நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வேளாண் உற்பத்திப் பெரும் பங்காற்றி வருகிறது. இதனால் தான் அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வேளாண் தொழிலை வளர்ப்பதில் அறிவியலார் முனைப்புக் காட்டி வருகின்றனர். வேளாண் துறையில் இன்று உள்ளது போல் அறிவியில் தொழில் நுட்பங்களின் பங்களிப்பு மிகப் பழங்காலத்தில் இல்லையென்றாலும் அக்கால வேளாண் குடிமக்களிடம் உழவு பற்றி கடைசியர் உழத்தியர் பங்கினை இருந்தனமயை இக்கட்டுரை வழிகாணலாம்.
தொழில்களில் தலைமைத் தன்மை வாய்ந்தது உழவுத் தொழில் எனலாம் இதனால் தான் ‘சுழன்றும்’ ஏர்ப் பின்னது உலகம்’ (1031) என்று வள்ளுவர் கூறினார். வேளாண் தொழிலை செய்வோர் உழவர். இவர்கள் இவ்வுலகத்தைத் தாங்கும் அச்சாணியாகத் திகழ்வதை
‘உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது’
எழுவாரை எல்லாம் பொறுத்து’ (1032)
என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். இவ்வுலகில் வாழும் எவரும் உழவருக்கு அடுத்த நிலையில் வைத்தே போற்றப்படுவர் என்பதை,
‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்’ (1033)
என்றும் அவர் தெளிவுறுத்துகிறார்.
உழவுத் தொழிலுக்கு அடிப்படைத் தேவையான நிலம் பற்றிய தொல்காப்பியரின் சிந்தனையைத் காணலாம். நிலமானது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகையாகப் பகுக்கப்பட்டது. இப்பாகுபாடு தொல்காப்பியர் காலத்துக்கு முன்வே இருந்தமையை,
‘முற்படக்கிளந்த எழுதிணை என்ப’ (தொல். பொருள் அகத் 1)
என்று அவர் கூறுவதன் மூலம் அறியலாம்.
மருத நிலம் என்பது வயலும் வயல் சார்ந்த பகுதியும் ஆகும். மருத நில மக்கள் ஊரன், மகிந்தன, உழவர், உழத்தியர், கடைசியர், கடைச்சியர் எனப்படுவர். வேளாண்மை இந்நில மக்களின் தலையாய தொழிலாகும். இவ்வுழவர்கள் தம் தொழிலில் சோம்பி இராதவர் என்பதனை பெரும்
‘மழயா வினைநர்’ (கலித் -79)
என்ற பாடலின் மூலம் காணலாம். இப்பகுதி வேளாண்மை செய்வதற்கு ஏற்றப் பகுதி என்ற உணர் திறனைப் பழந்தமிழர்கள் பெற்றிருந்தனர். உழவுத் தொழிலில் ஈடுபட்ட ஆடவர்கள் உழவர்கள் பெண்டிர்கள் உழத்தியர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஒரு பலம் புழுதி கால்பலம் புழுதி ஆகும்;படி உழுது காயவிட்டால் அந்நிலத்தில் பயிர் நன்கு செழித்து வளருமாம். இவ்வாறு உழவு செய்வோரைப் பலமுறை உழவு செய்வோர் என்ற பொருள்பட
‘செஞ்சால் உழவர்’ (196)
என்று பெரும்பாணாற்றுப்படைச் சுட்டுகிறது. இச்செய்தியை
‘……. உறுபெயரல்
தண்துளிக்கு ஏற்ற பல உழுசெஞ்செய்
மண்போல் நெகிழ்ந்து’ (26:23-25)
என்று அகநானூறு குறிப்பிடுகிறது.
சங்க காலத்தில் உழவே முதன்மையான தொழிலாக விளங்கியது. வளமிக்க மருதநில மக்கள் ஏனைய மக்களைவிட நாகரிகத்தில் மேம்பட்டவர்களாகத் திகழ்ந்தனர். ஊழவர், உழத்தியர், கடையர், கடைசியர், என்னும் சொற்கள் உழவர்கள் குறித்து ஆளப்படும் சொற்களாகும்.
உழுதல் என்றால் நிலத்தின் மேற்பரப்பில் உள்ள கடினம் தன்மைக் கொண்ட மண்ணை மெண்மைத் தன்னக் கொண்டிதாக மாற்றி மேலும் கீழாக உழுவது. இவ்வாறு செய்யும ;பொழுது மண்ணுக்கு நல்ல காற்றோற்றம் கிடைத்தது. விளைச்சல் பெருகும்.
