2017 நவம்பர் மாதத்தில் இலங்கைக்குப் பயணப்பட்டேன். நான்கு நாட்கள் பயணித்துத் திரும்பிய அனுபவங்கள் படைப்பு குழுமத்தின் தகவு மின்னிதழில் “ஈரிருநாள் இலங்கை” எனும் தலைப்பில் தொடராக வெளியானது. மொத்தம் ஏழு மாதங்கள் வந்த தொடரைத் தொகுத்து நூலாக வெளியிடலாமே என்ற சிலரது விழைவு தற்போது நிறைவேறி இருக்கிறது.
இதுவரை கண்டிராத ஒரு நாட்டில் சென்றது, நடந்தது, உண்டது, பேசியது, கற்றது, பெற்றது என்பனவற்றை இந்நூலில் ஆவணப்படுத்தியுள்ளேன். முதுகலை பயின்ற மாணவனின் பார்வையில் அயல்நாட்டில் நான்கு நாட்கள் எப்படி உணரப்பட்டன என்பதை இந்நூல் அறிவிக்கும். ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்து, இந்தியப் பிரதிநிதியாக பன்னாட்டு அரங்கில் பங்கெடுத்ததன் வெளிப்பாடு இது. நீளும் கோட்டின் ஆதிப்புள்ளி இது.
‘அமயம்’ என்ற சொல்லுக்கு RIGHT TIME என்று பொருள் வரையறை செய்கிறது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி. ‘அமயம் சமயம்’ என்ற தொடர் இன்றும் வழக்கில் உள்ளது பலரும் அறிந்ததே. உரிய காலத்தில் செய்யப்படும் உரிய செயல் மகத்தான மாற்றங்களைத் தரும்.
to read...
‘கிரேக்க மெய்யியலாளரான(Philosopher) அரிஸ்டாட்டிலின் ‘இயற்பியல்’ (Physics) குறித்த அறிமுகமும் அதன் தமிழாக்கமும் இந்த மின்னூலில் இடம்பெற்றுள்ளது.
அரிஸ்டாட்டிலின் இயற்பியலைத் தமிழுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற முயற்சியின் விளைவே இந்த மின்னூல். அரிஸ்டாடிலைப் புரிந்து கொள்ள ஏதுவாக கிரேக்கம் குறித்த அறிமுகச் செய்திகள் முற்பகுதியிலும் தமிழாக்கம் பிற்பகுதியிலும் இடம்பெற்றுள்ளன.
தமிழாக்கம் சொல்லுக்குச் சொல், வரிக்கு வரி நேரடியாகச் செய்யப்பெறாது, முதன்மையானவை மட்டுமே கருத்துப் பெயர்ப்பாக அமைகின்றது. இக்கருத்துகளை மெய்யியல் பின்னணியில் நோக்குகையில் பல்வேறு பரிமாணங்கள் கிட்டுகின்றன. தமிழாக்கம்… மின்னூலில்
to read...