்ளேன்.

இரண்டு பன்னாட்டு ஆய்விதழ்களில் ஆராய்ச்சிக்கட்டுரைகள் அளித்துள்ளேன்.20 மேற்பட்ட கருத்தரங்குகளில் தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியுள்ளேன்.முதுகலை மாணவியர் 18 பேருக்கு நெறியாளராக இருந்து ஆய்வேடுகளை முடித்துள்ளேன்.

சங்க இலக்கியம்,நீதி இலக்கியம்,காப்பிய இலக்கியம் போன்ற செம்மொழிப்பகுதிகள்  கற்பதிலும் கற்பிப்பதிலும் மிகுந்த நாட்டம் உண்டு. இக்கால இலக்கியத்தில் புதுக்கவிதையில் ஈடுபாடு மிகுதி. கணினித்தமிழ் கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் உண்டு. 

சிறப்புத்திறன்கள்:

 1.பேச்சாளர்: பட்டிமன்றம், சொற்பொழிவு,சிறப்புரை.

 2. கவிதை இயற்றுதல்

 3. பல்வேறு இடங்களில் பல்வேறு போட்டிகளில் நடுவராகப் பயணித்தல்.

விருதுகள் ;

தமிழ்ச்சுடர் விருது- யாதவர்கல்லலூரி, மதுரை.

சொல் வித்தகர் விருது - கலங்கரை விளக்கம் அறக்கட்டளை. 

கலைஞர் முத்தமிழ் விருது - பசுமை வாசல் பவுண்டேசன் & காருண்யம் அறக்கட்டளை. 

சாதனையாளர் விருது -தென்-இந்திய சமூக-கலாச்சார-அகாடமி, சென்னை.

கவிச்சுரபி விருது - யாவரும் கேளிர் 

கவிச்சிற்பி விருது - பாவேந்தர் பைந்தமிழ் மன்றம், திருச்சி.