‘உறுபெயல் தண்துளிக்கு ஏற்றபல செஞ் செய்’ (அக) குறிப்பிடுகிறது
சமன்செய்தல்
நிலத்தை நன்கு உழுத பிறகு, பள்ளம் இல்லாதவாறு இயன்றவரை சரிசெய்வர், மேடான பள்ளங்கள் மண்வெட்டியால் வெட்டித் தாழ்வான பள்ளங்களில் இட்டு உயர்த்துவர். இதனால் நிலம் சமனடையும். இவ்வாறு செய்வதால் நிலத்தின் நிர்ப்பாசனம் ஒரே சீராக இருக்கும். நன்றாக உழவு செய்த பிறகு சேற்றினை உழவர்கள் கால்களால் மிதித்து சமப்படுத்தினர்.
‘…… செறுவின்
உழாவுநுண்தொளி’ (210-211)
பெரும்பானற்றுகுறிப்பிடுகிறது.
கடைசியர் நாற்று நடுதலும் களைபறித்தலும்
தொளி கலக்கிப் பண்படுத்திய வயல்களில் கடைசியர் நெல் நாற்றை நடவு செய்தது பற்றியும் களைப் பறித்தது பற்றியும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
‘முடிநாறழுத்திய நெடுசீர்ச் செறு’ (211-18)
என்று பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது.
‘வயலில் கடைசியர்கள் பறித்தது பெரும’; (211-18)
ஆகியவை குறிப்பிடுகின்றன. மருதநிலம் நீர் வளம் மிகுந்து காணப்படும். உழவர் வயலில் செந்நெல் விளைவித்துள்ளனர். செந்நெல் செழிப்பாக வளர்ந்து உள்ளது.
சேற்று நிலத்தில் நாற்றுகளைப் பரவலாக ஊன்றும் செயல் நடுதல் நடுவு செய்வோர் நடுவர் என்று நற்றிணைக் குறிப்பிடுகிறது. நாற்றினைச் சேற்றில் அழுத்தி நடுவதை ‘நீர் உறு’ (60:7-8) நற்றிணை குறிப்பிடுகிறது.
மகளிர் தம் ஒப்பனைப் பொருட்களுள் மலர்கள் என்றும் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கின்றன. மகளிர் மட்டுமல்லாது ஆண்களும் தலை, கழுத்து, கை ஆகிய உறுப்புகளுக்கு மலராகவும் மாலையாகவும், கண்ணியாகவும் ஒப்பனை செய்தனர். மலர் ஒப்பனையில் ஆடவரைக் காட்டிலும் மகளிரே உயர்ந்து நின்றனர். மகளிரின் மலர் மீதுள்ள விருப்பத்தை அறிந்த பெண்கள் மலர்களை விற்கும் மணியில் ஈடுபட்டனர். தாம் இருக்கும் இடச்சூழலுக்கும் மலரும் காலத்திற்கும் ஏற்ப மலர்கள் விற்கப்பட்டன. மருத நில மங்கை ஒருத்தி வயலில் உள்ள கருங்குவளை மலரினை மக்கள் உள்ள ஊரினுள் கொண்டு விற்றதணை,
‘வீங்குநிர் அவிழ்நிலம் பகர் பவர் வயற்கொண்ட
ஞாங்கர் மலர் சூழ்ந்து ஊர்புகுந்து வரிவன’ (கலித் -66)
என்ற அடிகளால் அறிய முடிகிறது.
செந்நெல் விளைதல்
செந்நெல் மருத நிலத்தில் விளைவித்தனர்
‘புள்ளிமிழ் அகல்வயல் ஒலி செந்நெல்
இடை பத்த’ (கலித்-79)
என்னும் வரி விளக்குகிறது.
நிலத்ததை நன்கு பண்படுத்திய பிறகு விதை விதைப்பர். இச்செய்தி சங்க இலக்கியத்தில் பல இடங்களில் பயின்று வந்துள்ளன. நெல் விதைத்தல், வரகு விதைத்தல், சாமை விதைத்தல் முதலியவை முல்லை மற்றும் மருத நில மக்களின் தொழில்கள் என்பது இங்கு நினைவில் கொள்ளத்தக்கதாகும்.
