மனிதன் பேசத் தொடங்குவதற்கு முன் தன் எண்ணங்களைச் சைகைகளாலும்,உணர்ச்சிகளை ஓசைகளாலும் வெளிப்படுத்தினான். தன் உணர்ச்சிகளை ஓசைகளின் வழிஉணர்த்தியபோது சொற்கள் பிறந்தன. இச்சொற்கள் காலப்போக்கில் பேச்சுமொழியாகமலர்ந்தன. இப்பேச்சு மொழியில் சொற்களும் ஓசைகளும் கலந்து வந்தபோது பாடல்களாகஎழுந்தன. இலக்கணம் தோன்றுவதற்கு முன் சொற்கள் ஒழுங்குடன் இசையுடன் இணைந்துஅமைந்ததே நாட்டுப்புறப் பாடல்கள் எனலாம். இலக்கணம் என்னும் சிறைக்குள் சிக்காதுகட்டடற்ற காட்டாறாய் பெருகி வருவது சமுதாயத்தின் உயிர்த்துடிப்பு, உண்மையின்பிரதிபலிப்பு, உணர்ச்சி உந்தலின் அப்பட்ட வெளியீடு என்று நாட்டுப்புற பாடல்களின்பெருமையினைத் தமிழ்த்தந்தை ச.வே. சுப்ரமணியனார் குறிப்பிடுவர்.
மனித நாகரிகம் தொன்மைக்காலத்தில் ஆற்றங்கரைகளிலே தொடக்கம் பெற்றதாகவரலாற்று வல்லுநர்கள் வகுத்துரைக்கின்றனர். தனிமனிதன் பிறரோடு வாழத்தொடங்கியகாலமே சமுதாயம் உருவான காலமாகும். தனக்கு என்ற மனப்பான்மை விலகி நமக்குஎன்ற உணர்வோடு, ஒற்றமையோடு வாழ்வின் வளத்திற்கு உழைக்க முற்பட்டான்.இவ்வாழ்வின் உன்னதநிலையே வேளாண்மைத் தொழிலாக உருப்பெற்றது. தொன்மைமிகுந்த தொழிலாகக் கருதப்பெறும் வேளாண்மைத் தொழில் குறித்த செய்திகளஇலக்கியங்களில் சிறப்பாகக் காணப்படுகின்றன.
குறிப்பாகப் புறநானூற்றுப் பாடலில்,
“பொருடை தரூஉம் கொற்றமும் உழுபடை
ஊன்று சால் மருங்கின் ஈன்ற தன் பயனே” (புறம்:35; 25-26)
-எனப் பகைவர்களைப் போர்களத்தில் வென்று சிறப்பிப்பதற்கும் உழுதொழிலேஅடிப்படைக் காரணமாக இருந்துள்ளது என்பது புலனாகின்றது. அது மட்டுமல்லாமல்உழவர்கள் உலக மக்களின் வாழ்வு வண்டிக்கு ஆணியாகக் கருதப்பட்டமையை நம்வள்ளுவப் பெருந்தகை ”உழவு” என்ற அதிகாரத்தின் கீழ் பட்டியலிட்டுக் காட்டுகின்றார்.
உழுதொழிலின்போது ஏற்படும் களைப்பைப் போக்கப் பாட்டுப் பாடியுள்ளனர். ஏரைப் பூட்டிநின்றோர் பாடிய ”முகவைப் பாட்டு” நெல்ல முகந்து அளந்து கொடுக்கும்போது பாடிய”பொலிப்பாட்டு” குறித்த குறிப்புகள் இலக்கியங்களில் காணப்படுகின்றன.
வேளாண்மைப் பாடல்கள் வழி காணப்பெறும் சிறப்புப் பண்பாட்டுக் கூறுகளை மூன்றுநிலையில் முறைப்படுத்திக் காணலாம். அதாவது, (1) உழும் முன் (2) உழும் போது (3) உழவுநிறைவுற்றபின். பழங்காலத்தில் நாட்டுப்புற மக்கள் ஒவ்வொரு நிலையிலும் பாடல் பாடினர். ”வேளாண்மையைப் பாடல்களின் நீட்டம் உழவன் ஏரில் காளைகளைப் பூட்டியதிலிருந்துதொடங்கி விதை விதைத்து அதனை அறுவடை செய்து, கதிரடித்துக் குவித்துக் குதிரில்போடுகின்றவரை நீடித்துச் செல்லும்” என்று கூறுகின்ற