புலியே நீ களம் வென்று தட்டு தோளை……
பூட்டிய இரும்பு கூட்டின் கதவு திறக்கப்பட்டது . உன்னை எலி என இகழ்ந்தவர்
நடுங்க புலியென புறப்பட்டு வா "என் தோழா !
நிலைப்பாடு
எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்....
சுதந்திரம் ! சமத்தும் !! சகோதரத்துவம் !!!ஓங்கவேண்டும்....
சமூக நீதி…!பொருளாதார நீதி..!!அரசியல் நீதி... நிலைத்திட வேண்டும்!!!....
அடிப்படை கொள்கைகள்:
* இடஒதுக்கீடு
* அம்பேத்காரியம்
*பெரியாரிசம்
*பெண் விடுதலை
*சிறுபான்மையின் உரிமை
*சாதி கலப்பு திருமணத்தை ஆதரித்தல்,
*சாதி மத ஒழிப்பு
*வர்க்க வேறுபாட்டு ஒழிப்பு
*பெண்ணுரிமைக் காப்பு
* மூட நம்பிக்கை ஒழிப்பு
*மது ஒழிப்பு
*தீண்டாமை ஒழிப்பு
*பெண்ணடிமை ஒழிப்பு
* புரட்சியாளர் அம்பேத்கார், தந்தை பெரியார்,காரல்மார்க்ஸ்,ஆகியோரின் வழிநின்று ஒடுக்கப்பட்டோர் தலைமையில் தளம் அமைப்போம்.
*ஒரு விவசாயி இந்த நாட்டை ஆள வேண்டும்.
*வீட்டிற்கு ஒரு உறுப்பினர் உருவாக்குதல்,
*இளைஞர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வையும் தொண்டு உணர்வையும் ஏற்படுத்துதல்,
*இளைஞர்களுக்கு வழிவிட்டு முதியவர்கள் ஆலோசனை வழங்க வேண்டும்.
* அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் சலுகைகள் அவர்களிடம் சென்றடைய உதவ வேண்டும்.
*சுய மரியாதையும், தனி மனித மாண்பும் காக்கப்பட வேண்டும்.
*லஞ்சம், ஊழல் ஒழிக்க முயற்ச்சி செய்யப்பட வேண்டும்.
*அடி தட்டு மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தல்.
*மனித உரிமை மீறல்களை தடுத்தல் மற்றும் இது குறித்து விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துதல்
* அனைவருக்கும் உணவு மற்றும் அடிப்படை சட்ட விழிப்புணர்வு
*ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஜே.பி.கே 10,000 உறுப்பினர்கள் சேர்த்தல்.
*18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களை ஜனநாயக புலிகள் கட்சியில் பொருப்பாளர்களாக கொண்டு வரவேண்டும்.
*12ம் வகுப்பு வரை பெண்களுக்கு கட்டாய இலவச கல்வி மற்றும் UG/PG உயர் கல்வி இவற்றின் செலவை அரசே இலவசமாக வழங்க வேண்டும்.
*ஒருவர் இரண்டு முறைக்கு மேல் ஊராட்சி மன்றம், ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, சட்டமன்ற மேலவை, நாடாளுமன்றம், மாநிலங்களவை, உறுப்பினர் தலைவர், அமைச்சர், முதலமைச்சர், பிரதமர் உட்பட பதவிகளை வகிக்ககூடாது..
* மகளிருக்கு 50% பொருப்புகள் ஜே.பி.கே வில் வழங்கப்பட வேண்டும்.
*16 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப் பெற வேண்டும்.
* இலவசம் தவிர்க்கப்பட வேண்டும். ஊழல் ஒழிக்கப்பட வேண்டும்.
*இந்திய இறையாண்மையை மதிக்க வேண்டும்.
* சமூக நல்லிணக்கத்தோடு வாழ வேண்டும் என்பதே "ஜே பி கே யின் குறிக்கோளாகும்.
*படித்தவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதலானோர் அரசியலும், பொதுவாழ்விலும் ஈடுபட வேண்டும். அப்போது தான் நாணயமான நேர்மையான அரசியல் மலரும்.
*ஜே.பி.கே ஆற்றி வரும் தொடர்ந்து மக்கள் பணி குறித்து பரப்புரை மேற்கொள்ளுதல்,
*மனித நேயம் காத்து ஏழை, எளியோர் நோய்வாய்பட்டோர், அனாதைகள் மற்றும் புறக்கணிக்கப்பட்டோருக்கு தொண்டு செய்தல்.
*முதியோர் கல்விக்கு ஊக்கமளித்தல்.
*புயல், வெள்ளம் மற்றும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுதல்.
*ஏழை, எளிய மக்களுக்கு உரிய மருத்துவ வசதி கிடைக்க பாடுபடுதல்,
*தீய பழக்க வழக்களிலிருந்து மக்களை விடுவிக்கவும் பாதுகாக்கவும் தக்க நடவடிக்கை எடுத்தல்.
*சிறைச்சாலையில் இருக்கும் ஏழை சகோதரர்களின் பிள்ளைகளின் கல்விக்கு உதவி செய்தல்.
*புரட்சியாளர் அம்பேத்கார், காரல் மார்க்ஸ், தந்தை பெரியார்,இரட்டைமலை சீனிவாசன், மேதைகளும் நிறைந்த நமது சிறந்ததலைவர்களின் வரலாற்றை இளைய சமுதாயத்துக்கு தெரியப்படுத்துவது.
பதவிக்கால வரம்பு :
ஊராட்சி மன்றம், ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, சட்டமன்றம்,மேலவை, நாடாளுமன்றம், மாநிலங்கள் அவை முதலியவற்றின் உறுப்பினர்தலைவர், அமைச்சர், முதலமைச்சர், பிரதமர் முதலான பதவிகளை ஒருவர்இரண்டு முறைக்கு மேல் வகிக்க கூடாது என முடிவெடுத்துள்ளது. இதனால் வாய்ப்புகள் பரவலாக்கப்படும். இளைஞர்களுக்கு முன்னுரிமையும் ஏற்படும்.
வாக்குரிமை:-
பதினாறு வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப் பெறவேண்டும் என்பது ஜனநாயக புலிகள் கட்சி கொள்கை. இது நடைமுறைக்கு வந்தால், அரசியலிலும், ஆட்சியிலும் இளமைத் துடிப்பும் இலட்சியப் பிடிப்பும் உடைய புது இரத்தம் பாய வாய்ப்பு அமையும்.
இலவச ஒழிப்பு:
மனித உழைப்பு என்பது தன்னம்பிக்கையும் எதனையும் தாங்கும் சக்தியினையும், உடல் வலிமையினையும் சோர்வின்மையினையும் தரவல்ல ஓர் அரிய மருந்து, இதனை ஊனமாக்குகின்ற வகையில் இலவசங்களைக் கொடுத்து மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படுகிறது.
இலவசங்களின் பேரால் மனித உழைப்பும் மக்கள் வரிப்பணமும் வீணடிக்கப்படாமல் பார்த்துக்கொள்வதோடு, அவை தனிமனித முன்னேற்றத்திற்கும் நாட்டு முன்னேற்றத்திற்கும் நல்ல முறையில் ஜே.பி.கே பார்த்துக் கொள்ளும்.
சமூக நல்லிணக்கம் :-
நாம் பிறப்பால் தமிழர்கள் நாட்டால் இந்தியர்கள்.இந்திய இறையாண்மையை மதிக்க வேண்டும்.
இந்திய ஒருமைப்பாட்டைக் கட்டி காக்க வேண்டும்.
மொழியால், இனத்தால், சமயத்தால், சாதியால் உயர்வு தாழ்வு பாராட்டக்கூடாது. மக்களைப் பிளவுப்படுத்தக் கூடாது. நாம் அனைவரும் சமம்.
இந்தியர்களாகிய நாம் அனைவரும் சமூக நல்லிணக்கத்தோடு வாழ வேண்டும் என்பதே ஜனநாயக புலிகள் கட்சியின் குறிக்கோளாகும்.
கல்வி :
தரமான கல்வியைத் தரவேண்டுமானால் கல்விச் செலவை அரசோ,தனியாரோ ஏற்றாக வேண்டும். தரமான கல்வி என்பது நல்ல ஊதியத்தோடு கூடிய தகுதி வாய்ந்த ஆசியர்களும், மாணவர்கள் படிப்பதற்கான நல்ல சூழ்நிலை கொண்டதுமான கட்டமைப்பு வசதியாகும்.
ஆனால் மக்களிடமிருந்து ஒட்டுப் பெறுவதை மட்டுமே நோக்காகக் கொண்டு தனியார் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கட்டணத்தை குறைக்கச் சொல்வதன் மூலம் பெற்றோர்களைத்தூண்டி விட்டுக் கல்விச் சாலைகளில் அமைதியில்லாச் சூழ்நிலையை அரசு ஏற்படுத்தி விடுகிறது.
