One of the famous novel in Pocket Fm... with 12 Million + plays .... A story with love, action, comedy, mystery
ஒருவரை இறுதிவரை வரும் உறவென்று நாம் நினைக்கும்போது அவர்களுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டோம். அப்படித்தான் இந்த கதையின் நாயகி நட்டாஷா தன்னுடைய தம்பியின் உயிரை காப்பாற்ற தேவையான பணத்துக்காக முன்பின் தெரியாத ஒருவரை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறாள். திருமணத்துக்கு பிறகு ஒரு வருடத்தில் குழந்தை பெற்று கொடுக்க வேண்டும், அதே நேரம் என்ன ஆனாலும் நாயகன் முகத்தை பார்க்க கூடாது போன்ற வித்தியாசமான நிபந்தனைகளுடன்தான் அவள் திருமணம் முடிந்தது. திருமணத்தன்று கூட அவள் தன்னுடைய கணவனை பார்க்கவில்லை ஒரு கையெழுத்தில்தான் அவள் கல்யாணமே நடந்தது. திருமணம் முடிந்து அவள் தன்னுடைய கணவன் வீட்டுக்கு சென்ற பிறகுதான் தன்னுடைய கணவனை காணும் வாய்ப்பு நட்டாஷாக்கு கிடைக்கிறது. ஆனால் அவளால் கணவன் முகத்தை பார்க்க முடியவில்லை.ஏனென் றால் அவன் முகமூடி அணிந்திருந்தான்.அதை பார்த்து அதிர்ந்தாள் நட்டாஷா. முகமே தெரியாமல் திருமணம் முடிந்த இவர்களுக்குள் காதல் மலருமா?. குழந்தைக்காகதான் இந்த உறவு என்றால் குழந்தை பிறந்த பிறகு இவர்கள் உறவு என்ன ஆகும்? என்பதை பல திருப்பதுடனும் கேள்வியுடனும் காதலுடனும் சொல்வதுதான் இந்த கதை சிகப்பு ரோஜா.
www.pocketnovel.com/novel/78b2b524ea7d3ff8bc5b12924ce37021b898ef19
பெண்களையே பிடிக்காத ஒருவன் தான் இந்தக் கதையின் கதாநாயகன் ஆதித்யா… ஆதித்யா குரூப் ஆப் கம்பெனியின் வாரிசு… அவனுக்கு உலகமே அவன் சகோதரி ஷாலினி தான். ஆனால் தன் அண்ணனை வெறுக்கும் ஷாலினி. இவர்கள் இருவரின் வாழ்க்கையி்ல் சிறுவயதிலேயே இருந்து நண்பர்களாக இருக்கும் அம்முவும் கார்த்திக்கும் வந்தார்கள்… இந்தக் கதையில் இவர்கள் நால்வருடன் சேர்ந்து ஒரு நாயும் பயணிக்கப் போகிறது... அந்த நாய் செய்யும் லூட்டி தான் இந்தக் கதையின் க்யூட்டான பாகம் கூட... இது ஒரு முக்கோண காதல் கதை... இதில் வெல்லப்போவது நட்பா... இல்லை காதலா... என்பதுதான் கதை.... கார்த்திக்குக்கு உறவாய் கிடைத்த அம்மு, ஆதிக்கு உயிராக மாறினாள். எனவே இந்தக் கதையின் பெயர் - உறவே உயிரே… தினமும் ஒரு எபிசோட் உங்களுக்காக...
இது ஒரு முக்கோண காதல் கதை. இந்தக்கதையில் காதல், கல்லூரி நாட்களிலேயே ஆரம்பித்துவிட்டது. ரிஷப், மீராவை காலேஜிலிருந்து காதலிக்கிறான். ஆனால் காலேஜ் வாழ்க்கை முடிந்தபிறகு மீராவின் வாழ்க்கையில் புதிதாக ஒரு ஹீரோ வராரு, பேரு அபி. அபியும் மீராவும் பார்க்கும்போதெல்லாம் சண்டையாகவே இருக்கும். ஆனால் நாட்கள் போகப்போக அந்தச் சண்டை அபி மனத்தில் காதலாக மாறியது. மீராவுடைய சகோதரி சமீரா. ரிஷப், அபி இவிங்க இருவரும் மீராவை காதலிக்க. சமீரா அபியை காதலித்தாள். இறுதியில் யாருடைய காதல் எப்படி கைக்கூடும் என்பதே கதை. ரிஷப் உடைய காதல் ஒரு அன்பால் உன்னத புரிதலால் ஆரம்பித்த ஒரு அழகான காதல். அபி உடைய காதல் எலியையும் பூனையையும் போல் சண்டையில் ஆரம்பித்தது.யாருக்கு இந்தக் காதல் கனி; யாருக்கு அந்தக் காதல் வலி; என்பதை கதையில் பார்க்கலாம். இதுவே "சொல்ல துடிக்கும் மனசு". இது ஒரு சிறு கதை அல்ல, இது ஒரு நெடுந்தொடர்... தொடர்ந்து படியுங்கள்.. சொல்ல துடிக்கும் மனசு.. ஞாயிறு முதல் சனி வரை. தினமும் மாலை 9 மணிக்கு...