Happy New year 2012

Post date: Jan 1, 2012 2:28:17 AM

ஓம் ஸ்ரீ சாய்ராம்

சத்தியத்தின் அன்புத்தந்தை நெஞ்சில்வரும் நாளெல்லாம்

புத்திதன்னில் அவன்நினைவு துஞ்சித்தரும் இனிமையினால்

எத்திசையும் பரந்துநிற்கும் அவனருளின் மேன்மை யினால்

புத்துணர்வு கொடுத்திருக்கும் புத்தாண்டில் கணமுமெலாம்

முத்தில் ஒளிர்ந்திருக்கும் அவனழகு முகம்போதும்

சித்தில் நினைத்திருக்க நம்ஞானம் வளர்ந்தோங்கும்

போற்றிப் பாடிடுவோம் சாயிபுகழ் தினந்தோறும்

பற்றிப் பிடித்திடுவோம் அவனினிரு மலர்ப்பாதம்