We, The Zonal Education Office of Sammanthurai is implementing several Projects and activities to uplift the performance of the zone by the support of our all academic and non academic staff. Under those activities our Development Unit has launched a website to communicate and share the data among our Staffs and clients. I highly appreciated the work and proud to say we will do our best for the Education Development for our future Generation.
We the Zonal Education Office, Sammanthurai is providing e-learning facilities to the students specially for the quarantine period in several ways such as Videos, Audios, Presentations, Documents and etc... More...
" Stimulating innovative thinking, Guiding suitable planning for teaching learning, Facilitating to use learning resource, Mentoring to create teaching learning environment, Carrying out authentic way of assessment, Involving in close monitoring & establishing effective discipline"
சம்மாந்துறைக் கல்வி வலயத்தைச் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களுக்கும்........
2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாட்டில் ஏற்பட்ட கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் சகல பாடசாலைகளும் மூடப்பட்டிருந்த காலத்தில் மாணவர்களுக்கு அவர்களது கற்றல் செயற்பாடுகள் இடையறுந்துவிடாது தொடர்ச்சியாக டிஜிடல் தொழில்நுட்பத்தினூடாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொண்டதோடு டிஜிடல் தொழில்நுட்ப வசதியில்லாத மாணவர்களுக்கு வன்பிரதியாக்கப்பட்ட கற்றல் கையேடுகள் மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்கியதன் மூலமும் எமது மாணவர்களின் 2020ஆம் ஆண்டின் க.பொ.த உயர் தரம் மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைகளின் அடைவில் பாரிய வெற்றியை அடைந்துகொள்ளப் பங்காற்றிய அனைத்து ஆசிரியப் பெருந்தகைகள் மற்றும் அதிபர்களுக்கும் எமது வலயம் சார்பாக முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மேலும் தற்போது கொவிட்-19 வைரஸ் தொற்றின் மூன்றாம் அலை காரணமாக மீண்டும் சகல பாடசாலைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் எமது மாணவர்களின் தொடர்ச்சியான கற்றல் செயற்பாடுகளில் பாரியதொரு பின்னடைவூ ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம். இப்பின்னடைவானது எமது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்காவண்ணம் பாதுகாத்துக்கொள்ளத் தேவையான சகல நடவடிக்கைகளையூம் மேற்கொள்வது கல்விப் புலத்திலுள்ள சகலரதும் தலையாய கடமையாகும்.
எனவேதான் தாங்கள் ஏற்கனவே மேற்கொண்டதுபோன்று இவ் அசாதாரண விடுமுறை காலங்களிலும் தம்மால் இயலுமான தொழில்நுட்பத்தையூம் வளங்களையூம் பயன்படுத்தி மாணவர்களது கற்றல் செயற்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்ளத்தக்க டிஜிடல் முறைமை ஒன்றையோ அல்லது பலவற்றையோ பன்படுத்துவற்கான சகல நடவடிக்கைகளையூம் மேற்கொண்டு தனது ஆசிரியர்களையூம் அதற்காக வழிகாட்டி சகல தரங்களுக்கும் டிஜிடல் மூலமான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிகுமாறு தங்களை அன்பாய் வேண்டிக்கொள்கின்றேன்.
இதுதொடர்பாக தாங்கள் மேற்கொள்ளும் சகல முயற்சிகளும் எமது மாணவர்களின் எதிர்காலத்திற்குப் பாரிய பங்களிப்பினைச் செய்யும் என்பதில் எவருக்கும் சந்தேகம் கிடையாது. எனவே உங்களது அர்ப்பணிப்பான சேவையை இந்த இக்கட்டான காலப்பகுதியிலும் மாணவர்களுக்காக மேற்கொள்ளுமாறு அன்பாய் அழைப்பு விடுக்கின்றோம்.