Sri Sathya Sai Subhodhbhavam 21-Nov-2014

Post date: Nov 22, 2014 6:38:17 AM

ஓம் ஸ்ரீ சாய்ராம்……!!!

பகவானின் பொற்பாத கமலங்களுக்கு சிரம் பணிந்த வணக்கங்கள்..!

சத்ய சாயி சுபோத்பவம் என்ற பதத்தைப் பிரித்துப் பொருள் கொண்டோமானால்,

சத்யம் : என்றும்-நிலைக்கும் உண்மை என்றும், பரப்ரம்மம் என்றும் பொருள்படும்.

சாயி : என்றால் அன்பு. அன்பு என்றால் அன்னை. அன்னையின் அன்புக்கு ஏது ஈடு. அன்னையாகிய அன்பு, சக்தி என்று பொருள்படும்.

சுப : மங்களகரமான என்ற பொருள் படும். சிவம் என்றால் மங்களம் என்ற ஒரு பொருளும் உண்டு. எனவே, சுப என்றால் சிவ என்றும் பொருள்படும்.

உத்பவம்: என்றால் தெய்வீகத் தோற்றம் அல்லது அவதாரம் எனப் பொருள்படும்.

ஆக , சத்யமான பரப்ரம்மம் சாயி என்ற அன்னை சக்தி அம்சத்தையும், சுபம் என்கிற சிவ அம்சத்தையும் கொண்டு சிவ-சக்தி ரூபமாக உத்பவித்ததைக் கூறுவதே இந்த இசை-நிகழ்ச்சியின் நோக்கம்.

இந்த நிகழ்ச்சியை நமது சமிதி மகிளாஸ் இணைந்து நடத்தினார்கள்.

AUDIO