இதற்க்குப் பதிலாகப் பள்ளி கல்லூரிகளில் படிக்கிற மாணவர்கள் வசதியற்றவர்களுக்கு அரசே கல்விச் செலவை ஏற்க வேண்டும் அல்லது உதவி தொகை வழங்க வேண்டும். இதன் மூலம் தரமான கல்வி பெற மாணவர்களுக்கு வழி ஏற்ப்படும் என்பது ஜே.பி.கே.வின் கருத்து.
வேலைவாய்ப்பு :
தரமான கல்வியும், தடையில்லா மின்சாரமும், அரசியல் தலையீடு இல்லாத் தொழிற்சாலைகளும் அதிகம் இருந்தால் இயற்கையாகவே வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
சுகாதாரம்:
நல்ல சுகாதாரத்தோடு வாழப் பள்ளி அளவிலேயே பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப் பெற வேண்டும்.
மாணவப் பருவத்திலிருந்து உடற்கூறும் சுகாதாரமும் நல்ல பண்புகளும் வற்புறுத்தப் பெற்றால் அவர்களுக்கு எதிர்க்காலத்தில் சுகாதாரம், மருத்துவம், செலவுகள் குறையும்.
மேலும் கிராமப்புற அரசு மருத்துவமனைகள் நல்ல சுற்றுப்புறச் சூழலிலும், திறமையான மருத்துவர்கள் மருத்துவமனையில் முழு நேரம் இருக்குமாறு மருத்துவமனையில் எக்ஸ்-ரே ஸ்கேன் கருவிகளும் இருக்க வேண்டும்.
கிராமப்புற மருத்துவமனையில் பயிற்சி பெற்ற செவிலியர் இருத்தல் வேண்டும். அவசரப் பேறுகால மருத்துவம் பார்ப்பதற்காக அவர்கள் சென்று வர வாகன வசதி ஒவ்வொரு கிராம மருத்துவமனையிலும் இருக்க வேண்டும்.
அவ்வாறே, நகர,மாநகர, அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைக்கு இணையாகத்தூய்மையாகவும், சுகாதாரமாகவும், நல்ல சுற்றுப்புறச் சூழல் கொண்டதாகவும்இருக்க வேண்டும்.
அரசு மருத்துவம் என்றாலே அங்கே வேலைபார்க்கும் மருத்துவர்கள் முதல் அடிநிலைப் பணியாளர் வரை நோயாளிகளிடம் எதற்கு எடுத்தாலும் காசு கேட்க்கும் நிலை ஒழிக்கப்பட வேண்டும்.
மருத்துவத் துணைக் கருவிகள்பழுதுள்ளதால் உடனடியாக சீர் செய்ய வேண்டும். அரசு உயர் அதிகாரிகளும்,அரசியல் தலைவர்களும், அரசு மருத்துவமனைகளில் மருத்துவ உதவி பெறத்தக்க வகையில் அறைகள் கொண்டிருக்க வேண்டும்.
கிராமம் :-
கிராமம், நாட்டின் வளர்ச்சி கிராமங்களிலிருந்து தொடங்க வேண்டும்.அதாவது அரசு வருவாயில் செலவு போக வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 65% சதவீதம் கிராம வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
ஐந்து ஆண்டுக் காலத்திற்கு நகரங்களைப் போல கிராமங்களையும் பராமரிப்பதற்கே செலவு செய்ய வேண்டும். அப்படி செய்கையில் கிராமங்களில் நல்ல சாலை வசதி, நல்ல பள்ளி கூடம், மருத்துவமனை வசதிகள் ஏற்படும்.
கிராமங்கள் தன்னிறைவு உடையனவாக மாற்றப்பட வேண்டும். அப்போதுகிராமங்களில் இருந்து நகருக்கு வருகிற மக்கள் தொகை குறையும். இதனால் நகருக்கு அருகில் உள்ள விளை நிலங்கள் எடுக்கப்பட்டு நகர விரிவாக்கம்செய்ய வேண்டிய தேவை அரசுக்கு ஏற்படாது.
விவசாயம் -
இந்தியாவில் 65% சதவீத மக்கள் விவசாயிகள் ஆவர். அவர்களுக்கு சரியான வழிகாட்டுகிற வகையில் நவீன விஞ்ஞான முறையில் விவசாயக் கல்லூரிகளை நிறுவி, அவர்களுக்கு நவீன விஞ்ஞான முறையில் விவசாயப் பயிற்ச்சி அளிக்க வேண்டும்.
