என்னை பற்றி

நான் சிவராஜ், முதுகலை கணினி அறிவியல் பட்டதாரி. ஒரு அரசு அலுவலகத்தில் பணிபுரிகிறேன். சராசரி வாழ்க்கை வாழும் ஆயிரக்கணக்கான ஆண்களில் நானும் ஒருவன். பெரிய அளவில் லட்சியங்களோ, எதிர்ப்பார்ப்புகளோ இல்லை என்றாலும் எடுத்துக்கொண்ட வேலை எதுவானாலும் அதை திறம்பட செய்து முடிக்க வேண்டும் என நினைப்பவன். என் அலுவலக வேலைகளில் அதை கடைபிடித்தும் வருகிறேன். மட்டைபந்து விளையாட்டில் ஆர்வம் அதிகம். செய்திதாள்களை பக்கம் பக்கமாக படித்தாலும் ஏனோ தொலைகாட்சி செய்திகள் பார்க்க பிடிப்பதில்லை. இசையில் அன்பான பாடல்கள் மற்றும் மென்மையான பாடல்களுக்கு முதலிடம். பார்ப்பதற்கு அமைதியானவன், பழகுவதற்கு இனிமையானவன்.

என் மனைவி கிருத்திகா, முதுகலை இயற்பியல் பயுன்று கொண்டு இருக்கிறாள். குருகுலம் ஆரம்ப பள்ளியில் ஆசிரியையாக பணி புரிகிறாள், காலையில் எழுந்து அவசரமாக வேலை முடித்து பள்ளி சென்றுவிட்டு மீண்டும் மாலை வீடு திரும்பி வீட்டு வேலைகளை முடித்து தூங்கி எழுந்து மீண்டும் என்று ஒரு இந்திர தனமான வாழ்க்கை வாழும் சராசரி பெண்.

என் மூத்தமகன் சூர்யா, நான்காம் வகுப்பு(2022) படிக்கின்றான். இயற்கையான குழந்தைதனம், குரும்புதனம் அத்தனையும் கொஞ்சம் அதிகமாகவே உண்டு. பள்ளி கிரேடில் A+ க்கு குறையாதவன். ஒரே பாடத்தில் ஒருமுறை 100 மதிப்பெண்களும் இன்னொரு முறை பாதிக்கும் கீழேயும் எடுத்து என்னை கதிகலங்க வைப்பான். வீட்டிற்கு வந்தால் படிக்க கூடாது என்ற சட்டத்தை கொண்டிருப்பவன் போல்தான் நடந்துக்கொள்வான். கடும் முயற்ச்சி எடுத்தே வீட்டுப்பாடம் செய்ய வைக்கின்றேன். விருப்பமானது என்று எதை தேர்ந்தெடுக்கவும் அவனுக்கு உரிமை உண்டு, அதே சமயம் அதில் இறுதிவரை போராடி வெற்றி பெறும் கடமையும் உண்டு என்பதை உணர்ந்தாலே போதும். நாங்கள் விரும்பும் நிலையை அடைந்து விடுவான்.

என் இளையமகன் சஞ்சீவ், UKG (2022) படிக்கின்றான். இயற்கையான குழந்தைதனம், குரும்புதனம் அத்தனையும் கொஞ்சம் அதிகமாகவே உண்டு. எதிர்காலம் அவனுக்காக எதை வைத்துக்கொண்டு காத்திருக்கிறது என்று தெரியவில்லை, ஆயினும் நிகழ்காலத்தில் அவனை வழிநடத்தும் பொறுப்பை எங்களிடம்தான் விட்டுச் சென்றிருக்கிறது. அதை நாளுக்கு நாள் சரியான முறையில் செய்து கொண்டிருந்தாலே போதும். மற்றதை கடவுள் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில் தான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.