Play Video
Play Video
Play Video
Play Video
Play Video
Play Video
Play Video
02/21/2021
கடலில் நண்பர்களுடன் குளித்த இளைஞர் அலையில் சிக்கி உயிரிழப்பு - வடமராட்சியில் துயரம்
வடமராட்சி தொண்டமானாறு சின்னக்கடலில் நண்பர்களுடன் நீராடச்சென்று இளைஞர் ஒருவர் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்
இச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5-00 மணியளவில் இடம் பெற்றுள்ளது வடமராட்சி உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பொ - அபர்காஷ் [வயது 19 ] என்ற இளைஞர் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது விசாரணைகளை வல்வெட்டி துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நெற்றியில்_பொட்டுடன் நெறிப்படுத்திய சுவாதி மோகனை பார்த்து பெருமை கொள்கிறது தமிழினம்
செவ்வாய்க் கிரகத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது நாசாவின் கலம்.
நெறிப்படுத்தி தரையிறக்கினார் #சுவாதி மோகன்.
விஞ்ஞான வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தில் தரைக்கலம் ஒன்றை தரையிறக்கும் முயற்சி வெற்றிகரமாக நடந்தேறியது.
செவ்வாய்க் கிரகத்தில் உயிர்க்கலங்கள் உண்டா என்பதை கண்டறியும் இம்முயற்சி வரும் நாட்களில் மேலதிக வியத்தகு விடயங்களை அறியத்தரலாம்.
எனினும் கடந்த ஆண்டு யூலை 30ஆம் நாள் ஏவப்பட்ட விண்கலம் முதல் இன்று தரையிறங்கும் வரை ஏன் அதன் வடிவமைப்பு உட்பட முழுமையாக தலைத்துவம் வழங்கிய சுவாதி மோகனே இதன் மையக்கருவாக இருந்தார்.
பெங்கலூரில் பிறந்து ஒரு வயதில் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து இன்று நாசாவின் முதன்மை விஞ்ஞானியாகி வரலாற்று நிகழ்வை உலகத் தொலைக்காட்சிகளில் நெற்றியில் பொட்டுடன் நெறிப்படுத்திய சுவாதி மோகனைப் பார்த்த போது பெருமையாக இருந்தது.
சாவகச்சேரியில் கோரவிபத்தில் வடமராட்சி நெல்லியடி இளைஞர் – ஒருவர் பலி! ஒருவர் படுகாயம்!!
தென்மராட்சி சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று மதியம் சாவகச்சேரி ஐயா கடையடிப் பகுதியில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
சாவகச்சேரியிலிருந்து கொடிகாமம் நோக்கிச் சென்ற ஹயஸ் வானும் கொடிகாமத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
இதில் நெல்லியடியை சேர்ந்த ஜெகன் அன்ரனி சியம் (வயது – 20) என்பவர் உயிரிழந்துள்ளதுடன் பருத்தித்துறை கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த சந்தகுமார் சுதர்சன் (வயது 24) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
"பாசாலை அதிபர் பைப் (எஷ்லோன்) பட்டையால் ஒரு மாணவியை கடுமையாக தாக்கியதால் #நோயாளி_மாணவி மயங்கி சுயநினைவை இழந்தார்."
கண்டி, தாலாத்துஓய தமிழ் மகா வித்தியாலயத்தில்.. சுகவீனம் காரணமாக பாடசாலைக்கு ஒரு நாள் சமூகமளிக்காத 12ம் வகுப்பு மாணவி(வினோதினி)யை பாடசாலையின் அதிபர்(இந்திரகுமார்) #தூசன_வார்த்தைகளால் திட்டி #எஷ்லோன்_பட்டையால் மிகவும் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார்.
"மாதா,பிதா,குரு,தெய்வம்"
தெய்வத்துக்கே முன் இருப்பது "குரு" ஸ்தானம் தான். அதை தூசன வார்த்தைகளால் அழகு படுத்தி ஒரு மாணவியை அடித்துள்ளார் இவர்.
"அடியாத பிள்ளை படியாது" என்பார்கள். அந்த அடி.., பிள்ளை படிப்பதற்காக இருக்க வேண்டுமே தவிற ஒரு பிள்ளை சாகும் அளவிற்கு கொடூரமாக இருக்கக் கூடாது.
இப்போதெல்லாம் பல ஆசிரியர்கள் இப்படித்தான் மூர்க்கத்தனமாக நடந்துக் கொள்கின்றார்கள்.
இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#நிந்தவூரில்_5000_ரூபாய்_கள்ள_நோட்டுகளை_அச்சடித்த_மூவர்_கைது!
7 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான கள்ளநோட்டுக்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (15) வாழைச்சேனை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய அக்கரைப்பற்று பொலிஸாரினால் குறித்த மூவரும் கைதாகியுள்ளனர்.
இவ்வாறு கைதானவர்கள் நிந்தவூர் பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கி இருந்து இவ்வாறான சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளனர்.
கைதாகிய குறித்த சந்தேக நபர்கள் தங்கிய வீட்டில் இருந்து பிறின்டர் மற்றும் கணனி உள்ளிட்ட 5000 ரூபா நோட்டு பணம் அச்சிடும் தாள்கள் அச்சிடப்பட்ட பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.
மேலும், இவ்வாறு கைதான நபர்கள் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் ஒலுவில் பாலமுனை கல்முனை ஆகிய பகுதியை சேர்ந்த சந்தேக நபர்களே இவ்வாறு கைதானவர்களாவர்.
இதில் கைதான சந்தேக நபர் ஒருவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னரும் கள்ள நோட்டுக்களை அச்சடித்து விநியோகித்த குற்றச்சாட்டில் கைதாகி விடுதலையானவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஷரீஆ சட்டத்தை பின்பற்றவேண்டுமாக இருந்தால் சவூதி அரேபியாவுக்கு போகவேண்டிய தேவையில்லை என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார். நாடு சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே அனைத்து இன மக்களுக்குமான தனியார் சட்டங்கள் நாட்டில் அமுலில் இருக்கின்றன. அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையில் அரசாங்கம் எதிர்பார்த்தவர்களுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் தெரிவிக்கப்படவில்லை. அதனால் முஸ்லிம்களின் மீது பழிசுமத்தி திசைதிருப்பும் நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது இலங்கை மக்கள் நாட்டு சட்டத்தையே பின்பற்றவேண்டும். அஸாத் சாலி ஷரீஆ சட்டத்தை பின்பற்றுவதாக இருந்தால் சவூதி அரேபியாவுக்கு செல்லவேண்டும் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்...
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட் 19 தடுப்பூசியை பெற்றுக்கொள்ள சுயமாக நேரத்தை ஒதுக்கும் நடவடிக்கை இலவசமாக இடம்பெறுமென மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.
கொவிட் 19 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் நேற்றைய தினம் மாத்திரம் 2 ஆயிரத்து 603 பேருக்கு எஸ்டரா செனேக்கா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய இதுவரை 7 இலட்சத்து 73 ஆயிரத்து 11 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகள் கொவிட் 19 தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு வசதியான நேரத்தை சுயமாக இவலசமாக ஒதுக்கிக் கொள்வதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாநகர சபையின் www.colombo.mc.gov.lk எனும் இணையத்தளம், ஈ ச்சனலிங்.கொம் இணையத்தளம் ஊடாகவோ அல்லது ஈ சனலிங்; கையடக்கத் தொலைபேசி செயலியின் ஊடாகவோ நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும். இதற்கு எந்தவொரு இடைத்தரகரும் தேவையில்லையென கொழும்பு மாநகர ஆணையாளர் சட்டத்தரணி ரோஷினி திசாநாயக்க தெரிவித்தார்.
#நிலாவெளி கடலில் மூழ்கி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மரணம்
யாழ்ப்பாணத்திலிருந்து சுற்றுலா வந்திருந்தவர்கள் நிலாவெளி கடற்கரையில் நீராட சென்றவேளை நீரில் மூழ்கி இருவர் மரணமடைந்துள்ளனர் மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மரணித்தவர்கள் யாழ்ப்பாணம் குப்பிளானைச் சேர்ந்த 21 வயதையுடைய சிந்துஜன் மற்றும் கௌதமன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சிந்துஜன் வயாவிளான் மத்திய கல்லூரியும், கௌதமன் ஸ்கந்தவரோதயா கல்லூரி பழைய மாணவர்கள் ஆவார்.
நண்பர்களுடன் நேற்று திருகோணேஸ்வரம் ஆலயத்துக்கு சென்றதுடன் பின்னர் இன்று மதியம் நிலாவெளி கடற்கரையில் நீராடச் சென்றிருந்த சமயம் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளனர்.