Dr.M.KAMARAJ PT
MPT(Neuro).,PGDMT(Orthopaedic Manual Therapy).,M.Dip(Acu).,MIAP
Dr.M.KAMARAJ PT
MPT(Neuro).,PGDMT(Orthopaedic Manual Therapy).,M.Dip(Acu).,MIAP
Dr.M.KAMARAJ PT, MPTNeuro).,PGDMT(Orthopaedic Manual Therapy).,M.Dip(Acu).,DSMS(Siddha)., MIAP is the Founder And President of A.K Physiotherapy Clinic,ILAYANGUDI and Founder & General Secretory of PHYSIO VISION FOUNDATION , Tamilnadu,INDIA. He has completed his Bachelor degree Physiotherapy from Dr.M.G.R Medical university (Matha College of physiotherapy, Manamadurai);Masterof Physiotherapy in Neurology from Vinayaga Missions university,SALEM, Post graduate Diploma in Manipulative therapy from Vinayaga Missions university, Salem;Post graduate Master Diploma in Acupuncture from Global paramedical college,Madurai and Completed Diploma in siddha medicine from Bharath sevak Samaj(BSS), INDIA.
A.K Physio Clinic are a private provider of physiotherapy treatment and rehabilitation clinic. Our aim Health for All.A.K Physio Clinic provides World Class treatment and rehabilitation solutions to every patient through highly effective techniques, producing rapid improvement to those suffering from soft tissue and joint injuries.
வளர்ந்துவரும் மருத்துவத் துறைகளில் மிக முக்கிய துறையாக கருதப்படுவது இயன்முறை மருத்துவம் எனப்படும் பிசியோதெரபி ஆகும். உணவே மருந்து என்ற காலம் மாறி! மருந்தே உணவாகி போனது. மருந்து இல்லாமல் மிக எளிமையாக சிறந்த முறையில் எத்தகைய வலி, வாதங்களையும் சரி செய்யக்கூடிய ஒரு சிறந்த மருத்துவ முறையாக கருதப்படுவது இயன்முறை மருத்துவம் எனப்படும் பிசியோதெரபி. இத்தகைய சிகிச்சை நகரங்களில் எல்லோருக்கும் கிடைக்கின்றது. ஆனால் கிராமங்களில் இந்த மருத்துவம் கிடைப்பது கிடையாது. இதனை பூர்த்தி செய்யும் விதமாக பல கிராமங்களை உள்ளடக்கிய இளையான்குடியில் பிசியோதெரபி கிளினிக் அமைத்து பலதரப்பட்ட மக்களுக்கும் சிகிச்சை அளித்து வருபவர் Dr.M. காமராஜ் PT . இவர் பிசியோதெரபி யில் இளங்கலை(BPT) பட்டமும், முதுகலைப்(MPT) பட்டமும் பெற்றவர். மேலும் உடல் கட்டமைப்பு சிகிச்சை எனப்படும் Manual Therapy(PGDMT) என்ற மருத்துவ படிப்பையும் படித்தவர். இத்தகைய படிப்புகள் மற்றும் மருத்துவ நுண்ணறிவு மூலமாக பல்வேறு நோய்களை மருந்து மாத்திரைகள் இல்லாமல், நோயாளிகளின் பிரச்சனைகளை மருத்துவ அறிவியல் முறையில் கண்டறிந்து, மிகச் சிறப்பாக மருத்துவப் பணியாற்றி வருகின்றார். இவர் இளையான்குடியை
சுற்றியுள்ள பல கிராமங்களுக்கும் சென்று பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகிறார். இவர் பல்வேறு எலும்பு மூட்டு மற்றும் நரம்பியல் நோய்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். இவரிடம் சிகிச்சை பெறுபவர்கள் அதிக அளவில் பூரண குணம் பெற்றுள்ளனர். சிகிச்சைக்கு பணமில்லாத மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு இலவசமாகவும் சிகிச்சை அளித்து வருகிறார். அதே நேரத்தில் மனிதாபிமான அடிப்படையில் பாதி பணம் வாங்கிக் கொண்டும் சிகிச்சை அளித்து வருகிறார். தீராத நோய்களுக்கு இவரை நாடினால் குணம் நிச்சயம்.
