ஸ்ரீ வீரமாத்தி அம்மன் கோயில்
Sri Veeramathi Amman Temple, Kolappalur
(Kuruppa Nattu Aasari)
(Kuruppa Nattu Aasari)
நாள் : சுபகிருது வருடம், ஆடி மாதம் 9 ம் தேதி, 25.07.2022, செவ்வாய் கிழமை,
மற்றும்
ஆடி மாதம், 10 ம் தேதி, 26.07.2022, புதன் கிழமை.
கோவில் வாட்சப் குழுவில் இணைய.... https://chat.whatsapp.com/C6z4n6l2hdTHGAuLwVKDvr
நாள் : சுபகிருது வருடம், ஆடி மாதம் 3 ம் தேதி, 19.07.2022, செவ்வாய் கிழமை,
மற்றும்
ஆடி மாதம், 4 ம் தேதி, 20.07.2022, புதன் கிழமை.
கோவில் வாட்சப் குழுவில் இணைய.... https://chat.whatsapp.com/C6z4n6l2hdTHGAuLwVKDvr
நாள் : ஆடி மாதம் 12ம் தேதி
28.07.2021 புதன் கிழமை
கோவில் வாட்சப் குழுவில் இணைய இந்த இணைப்பை கிளிக் செய்யவும். https://chat.whatsapp.com/C6z4n6l2hdTHGAuLwVKDvr
திருவிழா :
ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதம் முதல் வாரத்தில் அமையும் புதன்கிழமை அன்று ஸ்ரீ வீரமாத்தி அம்மனுக்கு திருவிழா நடைபெறும். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வெள்ளம் அலைமோதும். திருவிழா காலங்களில் ஏராளமான ஆடுகள் கருப்பண்ணசாமி முன்பு பலியிட்டு வழிபடுவது வழக்கம்.
தீர்த்தம் எடுத்து வருதல்:
திருவிழா காலங்களில், முந்தைய நாள் மதியம் தீர்த்தம் எடுத்து வர செல்லுவார்கள். அதற்கு பக்தர்கள் முறையாக விரதம் இருந்து, காப்புக் கட்டி கொள்ளுவார்கள். பின்னர், கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து தரும் வாகனத்தில் காப்பு கட்டிய அனைவரும் சென்று புளியம்பட்டி ஆற்றில் அல்லது சந்தனத்துறையில் இருந்து பெரும்பாலும் தீர்த்தம் கொண்டு வருவார்கள்.
பின்னர், அக்கரைப்பாளையம் கிராமத்தில் இறங்கி, பம்பை மேள தாளங்கள் முழங்க, பக்திப் பரவசத்தில் ஆடிப்பாடி கோவிலை நோக்கி நகர்ந்து வருவார்கள். இரவு 7 மணி முதல் 9 மணிக்குள், தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு நடைபெறும். இரவில், தீர்த்தம் மற்றும் பால் குடம் எடுத்து வரும் போது, வான வேடிக்கைகள் நடைபெறும்.
வெளியூர் பக்தர்களுக்கு வசதியாக, இரவு அனைவருக்கும் சிறப்பு விருந்து கோவிலில் வழங்கப்படும். பெரும்பாலான பக்தர்கள், இரவில் கோவிலிலேயே தங்குவார்கள்.
பொங்கல் திருவிழா:
அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, பொங்கல் வைக்க ஆயத்தம் ஆவார்கள். சுமார் 8 மணிக்கு முன்பே பொங்கல் வைத்து விட்டு மாவிளக்கு பூஜைக்கு தயாராவார்கள்.
அலங்கரிக்கப்பட்ட மாவிளக்குகளை கோவிலின் அருகே உள்ள பெருமாள் திருக்கோயில் வைத்து பூஜை செய்வார்கள். பின்னர் பெருமாள் கோயிலில் இருந்து, பம்பை உடுக்கை மேள தாளங்கள் முழங்க கோவிலுக்கு எடுத்து வருவார்கள்.
காலை உணவு அனைத்து பக்தர்களுக்கும் கோவில் சார்பில் வழங்கப்படும்.
நேர்த்திக்கடன்:
பிறகு, பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து ஆடு மற்றும் கோழிகளை நேர்த்திக்கடனாக செலுத்த அவைகளை கோவிலுக்கு கொண்டு வருவார்கள்.
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் முடி காணிக்கை செலுத்தி வழிபடுவார்கள்.
