கிருபாலாயம் மூலம் செய்யப்பட்ட பணிகள்
நமது வார்த்தைகள் மூலம் பிறரின் வாழ்வை கட்டக் கூடிய ஆற்றலை கடவுள் நமக்கு தந்திருக்கிறார்.
1) எங்களின் கவுன்சிலிங் மூலம் அநேக பிரிந்த கணவன்-மனைவியர் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
2) விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர் கவுன்சிலிங் மூலம் மனவலிமை பெற்றுள்ளனர் (gain courage due to our counselling )
3) விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோருக்கான பிற உதவிகள்
விதவை உதவித் தொகை, முதியோர் உதவித் தொகையினை எங்கள் மூலம் பெற்றவர்கள் எண்ணற்றவர்கள் ஆவர்.
4) அரசு சலுகைகள் மூலம் இவர்களுக்கு விதவை உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை போன்றவை எங்கள் மூலம் கிடைக்கப் பெற்றவர்கள் அநேகர் ஆவர்.
5) இலவச தையல் இயந்திரம் அரசு மூலம் பெற உதவி செய்துள்ளோம்
6) மானியம் மூலம் கிடைக்கும் வங்கி கடனுதவி பெற உதவி செய்துள்ளோம். இதன் மூலம் பலர் கடனுதவி பெற்று சிறு தொழில் செய்து, தங்கள் பொருளாதார நிலையினை உயர்த்தி உள்ளார்கள்.
7) ஆதரவற்றோர், விதவைகளின் பிள்ளைகளை இலவச விடுதியில் சேர்த்து கல்வி பயில எண்ணற்றோருக்கு உதவி செய்திருக்கிறோம். இன்று அந்த பிள்ளைகள், ஆசிரியராக, செவிலியராக நல்ல நிலையில ;உள்ளனர்.
8) ஏழைகள், ஆதரவற்றோர், 8 வரை (அல்லது) 10 வது வகுப்பு வரை பயின்றோர், தனியார் மருத்துவமனை பணிகளுக்கு எங்களின் வழி காட்டுதல் மூலம் பணியில் சேர்ந்து பயன் பெற்றுள்ளனர்.
9) ஆதரவற்ற பெண்களை ஆதரவற்றோருக்கான மறுவாழ்வு இல்லங்களில் சேர்த்;துவிட்டு பயன்பெற உதவியுள்ளோம்.
10) ஆதரவற்றோர் விதவை மகள் திருமண நிதி உதவி பலருக்கு கிடைக்க வழி காட்டி உதவி செய்திருக்கிறோம்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள்
மாற்றுத்திறனாளிகள் பலர் மாற்றுத் திறனாளிகளுக்கான அலுவலகம் மூலம் உதவித் தொகை பெற வழி வகை செய்துள்ளோம். மேலும் அவர்கள் மூன்று சக்கர வாகனம், சிறு தொழிலுள்ள மானியத்துடன் உள்ள வங்கி கடனுதவில் பெற வழி செய்துள்ளோம். மாற்றுத் திறனாளி மாணவர்கள் எண்ணற்றோருக்கு இலவச மானியம் பெற உதவியுள்ளோம்.
அரசு சேவை இல்லம் மூலம் உதவிகள்
8 வது வரையில் படித்த ஏழைகள், ஆதரவற்றோர், விதவைகள் 10வது பயிலவும், மற்றும், 10வது பயின்றோர், 11வது மற்றும் 12 வது வகுப்பு பயிலவும் அரசு சேவை இல்லத்தில் சேர்த்து கல்வி பயில பலருக்கு வழிகாட்டி உதவியுள்ளோம் அதில் பல இன்று அரசு பணியில் உள்ளனர்.
ஜீவானம்சம் பெற உதவிகள்
கணவரால் கைவிடப்பட்ட எண்ணற்ற பெண்கள் இலவச சட்ட உதவி வாயிலாக மூலம் ஜீவனாம்சம் பெற்றுள்ளனர்.
மாணவர்களுக்கான உதவிகள்
மிக நன்றாக பயிலும் மாணவர்களை இன்னும் கூடுதல் ஊக்கத்துடன் பயில உதவி செய்துள்ளோம். கல்வியில் பின் தங்கிய மாணவ மாணவிகளுக்கு கற்றலின் மேம்பாடு ஏற்பட கவுன்சிலிங் மூலம் உதவி செய்து அவர்கள் கற்றல் திறனில் மேம்படுத்தப்பட்டுள்ளனர்.
நெறி பிறழ் மாணவர்கள்
நெறி பிறழ் மாணவர்கள் கவுன்சிலிங் மூம் எண்ணற்றோர் நல்வழிப் படுத்தப்பட்டுள்ளனர். எதிர்பாலர் பிரச்சினையிலுள்ள மாணவ, மாணவிகள் பலர் கவுன்சிலிங் மூலம் நற்பண்புகளை பெற்று குணநலன்களில் மாற்றம் பெற்றுள்ளனர்.
தற்கொலை எண்ணமுள்ளோருக்கு கவுன்சிலிங்
ஆதரவற்ற நிலையிலுள்ள பலர் தற்கொலை எண்ணத்துடன் எங்களைஅணுகிய போது எங்களின் கவுன்சிலிங் மற்றும் சில உதவிகள் மூலம் தற்கொலை எண்ணம் மாற்றப்பட்டு, தங்களிடம் உள்ள திறன்களை மேம்படுத்தி வாழ்வின் முன்னேறி உள்ளனர்.
தற்கொலைக்கு நேராக சென்ற மாணவ மாணவியர் பலர் கவுன்சிலிங் மூலம் நல்;வழிப்படுத்தப்பட்டுள்ளனர். பிரச்சினைகளோடு எங்களிடம் வந்த யாவரும், மன ஆறுதலும், தைரியமும் பெற்றுச் சென்றுள்ளனர்.
நமது வார்த்தை மூலம் பிறரின் வாழ்வை மலரச் செய்யும் ஆற்றலை நமக்கு கர்த்தர் தந்துள்ளார்.
ஏழைகளுக்கு, ஆதரவற்றோருக்கு செய்யும் எல்லா தர்ம காரியங்களையும் கர்த்தர் கணக்கில் வைத்து நமது தலைமுறைகளுக்கு இரக்கம் செய்கிறார்.
இந்த சிறியரின் ஒருவருக்கு எதை செய்தீர்களோ? அதை எனக்கே செய்தீர்கள் என்ற கர்த்தர் சொல்கிறார்.
கிருபாலயம் (Digital Presence)
இயேசு கிறிஸ்துவின் அன்பினையும்; இயேசு கிறிஸ்துவின் மூலம் கிடைக்கும் பாவ மன்னிப்பின் சுவிஷேசத்தையும் கிருபாலயம் (Digital Presence) Youtube, Spotify (Anchor,Google Podcast, amazon Music), Instagram, FB, Twitter Etc மூலம் அறிவித்து வருகிறோம்.