அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும் - திருக்குறள்
வேலன் ஆன்லைன் சர்வீஸ், கிணத்துக்கடவு, கோவை, தமிழ்நாடு
ஆதார் பேன் இணைக்காதவர்கள் தற்சமயம் ரூ.1000 செலுத்தி இணைக்கவேண்டும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள 130 கோடி மக்களில் பெரும்பாலானவர்கள் ஆதாருடன் பான் எண்ணை இணைத்து விட்டனர்.
பேன் கார்டு வைத்துள்ள அனைவரும் ஆதாருடன் பேன் கார்டை இணைத்துவிட்டீர்களா என்பதை மீண்டும் ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
ஆதாருடன் பேன் கார்டை இணைக்கவில்லை எனில் வங்கிகள் வரிபிடித்தம் செய்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இணைப்பதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால் எங்களை அழைக்கலாம்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காலி இடங்களுக்கும் டி டி சி பி என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை காலி இடம், காலி மனை வாங்கியவர்கள் டி டி சி பி அப்ருவல் வாங்க வேண்டும். கிராமப்புரங்களுக்கான அப்ருவல் அந்தந்த கிராமப் பஞ்சாயத்துக்களின் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம். நகர்புறங்களுக்கான அப்ருவல் தாலுக்கா அல்லது மாவட்ட அலுவலகங்கள் மூலமாக பெறப்படுகின்றன.
இதுவரை வாங்காதவர்கள் தற்போது தரப்பட்டுள்ள குறுகிய காலத்திற்குள் வாங்கிக்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. அப்ருவல் தெடர்பான சந்தேகங்கள் மற்றும் அப்ளிகேசன் தயார் செய்தல், கட்ட வேண்டிய தொகை போன்றவைகளுக்கு எங்களை அழைக்கலாம்.
பெரிய நிறுவனங்கள், கல்லூரிகள், தொழிற்சாலைகள், கடைகள் போன்றவைகளுக்கு ஐடி கார்டுகள் தேவைகள் எப்பொழுதும் உண்டு. மொத்தமாகவும், வேகமாகவும் எங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். தொடர்புக்கு எங்கள் அழைக்கலாம்.
பாஸ்போர்ட்
பாஸ்போர்ட் பெற கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்த தொந்தரவுகள் இப்போது இல்லை. ஒருவர் இணையம் வாயிலாக சாதாரணமாக விண்ணப்பம் செய்து, அப்பாயின்மென்ட் முன்பதிவு செய்துவிட்டு, தேவையான அனைத்து ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு அருகில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு செல்ல வேண்டும். அது அவ்வுளவு எளிது. ஆனால் உங்களிடம் அனைத்து சரியான ஆவணங்களும் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது சாமர்த்தியமானது. உங்களிடம் அனைத்து தேவையான ஆவணங்களும் தயாராக இல்லையென்றால் விண்ணப்பிக்கும் நடைமுறை சற்று காலம் தாழ்த்தும் பணியாக மாறிவிடும். எனவே புதிய பாஸ்போர்ட் விண்ணப்பிக்க அல்லது பழைய பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சந்திப்பதற்கான (appointment) முன்பதிவு செய்வதற்க்கு முன் தேவையான அனைத்து ஆலோசனைகள் மற்றும் அப்ளை செய்ய எங்களை அணுகலாம்.
வாரிசு சான்றிதழ்
ஒரு சொத்தின் பதிவுபெற்ற உரிமையாளர் ஒருவரின் மறைவுக்குப் பிறகு, அந்த இறந்த நபரின் உடைமைகள் அல்லது சொத்துக்களின் உரிமைஉடைமையைக் கோருவதற்கு ஒரு குடும்ப உறுப்பினர் (மனைவி, குழந்தை அல்லது பெற்றோர்) அவர்/அவள் அவரின் முறையான வாரிசு என்பதை நிரூபிக்க வேண்டும். நடைமுறையில் சொத்துக்கள் மீது பொய்யாக உரிமை கோரும் வழக்குகள் ஏற்கனவே உள்ளன. ஆகவே , வாரிசு சான்றிதழைப் பெறுவது இன்றியமையாததாகிறது. தகுதியான வாரிசு(கள்) குறித்த முறையான விசாரணைக்குப் பிறகு அரசு அதிகாரிகளால் அந்த ஆவணம் வழங்கப்படுகிறது. வாரிசு சான்றிதழ் தொடர்பான கேள்விகள் மற்றும் அப்ளை செய்ய எங்களை அணுகலாம்.
பட்டா
பட்டா என்பது சொத்து ஆவணம், இது உரிமைப் பத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது . இது பொதுவாக உங்களுக்குச் சொந்தமான நிலத்துக்கான ஆதார ஆவணமாகக் கணக்கிடப்படும் ஆவணமாகும். ஆன்லைன் பட்டா விஷயம் தமிழ்நாடு மாநில அரசால் கையாளப்படுகிறது . மேலும் பதிவுத்துறை அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்தவும் தானியங்கியாக பட்ட பெயர் மாற்றம் நிகழும். இந்த நடைமுறை கடந்த இரண்டு வருடங்களாக நடைமுறையில் உள்ளது. ஆனால் அலுவலர்களால் மேலும் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் தேவைப்படும் பட்சத்தில் அவை நிராகரிக்கப்படலாம். தற்போதுள்ள நடைமுறையைப் பொருத்த வரை பத்திரம் பதிவு செய்ய பட்டா அவசியம். பட்டா சம்பந்தமான கேள்விகள் மற்றும் பட்டா மாற்றம் ஆப்ளை செய்ய எங்களை அழைக்கலாம்.
நாம் இளமையாகவும், ஆரோக்கியமாகவும், பல வருமான ஆதாரங்களைக் கொண்டவராகவும், நம் வாழ்வில் சிறப்பாக வாழும்போதும் நமக்கு ஏன் காப்பீடு தேவை என்று அடிக்கடி யோசிக்கிறோம். நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் அல்லது உங்கள் வணிகம் எவ்வளவு சீராக நடந்து கொண்டிருந்தாலும், நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும், வாழ்க்கையில் மிக முக்கியமான நிதி முடிவுகளில் ஒன்று அவசரநிலைக்கு சேமிப்பதாகும். இது போன்ற பல காப்பீட்டு தயாரிப்புகள் உள்ளன ஜெனரல் இன்சூரன்ஸ் திட்டங்கள், மருத்துவக் காப்பீடு, விபத்துக் காப்பீடு, கால காப்பீடு, ஓய்வு திட்டம், ஆயுள் காப்பீடு, வாகனக் காப்பீடு, சொத்துக் காப்பீடு போன்றவை. எந்தவொரு காப்பீட்டு பாலிசியின் முக்கிய இலக்கும் நெருக்கடி நேரத்தில் கணிசமான நிதிச் சுமையிலிருந்து உங்களுக்கு பாதுகாப்பை வழங்குவதாகும்.
அனைத்து விதமான இன்சூரன்ஸ் தேவைகளுக்கு எங்களை அழைக்கலாம்
அனைத்து வகையான கடன் தேவைகள், வீட்டுக் கடன், தனிநபர் கடன், தொழில் கடன், காலி மனை கடன் போன்றவை பெற்றுத் தரப்படும்.
அண்மைக்காலமாக வாகனம் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் சீராக உயர்ந்து வருகிறது. பெரும்பாலான இந்தியர்களின் வாழ்க்கையின் மிக முக்கியமான மைல்கற்களில் ஒன்று வாகனம் வாங்குவது. அது பைக் அல்லது கார் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதேநேரத்தில் வாகனங்களை பொறுத்தவரை பயண வசதி மற்றும் சௌகரியத்தை வழங்கும்.
இதுஒருபுறம் இருக்க கார்களின் விபத்துகளும் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டே வாகன இன்சூரன்ஸ் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 1988 ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, குறைந்தபட்சம் மூன்றாம் தரப்பு கவரேஜை வழங்கும் முறையான மற்றும் செல்லுபடியாகும் கார் காப்பீட்டுக் கொள்கையால் கார் பாதுகாக்கப்பட்டிருந்தால் மட்டுமே, கார் உரிமையாளர் நாடு முழுவதும் உள்ள சாலைகளில் ஓட்ட முடியும்.
கார், பைக், லாரி, டெம்போ ஆகிய வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் தேவைக்கு எங்களை அழைக்கலாம்.