- தவளை கத்தினால் தானே மழை
- அந்தி ஈசல் பு+த்தால் அடை மழைக்கு அச்சாராம்
- தும்பி பறந்தால் தூரத்தில் மழை
- எறும்பு ஏறில் பெரும் புயல்
- மார்கழி மழை மண்ணுக்கு உதவாது
- தை மழை நெய் மழைமாசிப்பனி மச்சையும் துளைக்கும்
- தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு
- புத்துகண்டு கிணறு வெட்டு
- வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர்செய்
- காணி தேடினும் கரிசல்மண் தேடு
- களர் கெட பிரண்டையைப் புதை
- கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி கெட்டகுடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு
- நன்னிலம் கொழுஞ்சி நடுநிலம் கரந்தை கடைநிலம் எருக்கு
- நீரும் நிலமும் இருந்தாலும் பருவம் பார்த்து பயிர் செய்
- ஆடிப்பட்டம் பயிர் செய்
- விண் பொய்த்தால் மண் பொய்க்கும்
- மழையடி புஞ்சை மதகடி நஞ்சை
- களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை
- உழவில்லாத நிலமும் மிளகில்லாத கறியும் வழ வழ
- அகல உழவதைவிட ஆழ உழுவது மேல்
- புஞ்சைக்கு நாலுஉழவு நஞ்சைக்கு ஏழு உழவு
- குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை
- ஆடுபயிர் காட்டும் ஆவாரை கதிர் கட்டும்
- கூளம் பரப்பி கோமியம் சேர்
- ஆற்று வண்டல் தேற்றும் பயிரை
- நிலத்தில் எழுத்த பு+ண்டு நிலத்தில் மடிய வேண்டும்
- காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்
- தேங்கி கெட்டது நிலம் தேங்காமல் கெட்டது குளம்
- கோரையை கொல்ல கொள்ளுப்பயிர் விதை
- சொத்தைப்போல் விதையை பேனவேண்டும்
- விதை பாதி வேலை பாதி
- காய்த்த வித்திற்கு பழுதில்லை
- பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு
- கோப்பு தப்பினால் குப்பையும் பயிராகாது
- ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்
- கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும் அடர விதைத்தால் போர் உயரும்