பாண்டிச்சேரியில் சுற்றிப்பார்க்கவும் நிறைய இடங்கள் இருக்கு!
தமிழகத்தில் உள்ள மக்கள் சுற்றுலா செல்ல முக்கியமான இடமாக பாண்டிச்சேரி இருக்கிறது. கடற்கரை நகரமாக உள்ள இந்த நகரத்திற்கு ECR சாலை வழியாக செல்லலாம். தற்போது பைக் ட்ரிப் செல்வது பிரபலமாக இருக்கும் நேரத்தில் பாண்டிச்சேரிக்கு பைக்கில் சுலபமாக செல்லமுடியும். அங்கு சுற்றி பார்க்கவும் நிறைய இடங்கள் இருப்பதால் நிச்சயம் பைக் நமக்கு பெரும் உதவியாக இருக்கும்.
நாம் பாண்டிச்சேரியை முழுவதும் சுற்றி பார்க்க 2 நாட்கள் இருந்தால் போதும். இந்த நகரம் ஒரு காலத்தில் பிரெஞ்சு அரசாங்கத்தின் வெளிநாட்டு தலைநகராக இருந்தது. இதனால் பல கலாச்சார, ஆன்மீக சுற்றுலா கலந்த இடமாக இந்த இடம் உள்ளது. பாண்டிச்சேரி செல்ல நாம் ரயில், கார், பேருந்து, பைக் என இதில் வேண்டுமானாலும் செல்லலாம்.
இது பைக் ட்ரிப் குறித்த பதிவு என்பதால் நாம் பைக்கை பற்றி மட்டுமே பேசலாம். நீங்கள் சென்னையில் இருந்து அல்லது தென் தமிழகம் பகுதிகளில் இருந்து செல்வதாக இருந்தால் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை சாலைகளை பயன்படுத்தலாம். வேறு எங்கு இருந்து வருவது என்றால் Google Map உங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த கடற்கரை பிரெஞ்சு காலத்தில் ‘Plage Paradiso’ என்று அழைக்கப்பட்டது. இது சுண்ணாம்பார் இடத்தில் அமைந்துள்ள மிக பிரபலமான இடங்களில் ஒன்றாகும். இங்கு வருகை தருபவர்களுக்கு அமைதியை தருவதால் Paradise என்ற பெயர் இதற்கு கிடைத்தது.
எப்படி செல்வது?
ஆனால் இங்கு நாம் பைக் மூலம் செல்லமுடியாது. இதற்காக தனியாக படகு மூலம் இந்த தனிமையான இடத்தை அடையலாம். இந்த இடத்திற்கு செல்லும் வழியே ஒரு அட்வென்ச்சர் பயணமாக பலருக்கு இருக்கும். வழி நெடுகிலும் ‘mangroove’ காடுகள் நிறைந்திருக்கும்.
இங்கு அறிய வகை பறவைகள் வாழ்கின்றன. இது சில சமயம் ஆழாமான இடமாக மாறிவிடும். இதனால் கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு இங்கு செல்லவேண்டும். அதிகாலை இங்கு வந்தால் சூரியன் உதிப்பது மிகவும் பிரகாசமாகவும் அழகாகவும் தெரியும். இங்கு நாம் விளையாடவும், கடற்கரை ஓரமாக நடந்து செல்லவும், கடல் உணவுகளை உண்ணவும், வித விதமான புகைப்படங்களை எடுக்கவும் முடியும்.
சிறந்த நேரம்
இந்த இடத்தை நாம் பார்ப்பதற்கு சிறந்த நேரம் எது என்றால் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை ஆகும். இந்த நேரத்தில் மழை, வெயில் என அனைத்தையும் பார்த்துவிடலாம்.
இந்த இடம் ‘Rue De La marine’ அருகே அமைந்துள்ளது. இந்த மடத்தை 1926ஆம் ஆண்டு Sri Aurobindo என்கிற (தத்துவவாதி, கவிஞர்) நிறுவினார். அமைதியை விரும்பும் நபர்கள் இங்கு சென்று தியானம் மேற்கொள்ளலாம்.
