உதவி
LMS பயன்படுத்த ஆரம்பித்தல்
LMS பயன்படுத்த ஆரம்பித்தல்
LMS இனுள் உழ் நுழைவதற்கு தங்களிடம் username, password ஆகியன இருத்தல் வேண்டும்.
1. உலாவி (உதாரணம் Google Chrome) ஒன்றினை இயக்கி http://lms.jfn.ac.lk/lms/ என்ற தளத்திற்கு செல்லவும்.
2. வலது பக்க மேல் மூலையில் காணப்படும் Login இன் மேல் சொடுக்கவும் (click)
3. தங்களுக்குரிய username மற்றும் password என்பவற்றை வழங்கி, Login என்ற பொத்தானின் மேல் சொடுக்கவும்
4. பொதுவாக முதல் முறை உள் நுழையும்போது கடவுச்சொல்லை மாற்றும் படி வேண்டப்படுவீர்கள.
5. Continue
தற்போது LMS இனை பயன்படுத்த ஆரம்பிக்கமுடியும். எனினும் முதல் முறை பயன்படுத்த ஆரம்பிக்க முன்னர் தங்கள் தொடர்பான விபரங்களில் தவறுகள் ஏதேனும் உள்ளனவா என சரிபாருங்கள், முக்கியமாக தங்கள் மின்னஞ்சல் முகவரி.
விபரங்களை சரிபார்ப்பதற்கு பின்வரும் ஒழுங்கில் செயல்படுக.
1. திரையின் வலது பக்க மேல் முலையில் வட்ட வடிவ பொத்தான் காணப்படும். அதன் வலது பக்கத்தில் சிறிய முக்கோணம் ஒன்று காணப்படும். அதன் மேல் சொடுக்குக.
2. தோன்றும் சிறு பகுதியில் Preferences இனை தெரிவு செய்க.
3. திரையில் User Account என்ற பகுதி காணப்படும். அதனுள் Edit profile இனை தெரிவுசெய்க.
4. திரையில் தங்கள் தொர்பான விபரங்கள் தோன்றும். அதில் தங்கள் பயன்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கவும். பிழை இருப்பின் திருத்தி Update profile என்ற பொத்தானில் சொடுக்கவும்.
கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளல்
திரையின் இடது பக்கத்தில் காணப்படும் Navigation என்ற பகுதியை அவதானிக்குக. அதனுள் My courses இனுள் தாங்கள் தற்போது கற்றுக்கொண்டிருக்கும் பாட அலகுகளை அவதானிக்கமுடியும். தேவையான பாட அலகில் சொடுக்கி பாடப்பகுதிக்குள் நுழையமுடியும்
மின்னஞ்சல் முகவரியினை மாற்றுதல்
கடவுச் சொல்லினை மாற்றுதல்