பாடசாலைகளைத் தொடர்ந்து நடாத்த முடியாத நிலைமைகள் காணப்படும் சந்தர்ப்பங்களில், மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளில் பாரிய தாக்கம் ஏற்படுவது அனைவரதும் அவதானத்திற்குட்படுகின்ற ஒரு விடயமாகும். இருப்பினும் மத்திய கல்வி அமைச்சு, மாகாணக்கல்வித் திணைக்களம் மற்றும் வலயக்கல்வி அலுவலகம் என்பன மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளன. இந்நேரத்தில் மாணவர்களின் நேரத்தை பயனுள்ளதாகவும் எதிர்காலத்தில் பொதுப் பரீட்சைகளை எதிர்கொள்ளக்கூடியதாகவும் இணைய வளங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த வழிப்படுத்துவது எமது அனைவரினதும் பொறுப்பாகும்.