இந்த இடத்தில் ஒரு நூலகம் அமைந்துள்ளது. அங்கு இந்த மடத்தை பற்றியும், Aurobindo எழுதிய நூல்களும் உள்ளன. இதை தவிர இங்கு ஒரு விநாயகர் கோவில் ஒன்றும் உள்ளது. அங்கு சென்று வழிபடவும் செய்யலாம்.
உலகில் உள்ள அனைவரும் ஜாதி, மதம், இனம், நாடு போன்றவற்றை கடந்து ஒற்றுமையாக வாழ உலக அளவில் இயங்கும் ஒரு குழுவால் இந்த இடம் கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு பாண்டிச்சேரியில் இருந்து செல்ல 15 நிமிடங்கள் ஆகும்.
சிறந்த நேரம்
நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை சுற்றி பார்க்க சிறந்த இடம் ஆகும். அப்போது காற்று நன்றாக இருக்கும் என்பதால் உங்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
இது பாண்டிச்சேரியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. Aurobindo அவர்களின் சீடரான Mirra Alfassa என்ற பெண் இந்த இடத்தை 1968 ஆம் ஆண்டு துவக்கினார்.
இந்த இடம் என்பது உலகில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த சிறு சிறு அமைதி குழுக்களுக்கு வீடாக இருந்துவருகிறது. இங்கு அனைவரையும் வரவேற்பார்கள்.
முக்கிய இடங்கள்
இந்த இடத்திற்கு என்று தனியாக எந்த ஒரு கடவுளும் இல்லை. அமைதியை விரும்பும் நபர்கள், இயற்கை ஆர்வலர்கள் இங்கு வந்து செல்லலாம்.
Pondy Bazaar
வணிகம் மற்றும் பொருட்கள் வாங்க ஏற்ற இடம் இந்த பாண்டி பஜார் ஆகும். இங்கு பல கடைகள் இருப்பதால் நமக்கு வேண்டிய கலை பொருட்கள், துணிகள், பொம்மைகள் போன்றவற்றை குறைந்த விலையில் வாங்கலாம். இங்கு சாலை உணவகங்களும் இருப்பதால் உணவு விரும்பிகளுக்கு இந்த இடம் நிச்சயம் பிடிக்கும்.
புதுச்சேரி நகரத்தின் அடையாளமாக இந்த காந்தி சிலை உள்ளது. இந்த சிலை புதுச்சேரியில் 1995 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. மகாத்மா காந்தி முன்னோக்கி நடப்பது போல இந்த சிலை உள்ளது.
இந்த இடம் முக்கியமான இடங்களில் ஒன்றாக இருப்பதால் இங்கு எப்போதும் முக்கியமான நிகழ்வுகள், நிகழ்ச்சிகள், விழாக்கள் போன்றவை நடைபெறும்.
புதுச்சேரி நகரில் எந்த ஒரு விஷயம் புதிதாக தொடங்கப்பட்டாலும் இந்த சிலைக்கு அருகில் தொடங்கப்படும். இங்கு அருகில் வணிக இடங்கள், சிறு கடைகள் போன்ற பல உள்ளன. நாம் அங்கு சென்று பொருட்களை வாங்கலாம்.
இந்த தாவரவியல் பூங்கா 1826 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு சுற்றி பிரெஞ்சு கட்டிடங்கள் நிறைந்துள்ளன. ஒரு நேரத்தில் இந்தியாவில் இருக்கிறோமா? அல்லது பிரான்ஸ் நாட்டில் இருக்கிறோமா? என்ற சந்தேகம் கூட உங்களுக்கு ஏற்படும்.
22 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தோட்டம் 1500 வகைகளான தாவரங்களை கொண்டுள்ளது. இதில் பல இந்திய மற்றும் வெளிநாட்டு தாவரங்கள் ஆகும். இந்த தாவரவியல் பூங்கா தென் இந்தியாவின் மிகசிறந்த பூங்காக்களில் ஒன்றாக உள்ளது.
