VENKATESA NINNU-MADHYAMAVATHI
THYAGARAJA KRUTHI
THYAGARAJA KRUTHI
வேங்கடேசா! உன்னை சேவிக்க
பதினாயிரம் கண்கள் வேணுமய்யா
பங்கயற் கண்ணா! முனிவர்களைப் பேணுவோனே!
மங்களமான, தெய்வீக உருவமேற்றுக்கொண்ட
வேங்கடேசா! உன்னை சேவிக்க
பதினாயிரம் கண்கள் வேணுமய்யா
1. மேலோன் நீயென நாற்றிசையும் புகழ,
அக்கறை கொண்டு, மனது சொக்கி, கண்டுகொள்ள
உண்மை நீயே; விரைவினில் காப்பாய்,
தளுக்கென மின்னும் களையுடை
வேங்கடேசா! உன்னை சேவிக்க
பதினாயிரம் கண்கள் வேணுமய்யா
2. எந்த நோன்பின் பயனோ, உனது நாம அமிழ்து
பருகலெனும் ஏணி கிடைத்தது;
திருமகள் நாயகா! பரமானந்தமே! உனக்கீடு
காணோம், மங்கலமான திருவடிகளையுடை
வேங்கடேசா! உன்னை சேவிக்க
பதினாயிரம் கண்கள் வேணுமய்யா
3. யோகியர் இதயத்துறையே! நீயே கதியெனும் மக்களுக்கு
உகந்தவையருளும் உயர் அரவரசன் மேற்றுயில்வோனே!
பாகவதர்களுக்கினியோனே! தியாகராசனால் போற்றப்
பெற்றோனே! சேடாத்திரி மீது நன்கு நிலைபெற்ற
வேங்கடேசா! உன்னை சேவிக்க
பதினாயிரம் கண்கள் வேணுமய்யா!
TRANSLATION BY SRI.V.GOVINDAN
MP3 CONTRIBUTED BY SRI.LAKSHMAN