சத்தைத்தரு பர்த்தித் திருமகன் புத்திக்கிரை சித்திச் சுடரென
அன்புக்குரு வந்திங் குலகமர் கணம்போதும்
(2)
மக்கட் பிறவிக்குப் பிறவியின் ஏற்பட்டது நிற்பித் தருள்வதும்
முற்பட்டுசு..வர்கத் தமர்தலும் புவிகாண
(2)
(Music)
பற்றும்தளை நித்தம்முனைப்பொடு சற்றைக்கொரு பித்தைத் தருமொரு வட்டச்சுழல் துண்டித் தெகிரிட இனியோட
(2)
சித்தர் விரதத்தை அடவியில் உச்சிச்செயல் மிஞ்சத் தகுஅருள்
இஷ்டத்தொடு ரட்சித்தருள்வதும் வரும்நாளை
(2)
(Music)
தித்தித்ததை சித்தப் பரிவுற தந்தம்மனம் நைந்துத் துயரணை
திக்கற்றவர் நிற்கக் களியொடு எழுந்தாட
(2)
சித்துப்புரி பட்டப் பெரியவர் சித்துக் குபுசித்துக் குள்புகு
நித்ரப் பிரிவுற்று த்ரிகரண சுயமோத
(2)
(Music)
நெற்றிப்பிறை இட்டத் துளமிசை பித்துப்புகு பித்துப் புகுலகு
தித்திப்புடன் செய்யும் பொடியென அதுஊழை
(2)
கால்சற்றெழ கண்ணுற்றுலவிட பக்திக் கனியிட்டிவ் வுலகினில்
சத்துப்பட வந்துப் பிறவளர் பெருமானே
(2)
-------------------------
(1)
சத்தையே என்றும் தரும் பர்த்தித் திருமகன்
புத்திக்கு நல்லுணவாகக் கூடிய த்யானத்தில் சித்திக்கும் சுடர்போல
அன்பின் வடிவாக உலகில் வந்து இறங்கும் அக்கணநேரமே போதுமானது (எதற்கு?)
(2)
மனிதப் பிறவிகளுக்கு பிறப்பு இறப்பின் பாற்ப்பட்ட வினை விளைவுகளை நிறுத்தி அவர்களை தன் அருளால் விரைவாக சுவர்க்கத்தில் அமரச் செய்தலை புவிகாண
(3)
சற்றைக்கொரு தரம் பித்தத்தைத் (கலக்கத்தை) தரும் வண்ணமாக, சதா சர்வ காலமும் வட்டச் சுழலாகச் செயல்படும் பற்றுதல் / ஆசை எனும் பற்றும் தளை துண்டித்து எகிறிட , அகன்றிட
(4)
இத்தகு கருணைமிகு ஸ்வாமி சாயிபிரான் , சித்தர்கள் புரியும் விரதம் (ராஜ யோகத்தை ) அடவியில் முனிவர்கள் புரியும் தியானம் (உச்சிச்செயல்= உச்சியில் சுடர் வரச் செய்யும் செயல்) ஆகியவற்றையும் மிஞ்சத்தகுந்த திறனை வழங்கும் அருளினை தன்னிச்சையாகத் தந்து ரட்சித்தருளும் பொற்காலம் நாளை வரும்.(ப்ரேமசாயி அவதாரம்)
(5)
மனம்நைந்து துயரடைந்த திக்கற்றவர்களுக்கு ஊன்றுகோலாக உதவிக்கரம் நீட்டி, தித்தித்ததான அன்பமுதினை சித்தத்தில் பரிவுடன் சாயிபிரான் தந்ததால், அவர்கள் எழுந்து நிற்க மகிழ்ந்து ஆட
(6)
சித்தியடைவதற்காக மட்டும் உயிர் வாழும் வண்ணம் (காற்றை மட்டுமே ) புசித்து சாதனைக்குள் புகுந்து, அட்டமாசித்தி வசப்பட்ட (புரிபட்ட) உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் , சாயீசனின் அருளால் விழிப்பு பெற்று ( நித்ரப்பிரிவுற்று-அறியாமையாகிய தூக்க நிலை விடுத்து விழிப்புற்று) த்ரிகரணமும் சுயமோத ( சுயம் = தன்னியல்பு நிலை/ஆன்ம ஸ்வரூப /ஓம்கார ஸ்வரூபமாக)
