Quran Class for Youth
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு...
குர்ஆனை சரியான مخرج உச்சரிப்புடனும், تجويد தஜ்வீத் - ஓதுதல் சட்டத்துடன் முறையாக ஓத விரும்பும் சகோதரர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு...
இன் ஷா அல்லாஹ் தினமும் ஃபஜ்ர் மற்றும் இஷா தொழுகைக்குப் பிறகு திருச்சி - கன்டோன்மென்ட் அஹ்லே ஹதீஸ் பள்ளிவாசலில் பள்ளியின் இமாம் ஹிஷாம் உமரி அவர்கள், பெரிய & வாலிப சகோதரர்களுக்கு தஜ்வீத் முறைப்படி குர்ஆன் ஓதுவதற்கு கற்றுக்கொடுக்க உள்ளார்கள்.
வேலை செல்லும் கல்லூரி பயிலும் வாலிபர்கள், பெரியவர்கள் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு முறையாக குர்ஆன் ஓத கற்று நன்மையை அதிகரித்து கொள்ள முயற்சிக்கவும்.
وَأَن لَّیۡسَ لِلۡإِنسَـٰنِ إِلَّا مَا سَعَىٰ
மேலும் நிச்சயமாக மனிதனுக்கு அவன் முயற்சித்து செய்த செயலைத் தவிர (மறுமையில்) வேறொன்றும் (கூலியாக) கிடைக்காது.
அல்குர்ஆன் - 53:39