இப்பயிற்சி பெற்றோரும் விவசாயப் பட்டதாரிகளும் குறிப்பிட்ட ஒரு சில கிராமங்களுக்குப் பொறுப்பேற்க செய்து விவசாய உற்பத்தி பெருக வழிவகை காண வேண்டும். அவர்கள் மண்ணின் தரம் அறிந்து அதில் விளையும் பயிர்கள் எவை எவை எனத் தெரிந்து பயிரிட வேண்டும்.
தக்க விதை, தேவையான நேரத்தில் உரம் முதலியவற்றை ஏற்பாடு செய்து விவசாயத்தில் அவர்களுக்கு உற்ற நண்பனாக இருந்து விளைச்சலைப் பெருக்க விவசாயப் பட்டதாரிகள் உதவ வேண்டும்.
அப்படி விளையும் பொருள்களுக்குச் சரியான விலை கிடைக்கும் வரை விளைப் பொருளைச் சேமித்து வைக்க தக்க பண்டக சாலைகளும் குளிர்சாதன வசதி கொண்ட சேமிப்பு கிடங்குகளும் அமைக்கவேண்டும்.
அவர்களுக்குத் தமது பொருள் விற்க்கும் வரை இடைக்காலநிவாரணமாக பொருள்களுக்குத் தகுந்தவாறு வட்டியில்லாக் கடனுதவி செய்ய உறுதிப்படுத்தினால் விவசாயக் கடன் தள்ளுபடியோ மற்ற இலவசங்களோ அவர்கள் எதிர்பார்க்க மாட்டார்கள்.
இலட்சியம்:
முதலமைச்சராக கடந்த 75 ஆண்டுகளாகத் தமிழகத்தின் முதலமைச்சராகத் தொடர்ந்து திரைப்படத் துறையினரே இருந்து வருகின்றனர். தமிழகத்தின் பெரும்பான்மையினரான சாதாரண மனிதர் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும்.
நீர்நிலைகள் :-
நீர்நிலைகளைப் பராமரிக்கும் பொருப்பு அந்தந்த ஊராட்சி ஒன்றியத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
ஏரி, குளம், குட்டை, கால்வாய், முதலான செலவுகளை நீர்நிலைகளைத் தூர்வாருதலும், ஆழப்படுத்தலுமான அரசுப்பொறுப்பின் மூலமாக ஊராட்சி ஒன்றியத் தலைவர் மேற்பார்வையில் கொடுக்க வேண்டும்.
ஆங்காங்கே இருக்கின்ற ஆறுகளின் மூலமாக ஏரிகள் இணைக்கப்பட்டுக் கடலில் நீர் சென்று வீணாவதைத் தடுக்க வேண்டும்.
தென்னக நதிகளை வங்கியில் கடன் பெற்று இணைக்கின்ற செயலை முதல்வேலையாகச் செய்ய வேண்டும்.
சட்டம் ஒழுங்கு :
கொலையும், கொள்ளையும், ஊழலும் அன்றாட நிகழ்ச்சிகளாக ஆகிவிட்டன. சட்டத்துறையிலும், காவல் துறையிலும், அரசியல் தலையீடு இருத்தல் கூடாது. அவ்விரு துறைகளும் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கவேண்டும். அப்போது தான் சட்டம் ஒழுங்கு செம்மையாக இருக்கும்.
ஊழல் தான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. ஊழல் புரிந்தவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும். தண்டனைமட்டுமல்லாது, ஊழல் பணத்தை அரசு நிதியில் சேர்க்க வேண்டும். அந்நிதியில் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
மகளிர் நலம் :-
மக்கள் தொகையில் ஆணுக்குச் சமமாய்ப் பெண்கள் உள்ளனர். அவர்களுக்கு உரிய இடம் சமூகத்தில் பணிகளில், பொது வாழ்க்கையில் இன்னும் அளிக்கப் பெறவில்லை. அவர்கள் கல்லூரிப் படிப்பு வரைக் கட்டணம் இல்லாமல் கற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
அரசியல் ஆட்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பெற வேண்டும்
முதியோர் நலம் :-
முதியோருக்கு மருத்துவ வசதிகள் முழுமையாக அளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்களுடைய பாதுகாப்பான நிம்மதியான வாழ்க்கைக்கு உறுதி அளிக்கும் முதியோர் காப்பு இல்லங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
வீரவேற்புரை