ஜோதிர் த்யானம் - Jyothir Dhyaanam

ஓம் ஸ்ரீ சாய்ராம்

நிமிர்ந்து உட்கார்ந்து நம் முன் தெரியும் ஜோதியில்,

யாமிருக்க பயமேன் என்று அபய ஹஸ்தம் காட்டி நம்மை ரக்ஷிக்கும் பகவானின் திருவுருவத்தை மானஸீகமாகக் காணுவோம்.

கண்களை மெதுவாக மூடி ஜோதியை இரு புருவத்தின் மத்தியில் நிறுத்தி சில வினாடிகள் த்யானம் செய்வோம்.

ஜோதி மெதுவாக இரு கண்களிலும் பரவுகிறது. கண்கள் ஜோதிர் மயமாகின்றது. கண்கள் நல்ல காட்சிகளையே காணட்டும்.

பிறகு ஜோதி மெதுவாக இரு செவிகளிலும் பரவுகிறது. செவிகள் ஜோதிர் மயமாகின்றன. செவிகள் நல்ல வார்த்தைகளையே கேட்கட்டும்.

பிறகு ஜோதி நாசிக்குப் பரவுகிறது. நாசி ஜோதிர் மயமாகிறது. நாசி நல்ல காற்றையே ஸ்வாசிக்கட்டும்.

பிறகு ஜோதி மெதுவாக நாவிற்குப் பரவுகிறது. நா ஜோதிர் மயமாகிறது.நா நல்ல வார்த்தைகளையே பேசட்டும். நல்ல உணவையே உட்கொள்ளட்டும்.

பிறகு ஜோதி மெதுவாகக் கீழிறங்கி ஹ்ருதய கமலத்திற்குப் பரவுகிறது. ஹ்ருதய கமலம் ஜோதிர் மயமாகிறது. ஹ்ருதய கமலத்தில் பகவானை நிறுத்தி சிறிது நேரம் தியானம் செய்வோம்.

நாம் நல்லவற்றையே நினைப்போம். நல்லவற்றையே பேசுவோம். நற்காரியங்களையே செய்வோம்.

பிறகு ஜோதி மெதுவாக இரு கைகளிலும் பரவுகிறது. கைகள் ஜோதிர் மயமாகின்றன. கைகள் சத்காரியங்களையே செய்யட்டும்.

பிறகு ஜோதி மெதுவாகக் கீழிறங்கி இரு கால்களிலும் பரவுகிறது. கால்கள் ஜோதிர் மயமாகின்றன. கால்கள் பகவான் காட்டிய நல்ல வழியிலேயே நடந்து செல்லட்டும்.

இவ்வாறாக ஜோதி நம் உடல் முழுவதும் பரவி நாம் ஜோதிர் மயமாகிறோம்.

இந்த ஜோதி சிறு சிறு வளையங்களாகப் பிரிந்து , நம் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அறிந்தவர்கள், அறியாதவர்கள் மற்றும் அனைத்து ஜீவராசிகளிலும் பரவி, இந்த ப்ரபஞ்சமே ஜோதிர் மயமாகிறது.

இந்த ப்ரபஞ்ச ஜோதியில் நாமும் ஒரு சிறு ஜோதியாக இருந்து சிறிது நேரம் த்யானம் செய்வோம்.

எங்கும் நிறைந்துள்ள ஜோதி நம்முள்ளேயும் இருக்கிறது. நாமே ஜோதி ஸ்வரூபம் என்று உணர்கிறோம்.

சாய்ராம்.

அஸத்தோமா சத் கமய

தமஸோமா ஜோதிர்கமயா

ம்ருத்யோர்மா அம்ருதம் கமய

ஓம்.. சாந்தி....சாந்தி... சாந்தி:

________________________________

1. Let us close the eyes and chant Omkar (OM) 3 times

To make the mind become tranquil and steady.

2. Keeping the eyes closed, let us put the breath in rhythm

To make it normal and calmer.

In our mind (mentally) repeat "SOHUM'. (1-2 mins.)

As we inhale mentally repeat "SO"

As we exhale mentally repeat "HUM". (1-2 mins.)

3. Let us mentally bathe the senses in the light

Look at the Jyoti, imagine that the flame is ablaze in the

Lotus of our heart. Having the beautiful feeling of LOVE.

Take the flame to the different parts of the body.

"Let not my eyes see evil

"Let not my ears hear evil or bad

"Let my tongue speak only sweet words

"Let my hands do only right things

"Let my legs be always moving towards places for good actions

and good work."

Now, bring the flame up the legs slowly, strengthening; up through

the stomach, cleansing; through to the eyes, taking away all the

darkness and out of the body through the head, purify us.

4. Open the eyes and look at the Jyoti. (2-3 mins.)

5. Now imagine the figure, of the form of your choice (Baba), for worshipping in the Jyoti. (2-3mins.)

6. Effortlessly repeat OM SAI RAM or your personal mantra. (2-3 mins.)

It should be natural and without tension. Relax.

7. Slowly close the eyes and meditate for a few minutes. (15-20 mins.)

8. Keep the eyes closed, stop repeating the mantra, or having the flame and form consciously. (2-3 mins.)

9. End meditation. Softly and slowly.

Om Asato Ma Sadgamaya

Tamaso Ma Jyotirgamaya

Mrutyor Ma Amrutamgamaya

Om Shanti Shanti Shanti

________________


DOWNLOADS