(7)
நெற்றிப் பிறை இட்டு , உணர்வின் உணர்வாய், *உணர்வுகளுக்கெல்லாம் மேலே எல்லையான தன்னுணர்வாய் விளங்கும்படியான உள்ளத்தில் பித்து (அன்பு) புகுந்த பித்தனாம் சிவ பெருமானின் அவதாரமான சாயீசன் புகுந்த உலகானது தித்திப்பதோடல்லாமல் , அவனருளானது உலக உயிர்களின் ஊழ்வினையைப் பொடிப்பொடியாக்கும்
(*அத்துளம் = அத்து((எல்லை)+உளம் )
(8)
குன்றாது வளர் சாயி பெருமானே நீ,
மெதுவாக (ம்ருதுவாக) நடை போட்டு, அமர்ந்திருக்கும் பக்தர்களை கண்ணுற்று அருள்கூற (தரிசனம் தர), அவர்கள் நெஞ்சில் பக்திஎனும் கனியினை ஊட்ட , இந்த உலகினில் சத்யம் நிலைக்க , திரும்பவும் வந்து பிறக்க வேண்டும்
புட்டபர்த்தி நிவாசா நமோ நம .. கேட்ட வரம் தரும் ஈசா நமோ நம
மாய மானுஷ வேஷா நமோ நம.. அருள் செய் சாயீசா..!
விண்ணைப் படைக்கின்ற மெய்யான சிறப்பு நீ ..மண்ணில் வருகின்ற தெய்வத்தின் பிறப்பு நீ
கண்ணில் காணாது சென்றாலும் என்றும் நீ… நெஞ்சில் உறைவாயே ..!
வேத மந்திரம் இசையோடு ஓதலால் .. காதில் தேன்வந்து பாய்கின்ற தாதலால்
ஈர நெஞ்சாலே நாம் கொண்ட காதலால் .. காட்சியும் கொடுப்பாயே ..!
வேத மந்திரம் ஓதாத போதிலும் .. போதன் உன்பதம் நினையாத நாளிலும்
பேதம் மனதினில் இல்லாத சேவையால் .. மகிழ்ந்தே அருள்வோனே ..!
மனதின் நோய்களைத் தீர்க்கின்ற தெய்வம்நீ..உடலின் நோய் தீர்த்து அணைக்கின்ற தாயும் நீ
எனது நான் என்ற எண்ணத்தைப் போக்கு நீ .. உன்னில் சேர்ப்பாயே ..!
உயிரின் பசிபோக்கும் அன்னத்தின் பூரணி .. அறிவின் பசிபோக்கும் சரஸ்வதி தேவி நீ
விரைவில் கிடைக்காத வானத்தின் சோதி நீ.. எம்முள் இரு தாயே ..!
பார்புகழ் பாரதம் தோன்றிடும் தெய்வம் நீ.. ஓர் இணை இல்லாத திறத்திலே மன்னன் நீ
பாரினில் நீர் தந்து காத்திடும் மேகம் நீ .. தாகம் தீர்த்தாயே ..!
அண்டம் படைத்திங்கு எல்லாமு மானவன் அணுவின் உள்ளேயும் அணுவேநீ ஆனவன்
தொண்டரின் உள்ளத்தில் உறைகின்ற ஆண்டவன் .. எம்மைக் காப்பாயே ..!
தோன்றி வளர்கின்ற சுயமான சோதி நீ .. என்றும் உறைகின்ற விதமான ஆதி நீ
மண்ணில் பிறக்கின்ற யாவிலும் உயிரும் நீ .. உயிரின் உயிர் நீயே ..!
போற்றி போற்றி நின் பாதங்கள் போற்றியே .. வெற்றி வெற்றி எம் நெஞ்சில் நீ நின்றிட
சாற்றி சாற்றிப் பறை செய்வோம் நாங்களே .. அருள் செய் சாயீசா..!