இவர் பிசியோதெரபி மருத்துவர்களுக்கு தொடர் கல்வி கற்பிக்கவும்(CME), அவர்களை ஊக்குவிக்கவும், சிறந்த பிசியோதெரபி மருத்துவர்களை உருவாக்கவும், பிரத்தியேகமாக தமிழக அளவில் திருச்சியில் Physio vision Foundation என்ற அமைப்பினை நிறுவி, இயன்முறை மருத்துவர்களின் மேம்பாட்டிற்காக பணி செய்து வருகிறார். இந்த அமைப்பின் வாயிலாக பல்வேறு மருத்துவ தொடர் வகுப்புகளை நடத்திவருகிறார்.
தமிழ்நாடு இயன்முறை மருத்துவர்கள் பெருமன்றத்தின் (FORUM FOR PHYSIOTHERAPISTS-FPT) சிவகங்கை மாவட்ட சேர்மன் (Chairman) ஆகவும், இந்திய பிசியோதெரபி மருத்துவர் சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.இவர் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாம்களை நடத்திவருகிறார்.
திசைகள் மாணவர் வழிகாட்டி அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்து, திசைகள் அமைப்பின் செயல்பாடுகளில் பங்கெடுத்து வருகிறார். இலவச கல்வி வழிகாட்டல் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வும், கல்வி வழிகாட்டல் நிகழ்வின் பேச்சாளராகவும் இருந்து வருகிறார். பல்வேறு சமுதாயப் பணிகளில் இவரது பங்கு அளப்பரியது. ஏற்கனவே திசைகள் மாணவர் வழிகாட்டி அமைப்பு வழங்கிய இளம் சாதனையாளர் A.P.J அப்துல்கலாம் விருதினைப் பெற்றுள்ளார். பிசியோதெரபி துறையில் சிறப்பாக
செயல்பட்டதற்காக ஈரோடு, நந்தா பிசியோதெரபி கல்லூரி வழங்கிய விருதினைப் பெற்றுள்ளார். சேலம் ,VINAYAKA MISSION UNIVERSITY வழங்கிய சிறந்த Alumni Award பெற்றுள்ளார். இயன்முறை மருத்துவர்களின் முன்னேற்றத்திற்காக, துறையின் நலனிற்காக நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்துள்ளார்.பிசியோதெரபி மருத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மீடியாக்களிலும், பத்திரிகைகளிலும் பல்வேறு மருத்துவ கட்டுரைகளை எழுதியுள்ளார். பொது மக்களிடையே பிசியோதெரபி மருத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.பிசியோதெரபி மருத்துவத்துறையின் ஒரு மைல்கல் என்று சொன்னால் அது மேனுவல் தெரபி(Orthopaedic Manual Therapy) சிகிச்சையாகும். இந்த சிகிச்சையில் புலமை பெற்று,தண்டுவட பிரச்சினைகள்(முதுகு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி), எலும்பு மூட்டு மற்றும் நரம்பியல் வலிகளை மிக இலகுவாக குறைந்த நாட்களிலேயே சரி செய்து நோயாளிகளின் துயர் துடைப்பதில் முதன்மை வகிக்கிறார். மேலும் பிசியோதெரபி யில் நரம்பியல் துறையை தேர்ந்தெடுத்து படித்து, சில தீர்க்கமுடியாத நரம்பியல் நோய்களான paraplegia, Parkinson disease, Hemiplegia, quadriplegia,Cerebral palsy, Multiple sclerosis போன்ற நோய்களின் நிலைகளை அறிந்து, தொடர் பிசியோதெரபி வாயிலாக சரி செய்து அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வருகிறார்.
இத்தகைய மகத்தான சிகிச்சை அளித்து மருத்துவ தொண்டாற்றி வரும் இவர் A.K பிசியோதெரபி கிளினிக் ,பிசியோ விஷன் பவுண்டேஷன் மற்றும் அறந்தாங்கி திசைகள் மாணவர் வழிகாட்டி அமைப்பின் மூலமாக முறையே மருத்துவ சேவை, சமூக சேவை செய்து வருகிறார். இவர் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துவோம்! மருத்துவரை A.K பிசியோதெரபி கிளினிக், 28, பெருமாள் கோவில் தெரு, இளையான்குடி, சிவகங்கை மாவட்டம் என்ற முகவரியிலும். செல்:9894707132 என்ற மொபைல் எண்ணிலும் , drkamarajphysio@gmail.com என்ற இமெயில் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். பிசியோதெரபி மற்றும் மறுவாழ்வு துறையில் மகத்தான சேவை செய்து வரும் இவர்களைப் போன்றவர்களை வாழ்த்துவோம்!