தமிழ் | ஆங்கிலம்
தமிழ் | ஆங்கிலம்
முகப்பு | சுயவிவரம் | ஆராய்ச்சி | கற்பித்தல் | நிழற்படத்தொகுப்பு | தொடர்பு
வருக!
வணக்கம், எனது கல்வி தொடர்பான இவ்விணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!
நான் முனைவர். சு. சண்முகவேல், லூலியோ தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட மேலாய்வாளராக எனது ஆய்வுப் பணியினை மேற்கொண்டுவருகிறேன். நான் பல துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட போதிலும்,
சிலிக்கான் படிக வளர்ச்சி
படிக சிலிக்கான் சூரிய மின்கலங்கள்
கட்ட உருமாற்ற மாதிரியாக்கம்
சிதைவினால் தூண்டப்படும் நுண்-கட்டமைப்பு மாற்றங்கள்
போன்ற துறைகள் அவற்றுள் முதன்மையானவை.
இத்தளமானது ஆராய்ச்சி, கற்பித்தல் மற்றும் கல்வியியலில் எனது பயணத்தை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. எனது நடப்பு ஆராய்ச்சித் திட்டங்கள், நான் வெளியிட்டுள்ளஆய்வுக் கட்டுரைகள், நான் கற்பித்த பாடங்கள் மற்றும் நான் பெற்ற அங்கீகாரங்கள் பற்றிய பல தகவல்களையும் நீங்கள் இங்கு காணலாம். மேலும், எனது வாழ்க்கையின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தருணங்களை ஒரு நிழற்படத்தொகுப்பாக இத்தளத்தில் பகிர்ந்துள்ளேன்.
இந்தத் தளத்தினை தயங்காமல் ஆராய்ந்து என்னுடன் இணையவும். அர்த்தமுள்ள கல்வி மற்றும் ஆய்வு சார்ந்த விவாதங்கள் மற்றும் ஒத்துழைப்புகளுக்கு நான் எப்போதும் ஆர்வமாக உள்ளேன் .
செய்திகள் மற்றும் சிறப்பம்சங்கள்
திருச்செந்தூர், ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்பியல் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட, திறன்மிகு சாதனங்களை உருவாக்குவதற்கான மேம்பட்ட பொருட்கள் என்ற தலைப்பிலான சர்வதேச மாநாட்டில் சிறப்புரை ஆற்றினேன். இந்த மாநாடு, பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த பேச்சாளர்களை ஒன்றிணைத்தது. திறன்மிகு பொருட்கள், நானோ பொருட்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் உணரி தொழில்நுட்பங்களில் உருவாகி வரும் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
📬 என்னுடன் சேர்ந்து பணியாற்றவோ அல்லது என்னை தொடர்பு கொள்ளவோ விரும்பினால், தொடர்பு என்ற பக்கத்திற்குச் செல்லவும்.