புதுச்சேரி நகரத்தின் அடையாளமாக இந்த கோவில் உள்ளது. இந்த கோவில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னாள் கட்டடப்பட்டது. இந்த கோவில் புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு எதிரில் அமைந்துள்ளது. புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.
இந்த பழைய கலங்கரை விளக்கம் மஹாத்மா காந்தி சிலைக்கு எதிரில் உள்ள கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. இது 1836 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பின்னர் மீண்டும் 1970 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. இந்த 29 மீட்டர் உயரம் உள்ள கலங்கரை விளக்கம் தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த லைட் ஹவுஸ் மீது 10 மாடிகள் ஏறினால் உச்சியில் மொத்த புதுச்சேரி நகரத்தையும் காணலாம். இங்கு நுழைவு கட்டணம் 10 ரூபாய் ஆகும். காலை 8 மணிமுதல் மாலை 5.30 மணிவரை இது திறந்திருக்கும்.
Rock Beach
புதுச்சேரி என்றால் நினைவிற்கு வருவது இந்த பாறைகள் நிறைந்த Rock Beach ஆகும். இங்கு நாம் மாலை நேரத்திலும் காலை நேரத்திலும் செல்வதற்கு சிறப்பாக இருக்கும். இந்த இடத்தை சுற்றி கடைகள், உணவகங்கள், அருங்காட்சியகம் போன்றவை உள்ளன.
ஆனால் இங்கு நாம் குளிக்க முடியாது. பாறைகள் நிறைந்துள்ளதால் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு கடற்கரை ஓரமாக கான்க்ரீட் சாலை இருப்பதால் சுலபமாக நடந்து செல்லலாம்.
பிரெஞ்சு அருங்காட்சியகம்
இங்கு உள்ள பிரெஞ்சு அருங்காட்சியகம் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இது 1937 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு பழைய காலத்து போர்களில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், முன்பு இருந்த பிரெஞ்சு அரசின் பொருட்கள் என பல வைக்கப்பட்டுள்ளன.
மேலும் பல்லவர்கள், சோழர்கள் காலத்து பொருட்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. திங்கள் தவிர மற்ற அனைத்து நாட்களும் இது திறந்திருக்கும். பாண்டிச்சேரி சென்றால் இந்த இடத்தை நிச்சயம் காணுங்கள்,
Basilica Sacred heart of jesus
பிரெஞ்சு காலத்தில் கட்டப்பட்ட இந்த தேவாலயம் 1908 ஆம் ஆண்டு கிறித்தவ பாதிரியார்களால் நிறுவப்பட்டது. இங்கு பழங்காலத்து கதவுகள், ஜன்னல்கள்,கண்ணாடிகள் இன்னும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
Immaculate Conception Cathedral
‘சம்பா கோவில்’ அல்லது ‘Saint paul கோவில்’என்று அழைக்கப்படும் இது இங்குள்ள தேவாலயங்களுக்கு எல்லாம் தாய் என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இது கட்டப்பட்ட ஆண்டு 1791 ஆகும். அப்போதிருந்து இப்போது வரை பராமரிக்கப்பட்டு இன்னும் சிறப்பாகவே உள்ளது.
இந்த தேவாலயம் உயிர்ப்பித்து போர்களில் பல முறை தகர்க்கப்பட்டு மீண்டும் மீண்டும் நான்காவது முறையாக தற்போது கட்டப்பட்டுள்ளது. இது போர்ச்சுகீஸ் காலத்து டிசைன் மற்றும் ஸ்டைல் கொண்டுள்ளது.
Bharathi Park
வெள்ளையர்களிடம் தப்பித்து பாண்டிச்சேரியில் வசித்த காலத்தில் பாரதியார் இந்த குயில் தோப்பில் அடிக்கடி வந்து நண்பர்களுடன் உரையாடுவது வழக்கம். அந்த குயில் தோப்பு தற்போது பாரதி பார்க் என்று பெயர் மாற்றப்பட்டு சுற்றுலா இடமாக மாற்றப்பட்டுள்ளது.