26/2018
26/2018
2018 / 26 சுற்றறிக்கையின் பிரகாரம் பாடசாலைக்கும் நிதி கிடைக்கும் மூலங்கள்
7.0 பாடசாலை நிதி மூலங்கள்
7.1 பாடசாலைக் கல்வி அபிவிருத்திக்கான நிதி மூலங்களிடம்:
அ. மத்திய அரசின் மற்றும் மாகாண சபையின் நிதி
-கல்வி அமைச்சு
-கல்வி சேவைகள் அமைச்சு
-மாகாண சபை
-மாகாணக் கல்வி அமைச்சு
-மாகாணக் கல்வித் திணைக்களம்
S1 : இணைந்த நிதியம் / மாகாண சபை நிதியம்
S2 : பலபகுதியினர் மற்றும் இருபகுதியினர்களிற்கிடையிலான ஓர் உடன்படிக்கையின் கீழ் செயற்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் அல்லது செயற்றிட்டங்களில் இருந்து பெறப்படும் நிதி
S3 : அரச துறையின் ஏனைய நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் பொதுத் திறைசேரி ஃ மாகாண திறைசேரியின் அங்கீகரிக்கப்பட்ட நிதி
S4 : மத்திய அரசின் மற்றும் மாகாண சபை ஒதுக்கீட்டின் கீழ் பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட கற்றல் அபிவிருத்தி மானியம், பண்புசார் உள்ளீட்டிற்காக மற்றும் உயர் மட்டக் கற்றல் செயற்பாட்டிற்காக கிடைக்கும் நிதி
ஆ. வெளிநிதி
S5 : அரசினால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரச சார்பற்ற அமைப்புக்களில் இருந்து கிடைக்கும் நிதி உதவி.
S6 : பெற்றோர்கள் ஃ நலன்விரும்பிகள் ஃ பழைய மாணவர் சங்கத்தின் சுயவிருப்பின் பேரில் மட்டும் வழங்கப்படும் அன்பளிப்புகள்.
இ. ஏனைய மூலங்களில் இருந்து கிடைக்கும் நிதியம்
S7 : பாடசாலைக் காணி மற்றும் கட்டடங்களிலிருந்தும் பிற மூலங்களில் இருந்தும் கிடைக்கும் பணம்.
S8 : பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் அங்கத்தவர்களிடம் கிடைக்கும் அங்கத்துவப் பணம்.
S9 : பாடசாலையின் பல்வேறுபட்ட செயற்பாடுகள் மற்றும் செயற்றிட்டங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ளும் வருமானம் ( உ-ம் : கல்விக் களப்பயணம், ஆசிரிய செயற்றிட்டம், மாணவர் செயற்றிட்டம், மதிப்பீடு, விளையாட்டு, பாட இணைச்செயற்பாடு மற்றும் பிரிதும் செயற்பாடுகள் முதலியன.
S10 : பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் தீரமானிக்கப்படும் ஏனைய நிதிகள்