கிராம மக்கள் கதிரவனின் கதிர் நிலத்தில் விழும் முன் கழனிக்கு வந்து அந்திவரை அயராதுஉழைக்கும் பண்பாளர்கள். உழைப்பிற்கேற்ற ஊதியத்தை உடன்பெற விரும்புபவர்கள்.வாங்கும் பணத்தைக் கொண்டு வயிற்றை நிரப்பும் வாழ்க்கையினர். இதனை,
“முதலாளி வந்தவுடன்
முதல் பணத்தை
பெத்துக்குவோம்
சீக்கிரமாய் நட்டுவாடி
சின்னபுள்ளே சிங்காரி”
-எனும் பாடலில் கிராம மக்களின் உழைப்பின் உயர்வும், ஊதியத்தை விரைவில் பெறவிரும்பும் எண்ணமும் புலப்படுகின்றன.
ஆகவே வேளாண்மைத் தொழில் நாட்டுப்புற மக்களின் உயிர்த்தொழிலாக விளங்குகிறது.உழுதொழில் தொடங்கும் முன் வயலைப் போற்றுவதும், ஏரில் பூட்டப்பட்ட மாட்டிற்கு தீங்குவராது இறைவனை வேண்டுதலும், புரட்டாசி மாதத்தில் மழை பொழியும் என்றநம்பிக்கையும், மழை பொய்த்தபோது மழைச்சோறு உண்கின்ற பழக்கமும்காணப்படுகின்றன. உழவுத்தொழில் புரிகிறபோது வயலுக்கு ஏற்றம் இரைத்து நீர்பாய்ச்சுவதில் கவலை ஏற்றம், ஆளேறும் ஏற்றம், பரிஏற்றம் என மூன்று வகைப்பட்டஏற்றங்கள் காணப்பட்டமையும் அறிய முடிகின்றன.
நாற்று நடும்போதும் அறுவடையின் போதும், போரடிக்கும் போதும் குலவை ஒலிஒலிக்கின்ற பழக்கம் காணப்படுகின்றனது. நாற்று நடுகின்ற நாளன்று உழத்தியர்களைஉபசரிக்கும் வழக்கமும், பண்ணையாரைப் பாராட்டும் பண்புள்ளமும், போராடிப்பதற்குயானை, மாடு, குதிரை போன்ற விலங்கினங்கள் பயன்படுத்தும் வழக்கமும் அக்காலத்திலஇருந்து வந்துள்ளமையை நாட்டுபுறப்பாடல்கள் வழி அறியலாம்.