கருப்பண்ண சாமிக்கு பெரும்பூஜை:
நேர்த்திக்கடனாக வரும் ஆடுகள் 10 மணிக்கு முன்பாக ஆலயத்திற்கு வந்து விடும். பின்னர், 11 மணியளவில் கிடாய் வெட்டும் பூஜை ஆரம்பமாகும். 12 மணியளவில், கருப்பண்ண சாமிக்கு பெரும்பூஜை ஆரம்பமாகும்.
கோவிலுக்கு வழங்கப்படும் ஆடுகள், அங்கேயே சுத்தம் செய்து சமைக்கப்படும். கருப்பண்ணசாமி பூஜை முடிந்த பிறகு, பக்தர்கள் அனைவருக்கும் கறி விருந்து வழங்கப்படும்.
இதில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அசைவ விருந்து உண்டு செல்லுவார்கள். மாலை வரையில், அசைவ விருந்து தொடர்ந்து நடைபெறும்
கூட்டுப்பணம்:
பக்தர்கள் தங்கள் கூட்டுப்பணத்தை கோவில் நிர்வாகிகளிடம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளுவார்கள். கோவில் சார்பில், முந்தைய ஆண்டின் வரவு செலவு கணக்கு புத்தகம் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும். இதன் மூலம், வெளிப்படையான நிர்வாகம் சீறும் சிறப்புமாக நடைபெறுவதை நாம் காண முடியும்.
வீட்டு விஷேசங்களுக்கும் மண்டபம்:
அதுமட்டுமின்றி, வருடத்தின் எந்த ஒரு நாளிலும், வீட்டு விஷேசங்களை நாம் கோவில் மண்டபத்தில் நடந்த முடியும். அதற்கு, மிகவும் குறைந்த கட்டணத்தில், சிறப்பாக அமைந்த மண்டபம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது. அங்கு அனைத்து விதமான விஷேசங்களுக்கும் தேவையான பொருட்கள் கோவில் சார்பில் வாங்கி வைக்கப்பட்டுள்ளது.
திருமணம், வளைகாப்பு, காது குத்துதல் போன்ற அனைத்து வகையான விழாக்களுக்கும், மண்டபம் கிடைக்கும். அதற்கு, நாம் கோவில் நிர்வாகத்தாரிடம் தொடர்பு கொள்ளலாம் அல்லது நமது பூசாரி அண்ணண் திரு. சின்னச்சாமி அவர்களை தொடர்பு கொண்டு வேண்டிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
அம்மாவாசை மற்றும் பௌர்ணமி திருவிழா:
வருடத்தின் அனைத்து மாதத்திலும் வரும் அம்மாவாசை நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், நாள் முழுவதும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அனைத்து பக்தர்களுக்கும், கோவில் சார்பில் பொங்கல் வழங்கப்படும்.
கடந்த சில வருடங்களாக, அனைத்து பௌர்ணமி நாட்களிலும் அம்மனை தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகம் வருகின்றனர். அம்மாவாசை, பௌர்ணமி மற்றும் திருவிழா காலங்களில், கோவில் பூசாரி திரு.சின்னச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் பங்களிப்பு மிகவும் போற்றுதலுக்குரியது.
கோவில் அமைவிடம்:
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ வீரமாத்தி அம்மன் ஆலயம், கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில், கோபி-குன்னத்தூர் சாலையின் நடுவே, கொளப்பளூரில் இருந்து நம்பியூர் செல்லும் வழியில், சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
கோபி-குன்னத்தூர்-திருப்பூர் பேருந்தில் ஏறி, கொளப்பளூரில் இறங்க வேண்டும்.
பின்னர் நம்பியூர்- கோபிச்செட்டிப்பாளையம் வழித்தடத்தில் இயங்கும் பேருந்து எண் 22, ல் சென்று கோவிலை அடையலாம். பேருந்து நிறுத்தம்: அக்கரைப்பாளையம், தாழ்குனி.
(அல்லது)
ஆட்டோவில், கொளப்பளூரில் இருந்து நம்பியூர் செல்லும் வழியில், சென்று சுமார் 3 கி.மீ தொலைவிலுள்ள கோவிலை அடையலாம்.
தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: Contact Address
திரு. அ. சின்னச்சாமி Chinnaaaamy. A
த/பெ அங்கமுத்து S/O Angamuthu
1/36, அக்கரைப்பாளையம் 1/36 Akkaraipalayam
தாழ்குனி-அஞ்சல், Thazhkuni po, Talguni,
கொளப்பளூர், Kollappalur
கோபிச்செட்டிப்பாளையம்- 638456 Gobi, Tamil Nadu - 638456
கைப்பேசி எண் : 9944424438 Cell:9944424438