(76,11) பதிற்றுப்பத்து
உழவர்கள் காலையில் விதைப்பதற்காகச் சிறிய கூடைகளில் விதைகளை எடுத்துச் சென்ற செய்தியை
(155:1-2) குறுந்தொகை
என்று குறிப்பிடுகிறது.
விதைப்பதற்கு உரிய வித்துகளைப் பழந்தமிழர்கள் நன்கு உலரவைத்தற்கான சான்றும் கிடைக்கிறது.
‘வெண்ணெல’ (211:6) அகநானூறு
குறிப்பிடுகிறது. அதாவது, உழவர்களின் விதை நெல்லைப் போன்று கடம்ப மலர்கள் பாறையின் மீது நன்கு காய்ந்துகிடக்கிறதாம்.
விளை நிலங்களில் நல்ல உரமிட்டால் நல்ல விளைவைப் பெறலாம் என்று உழவர்கள் அறிந்திருந்தனர் கால்நடைகளின் சாணத்திணையும், இலை தழைகளையும் எருவாக பயன்படுத்தினர். கால்நடைகளின் சாணத்தினை ‘தாதெரு’ எனக் குறித்தனர், எருக்களைக் கொட்டி வைப்பதற்கு ‘தாதொரு மன்றம்’ எனக் (கலித்-108) குறிப்பிட்டனர்.
வயலில் கடைசியர் களைபறித்தது குறித்தும் அந்நூல் கூறுகிறது. கடைசியர் களையாக பறித்த தண்டினை தமது கைகளில் வளையலாக அணிந்து அழகு பார்த்ததனை ‘கழனி ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்’ என்று புறநானூறு எடுத்துரைக்கிறது.
வயலிற்களை பறித்த கடைசியர் நெய்தற் பூவையும் முள்ளியின் பூவையும் தண்டாங் கோரையைப் பல்லால் சவட்டிக் கிழித்ததில் தொடுத்து ஈர் நிறைந்த தலையிற் சூடிக் கொணடதை,
‘களைநர் தந்த கணைக்கால் நெய்தல்
கட்கமழ் புதுப்பூ முனையின் முட்சினை
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளிக்
கொடுங்கால் மாமலர் கொய்து கொண்டவண
பஞ்சாய்க் கோரை பல்லிற் சவட்டிப்
புணர்நார்ப் பெயத் புனைவின் கண்ணி
புணர்நார்ப் பெயத் புனைவின் கண்ணி
பீருடை யிருந்தலையாரச் சூடி’
என்று பெரும் (211-18) கூறுகிறது.
கொண்ணைடயாகிய மயிரையும் குளிர்ந்த தழையுடையயையும் உடைய கடைசியர் மலங்கு மீன் பிறழ்கின்ற செய்யில் நெய்தலையும் ஆம்பலையும களைந்ததை,
‘கொண்டைக் கூழித் தண்டழைக் கடைசியர்
சிறுமா ணெய்தல் ஆம்பலொடு கட்கும்
மலங்கு மிளிர் செறு’
என்று புறம் (61) கூறுகிறது.
களமர் கடைசியர் கடையர் என்று அழைக்கப்பட்ட உழைக்கும் மக்கள் வரிசையாக நின்று இடா, ஏற்றம், பூட்டைப்பொறி, பிழா, பன்றிப் பத்தர் முதலியவற்றால் குளங்களில் இருந்து வயல்களுக்குத் தண்ணீர் இறைத்த காட்சியைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.
வயலில் களை பறித்த கடைசியர், வயலில் பிறழ்ந்து துள்ளிய மலங்கு, வாளை முதலிய மீன்களைத் தளம்பு என்றும் சேறு குத்தியால் பிடித்து வந்தனர். ஆதனைத் துண்டு துண்டாக அறுத்தும் சமைத்ததைப் புதிய நெல்லில் சமைத்த சோற்றுக்கு மேல் ஈடாக கொண்டு விலா புடைக்கத்தின்ற களமரைப் பற்றி (புறம்.61) மதுரைக்குமரனார் கூறுகிறார்
மருதநில மக்களின் விவசாயம், மலர் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர், இவ்வாறு ஒவ்வொரு திணை நிலை மக்களும் பல்வேறு தொழிலை மேற்கொண்டு வாழ்ந்துள்ளனர்.
சங்க இலக்கியத்தில் கடைசியர்
சு.பேச்சியம்மாள்,
உதவி பேராசிரியர்,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி.