Year of Birth : 1 June 1947 - Singapore
Bachelor of Arts (Honors), Indian Studies, University of Malaya (1971)
Master of Social Science (Sociology), University of Singapore (1977)
Ph.D. (Sociology), University of Wisconsin-Madison (1980)
Apr.1971-May.1973 Producer, Radio & Television Singapore
Jul.1975-Jun.1977 Tutor, Department of Sociology, University of Singapore, Singapore
Jan.1981-Jun.1984 Research Fellow, Institute of Southeast Asian Studies-Singapore, Singapore
Jan.1981-Jun.1984 Adjunct-Lecturer, Department of Sociology, National University of Singapore, Singapore
Jul.1984-Jun.1986 Full-time Lecturer, Department of Sociology, National University of Singapore, Singapore
Jul.1986-Jun.1990 Senior Lecturer, Department of Sociology, National University of Singapore
Jul.1990-Jun.1996 Director of Masters Degree Programme in Public Policy, University of Brunei
Darussalam, Brunei
Jul.1993-Feb.2000 Senior Lecturer/ Associate Professor, Department of Sociology Singapore
National University of Singapore, Singapore
Oct.1994-Mar.2000 Coordinator and Part-Time Lecturer for Bachelor of Science (Management), University of London Distance Degree program at the Singapore Institute of Management, Singapore
Since Apr.2000 Professor, Ritsumeikan Asia Pacific University, Director of Research, Dean of Faculty, Vice President.
Apr.2006-Aug.2007 Visiting Senior Fellow, Institute of Southeast Asian Studies, Singapore
Since Sep. 2007 Associate Senior Fellow (Honorary), Institute of Southeast Asian Studies,
Singapore
Fulbright-Hays Visiting Scholar Award - Cornell University, California - 1986
Fulbright-Hays Award - University of Wisconsin-Madison - 1977
Ford Foundation's Southeast Asian Research Fellowship Award Overseas - 1975
டாக்டர் அ. வீரமணியை அறியாதவர்கள் அரிது. சிங்கப்பூர் தமிழ் சமுதாய வளர்ச்சி, தமிழ்மொழி, இளையர் வளர்ச்சி, பெண்களின் முன்னேற்றம் என பல துறைகளில் சேவையாற்றி அளப்பறியா மாற்றங்களையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்திய தனி மனிதர் இவர். பல்லாயிரம் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் சமூகவியல் கற்றுத் தந்த போதும் அவரது எண்ணங்களும், பணியும், சிங்கப்பூர்த் தமிழ் சமுதாய முன்னேற்றத்தை நோக்கியேச் சென்றது
அவர் முதுகலை மாணவராக சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது, இன்றும் பலரால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசியப் பல்கலைக்கழக தமிழ் பேரவையைத் தோற்றுவித்தார். அதன்பின் முதல் ஆய்வரங்கத்தையும் 1977, 1979, 1981 முதலான ஆண்டுகளில் பல்கலைக்கழக இளங்கலைப் பட்ட மாணவர்களை முன் வைத்து நடத்தினார். அவற்றால், சிங்கப்பூரின் தமிழ் நிலையை அரசியல் நிலையில் மேம்படுத்தினார். 20-ஆம் நூற்றாண்டு சிங்கப்பூர்த் தமிழர் வரலாற்றை நிலை நிறுத்தும் ஆய்வு நூல்களாக அந்த மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்புகள் இன்று பயன்படுகின்றன.
1980களில் தமிழர் பேரவை எனும் அமைப்பில் இளையர் மன்றத்தைச் தோற்றுவித்து ஆயிரக்கணக்கான இளையர்களைக் கொண்டு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவரது சமூக சோதனைத் திட்டங்கள் மூலமாக இளையரைக் கொண்டு இளையர்களுக்கு பல்வேறு துறைகளிலும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வழிநடத்தினார். இளையர்களின் ஆர்வத்தையும் திறன்களையும் வளர்த்தார். பல இளையர்களின் கல்விக்கு பெரும் பங்கு ஆற்றினார். சிங்கப்பூர் தமிழ் பேரவை கல்விக் குழுவை அமைத்து, அதன்வழி பல இளையரைக் கொண்டு தீவு முழுவதும் கல்வி துணைபாட வகுப்புகளை நடத்தி, 24,000 பள்ளி தமிழ் மாணவர்கள் தேர்வுகளில் தேர்ச்சி பெற உதவினார். அவரது இளையர் இயக்கத்தில் செயல்பட்ட இளையர் இன்று சிறந்த வாழ்வையும், பல அமைப்புக்களின் தலைவர்களாகவும் வாழ்கின்றனர்.
பல இளையர்களின் ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாக இருந்ததோடு அவர்களின் ஆய்வுப் படைப்புகளையும் நூல் வடிவில் வெளியிட்டார். இம்முயற்சியால், பல இளையரும் பெரியவர்களும் தமிழர் சமுதாயம் தொடர்பிலான ஆய்வுக்கட்டுரைகளைப் படைத்தனர்.
பல கல்வியாளர்களின் ஆய்வுகளுக்கு வழிகாட்டியாக இருந்ததோடு, அவர்களின் படைப்புக்களையும் சீர்தூக்கி முன்னுரைக்கும் கல்விமானாகவும் பணியாற்றினார். அவர் எழுதிய புத்தகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், முன்னுரைகள் என பல எழுத்து வடிவங்கள், தமிழ் மொழிக்கு டாக்டர் அ. வீரமணி ஆற்றிய பங்கை விவரிக்கும். ஆங்கிலத்திலும் உலக ஆய்வாளர்கள் போற்றும் வகையில், தென்கிழக்காசிய இந்தியர்களைப் பற்றிய ஆங்கில நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் பிரசுரித்து உள்ளார்.
சிங்கப்பூரில் மட்டும் அல்லாது, கிழக்கு ஆசியா, தென் கிழக்காசிய நாடுகளிலும் வாழும் தமிழர்கள் பற்றியும் ஆராய்ந்து அவர்களின் வரலாற்றையும், கலாச்சார முன்னேற்றங்களையும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். வட சுமத்திராவில் தமிழர்கள் என தொடங்கி, ஜாக்கார்த்தா, தாய்லாந்து புருணை, இந்தோனீசியா, மியன்மார் போன்ற நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழர்களையும், அவர்கள் கடைபிடிக்கும் கலாச்சார பண்பாடுகள், கட்டிய கோவில்கள், வெற்றிகரமாக நடத்தி வரும் வணிகம் என அனைத்தையும் ஆராய்ந்து கட்டுரைகளாகவும் ஆய்வுப் புத்தகங்களாகவும் வெளியிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெறும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகளில், நூல் குறித்து மதிப்பீடு, கருத்துகள், சிறப்பு உரைகள் என பல வழிகளிலும் இவர் பங்காற்றியுள்ளார். ஜப்பான், புருணை போன்ற நாடுகளில் பேராசிரியராக பணியாற்றி வந்தபோதும் சமூக நிகழ்ச்சிகளுக்கு இவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். இருபது ஆண்டுகளுக்கு மேல் வெளிநாடுகளில் பணிபுரிந்த போதும், சிங்கப்பூரில் இவரது தமிழ்மொழி- தமிழர் நலச்சேவை இன்று வரை தொடர்கிறது.
அண்மையில், சிங்கப்பூர் இந்திய மரபுடைமை சங்கம் வெளியிட்ட Singapore Indian Heritage நூலையும் இவர் எழுதியுள்ளார்.
அன்றைய வானொலி படைப்பாளராகத் தொடங்கி, தமிழ் முரசு நாளிதழ் ஆசிரியர், சிங்கப்பூர் பல்கலைக்கழக விரிவுரையாளர், தமிழர் பேரவை இளையர் மன்றம், சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் என இவரதுபணி இன்றும் தொடர்கிறது. அதனுடன் சிங்கப்பூரில் தமிழ்-தமிழர் வரலாற்றைப் பற்றிய புதிய ஆய்வு நூற்களையும் தொடர்ந்து எழுதி வெளியிட்டு வருகிறார்.