Govt. Primary School
மூலப் பெயரும் அதன் ஆழமான பொருளும்
இன்று நாம் "ஈத்தவிளை" என்று அழைக்கும் நம் கிராமத்தின் உண்மையான, பழம்பெயர் "ஈந்தவிளை" என்பதாகும். இது இரண்டு அழகான தமிழ்ச் சொற்களின் சேர்க்கையாகும்:
ஈந்த: "ஈதல்" என்ற தூய தமிழ்ச் சொல்லின் பொருள் "கொடுத்தல்" அல்லது "ஈகை". பிறருக்கு உதவும் உயர்ந்த குணத்தைக் குறிக்கும் சொல் இது. "ஈந்த" என்பது, அத்தகைய ஈகைக் குணத்துடன் கொடுத்து உதவிய செயலைக் குறிக்கிறது. மேலும் படி
ஈத்தவிளை வரலாறு
ஈத்தவிளையின் கதை என்பது இருண்ட காலத்திலிருந்து ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய ஒரு பயணமாகும். ஒரு காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகர் பத்மநாபபுரத்திற்கு மிக அருகில் அமைந்திருந்தபோதிலும், ஈத்தவிளையின் தமிழ் பேசும் மக்கள் சொல்லொணாத் துயரங்களையும், கடுமையான சமூகக் கட்டுப்பாடுகளையும், மொழிப் பாகுபாட்டையும், பொருளாதார நெருக்கடியையும் சந்தித்தனர்; அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டனர். மேனாட்டு அருட்தொண்டர் மீட் ஐயர் மற்றும் அவரைப் பின்தொடர்ந்தவர்களின் தன்னலமற்ற, தியாகமிகு சேவையால் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அவர்களின் அயராத உழைப்பின் விளைவாக, இன்று ஈத்தவிளை கல்வி, பொருளாதாரம், பண்பாடு மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் என அனைத்து நிலைகளிலும் பெரும் முன்னேற்றம் கண்டு, ஒரு முன்மாதிரி கிராமமாகத் திகழ்கிறது. மேலும் படி
ஈத்தவிளை: ஒரு கண்ணோட்டம்
ஈத்தவிளை, தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில், கல்குளம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமம் ஆகும். இது கோதநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்டது.
அமைவிடம் மற்றும் தொலைவு:
மாவட்டத் தலைநகர் நாகர்கோவில்: 39 கி.மீ.
அருகிலுள்ள நகரம் தக்கலை: 5 கி.மீ.
மாநிலத் தலைநகர் சென்னை: 723 கி.மீ.
அஞ்சல் குறியீட்டு எண்:
ஈத்தவிளையின் அஞ்சல் குறியீட்டு எண் 629166 ஆகும்.
இதன் தலைமை அஞ்சல் அலுவலகம் மேக்காமண்டபம் ஆகும்.
அருகிலுள்ள நகரங்கள்:
மேக்காமண்டபம்
தக்கலை
அழகியமண்டபம்
மொழி:
இங்கு வசிக்கும் மக்களின் பிரதான மொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகும்.
முக்கிய இடங்கள் / வாக்குச் சாவடிகள்:
அரசு தொடக்கப் பள்ளி, ஈத்தவிளை
சி.எஸ்.ஐ மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, ஈத்தவிளை
எஸ்.கே.வி நடுநிலைப் பள்ளி, முட்டைக்காடு
ஈத்தவிளையை எப்படி அடைவது?
ரயில் மூலம்:
ஈரணியல் தொடருந்து நிலையம் ஈத்தவிளைக்கு மிக அருகிலுள்ள ரயில் நிலையமாகும்
பேருந்து மூலம்:
நாகர்கோவிலிருந்து: பேருந்து எண்கள் 13N, 11L
தக்கலையிலிருந்து: பேருந்து எண்கள் VSN, SPR, RPJK, 13K